என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஆண்டிபட்டி தாசில்தாரிடம் மனு அளித்த சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன்
கொரோனா பரிசோதனைக்கு பயந்து வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்த வேட்பாளர்
By
மாலை மலர்30 April 2021 8:58 AM GMT (Updated: 30 April 2021 8:58 AM GMT)

கொரோனா பரிசோதனைக்கு பயந்து வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க மாட்டேன் என சுயேட்சை வேட்பாளர் ஆண்டிபட்டி தாசில்தாரிடம் மனு அளித்தார்.
ஆண்டிபட்டி:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள வரும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து அதற்கு சான்று வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்தல் ஆணையம் அறித்துள்ளது.
ஆண்டிபட்டி அருகே உள்ள அமச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். ஆட்டோ டிரைவர். இவர் இத்தொகுதியில் சுயேட்சையாக கரும்பலகை சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகரனிடம் மனு ஒன்றை அளித்தார்.
அதில் நான் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்ல மாட்டேன். வீட்டில் இருந்தபடியே தேர்தல் விபரங்களை தெரிந்து கொள்கிறேன். வெற்றி பெற்றால் கொரோனா பாதிப்பு குறைந்ததும் அதிகாரிகள் குறிப்பிடும் நாளில் எனது சான்றிதழை பெற்று கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Next Story
×