என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

விருத்தாசலம் தொகுதி
பாமக- காங்கிரஸ்- பிரேமலதா விஜயகாந்த் களம் இறங்கியுள்ள விருத்தாசலம் தொகுதி கண்ணோட்டம்
பாமக- காங்கிரஸ் கட்சிகள் நேருக்குநேர் மோதும் நிலையில், தேமுதிக சார்பில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா களம் இறங்குகிறார்.
அதிமுக கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் ஜே. கார்த்திகேயன் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் களம் இறக்கப்பட்டுள்ளார். ஐஜேகே சார்பில் ஆர். பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதா, தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாமக வேட்பாளர் கார்த்திகேயன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 15,000
2. அசையும் சொத்து- ரூ. 21,59,879
3. அசையா சொத்து- ரூ. 20,73,539
காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 50,000
2. அசையும் சொத்து- ரூ. 8,37,581.29
3. அசையா சொத்து- ரூ. 1,03,00,000
தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 45,400
2. அசையும் சொத்து- ரூ. 5,98,29,056
3. அசையா சொத்து- ரூ. 32,08,00,000
தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் விருத்தாசலம் தொகுதி தமிழகத்தில் நட்சத்திர தொகுதியாக மாறியது.
பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ள விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் விருத்தாசலம் நகராட்சி, மங்கலம்பேட்டை பேரூராட்சி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் கருவேப்பிலங்குறிச்சி, ராஜேந்திரப்பட்டினம், டி.வி.புத்தூர், சத்தியவாடி, புதுக்கூரைப்பேட்டை, சின்னகண்டியாங்குப்பம், நறுமணம், ஆலடி, புலியூர், கோ.பவழங்குடி, பூவனூர், மு.பரூர், கர்ணத்தம், டி.மாவிடந்தல் உள்ளிட்ட 51 ஊராட்சிகள், கம்மாபுரம் ஊராட்சிய ஒன்றியத்தில் அம்மேரி,
கொள்ளிருப்பு, இருப்பு, முதனை, பெரியகாப்பான்குளம், முடப்புளி, நடியப்பட்டு, பாலக்கொல்லை, இருளக்குறிச்சி, மணக்கொல்லை, பழையப்பட்டினம், கொட்டேரி உள்ளிட்ட 12 ஊராட்சிகளும், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நல்லூர், இலங்கியனூர், வேப்பூர், பெரியநெசலூர், பூலாம்பாடி, கண்டப்பங்குறிச்சி, நகர், சேப்பாக்கம் உள்ளிட்ட 29 ஊராட்சிகளும் அடங்கியுள்ளன. இந்த தொகுதியில் அரிசி, கரும்பு, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாய தொழிலே பிரதானமாக நடந்து வருகிறது.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி 1952-ம் ஆண்டு முதல் இதுவரை 15 சட்டசபை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் உழவர் உழைப்பாளர் கட்சி ஒரு முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், அ.தி.மு.க 3 முறையும், தி.மு.க, தே.மு.தி.க தலா 2 முறையும், ஜனதா தளம், பா.ம.க தலா ஒரு முறையும், சுயேட்சையை ஒரு முறையும் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுத்து இப்பகுதி வாக்காளர்கள் சட்டசபைக்கு அனுப்பி உள்ளனர்.
வன்னியர், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், உடையார், குரும்ப கவுண்டர், யாதவர், பிள்ளைவால், ரெட்டியார், நாயுடு, செட்டியார் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள் பரவலாக வசிக்கும் தொகுதியாக உள்ளது. மேலும் முஸ்லீம், கிறிஸ்தவர்களும் அதிகளவு வசித்து வருகின்றனர்.
தொகுதி வளர்ச்சி பணிகளாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ரூ. 4 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது. பத்திர பதிவு துறை வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது, பரவளுர் மணிமுக்தாற்றில் மேம்பாலம், தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளன. நல்லூர்- இலங்கியனூர் மணிமுக்தாறு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கண்சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. வேப்பூர் தாலுகா மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் 14 வகுப்பறைகள், ஆய்வு கூடம், புதிய கழிவறைகள், கலையரங்கம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.
சாத்தியம், மன்னம்பாடி, புலியூர், சித்தூர், எடச்சித்தூர், ராஜேந்திரப்பட்டினம், வண்ணான்குடிகாடு, மு.பரூர், வேப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அமைந்துள்ள அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள், விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடங்கள் அமைத்தல், பல்வேறு கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் போர்வெல், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள், அம்மா பூங்கா, விளையாட்டு உடற்பயிற்சி கூடம் அமைத்தல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலமாக பல்வேறு சாலை வசதி பணிகள், குடிமராமத்து பணிகள், என்.எல்.சியில் இருந்து 450 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ள என்.எல்.சி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அ.தி.மு.க அரசு செய்து கொடுத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன்
ஆனால் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்கவில்லை. சூரியகாந்தி எண்ணை பிழியும் ஆலையை செயல்படுத்தவில்லை. விருத்தாசலத்தின் அடையாளமான நலிவடைந்த நிலையில் உள்ள செராமிக் தொழிற்பேட்டையை மேம்படுத்துவதற்கான எவ்வித அறிவிப்புகள் கூட வரவில்லை. முந்தரி ஆராய்ச்சி நிலையம், வேளாண் அறிவியல் நிலையம் இருப்பதால் வேளாண்மை பொறியியல் கல்லூரி கொண்டு வரவேண்டும், மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும். விருத்தாசலம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும், நகரில் அவ்வபோது நிலவும் போக்குவரத்து பிரச்சினையை சரிசெய்ய சாலையின் இருபக்கங்களிலும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்ற பொதுமக்களிள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
விருத்தாசலம் நகரை அழகுபடுத்த வேண்டும். மணிமுக்தாற்றை தூய்மை படுத்தி நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும், விருத்தாசலம் பகுதியில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க வேண்டும். மங்கலம்பேட்டையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும், புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என கடந்த 2016 சட்டசபை தேர்தலில் விருத்தாசலத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அவர் முதல்வராகியதும் விருத்தாசலம் மாவட்டமாகும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் மறைந்ததும் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி பல மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அறிவித்தார். அவ்வாறு விருத்தாசலத்தையும் மாவட்டமாக அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அடுத்த தேர்தலும் வந்து விட்டதால் இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் விருத்தாசலத்தை மாவட்டமாக்குவோம் என்ற வாக்குறுதியை கொடுத்து ஓட்டுகளை கவர்வதில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்
1952 பரமசிவம் ( உழைப்பாளர் கட்சி)
1957 செல்வராஜ் (சுயே)
1962 பூவராகன் (காங்கிரஸ்)
1967 பூவராகன்(காங்கிரஸ்)
1971 செல்வராஜ் (தி.மு.க.)
1977 ராமநாதன் (அ.தி.மு.க)
1980 தியாகராஜன் (இந்திரா காங்கிரஸ்)
1984 தியாகராஜன் (காங்கிரஸ்)
1989 பூவராகன் (ஜனதா தளம்)
1991 அரங்கநாதன் (அ.தி.மு.க.)
1996 குழந்தைதமிழரசன் (தி.மு.க.)
2001 கோவிந்தசாமி (பா.ம.க.)
2006 விஜயகாந்த் (தே.மு.தி.க.)
2011 முத்துக்குமார் (தே.மு.தி.க.)
2016 கலைச்செல்வன் (அ.தி.மு.க)
Next Story






