என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    உத்திரமேரூர் தொகுதி
    X
    உத்திரமேரூர் தொகுதி

    முன்னாள் அமைச்சரும்- தற்போதைய எம்எல்ஏ-வும் மோதும் உத்திரமேரூர் தொகுதி கண்ணோட்டம்

    அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. சுந்தர் மீண்டும் களத்தில் நிற்கிறார்.
    அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 20,000
    2. அசையும் சொத்து- ரூ. 49,08,525
    3. அசையா சொத்து- ரூ. 55,00,000

    திமுக வேட்பாளர் சுந்தர் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 50,000
    2. அசையும் சொத்து- ரூ. 13,59,539
    3. அசையா சொத்து- ரூ. 94,60,000

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு கரைகளை ஒட்டி அமைந்துள்ளது உத்திரமேரூர் தொகுதி.  உலகிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தேர்தல் நடைமுறைகளை குடவோலை முறையின் மூலம் அறிமுகப்படுத்திய ஊர் உத்திரமேரூர். இங்குள்ள பண்டைய கால கல்வெட்டுகள் உலக பிரசித்தி பெற்றவை.

    உத்திரமேரூர் தொகுதி

    உத்திரமேரூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 633 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து, 25 ஆயிரத்து 347 ஆண்கள், 1 லட்சத்து 34 ஆயிரத்து 252 பெண்கள், 34 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். 

    விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாய கூலி வேலை, கட்டுமான தொழிலாளிகள் அதிகம் உள்ளனர். 1952-க்கு பிறகு இதுவரை நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ், சுயேட்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    உத்திரமேரூர் தொகுதி

    உத்திரமேரூர் ஒன்றியம், உத்திரமேரூர் பேரூராட்சி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் வாலாஜாபாத் பேரூராட்சி ஆகியவை தொகுதியில் அடங்கும். காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியம், நகராட்சியின் சில பகுதிகளும் உத்திரமேரூர் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் வன்னியர்கள் அதிக அளவில் உள்ளனர். அடுத்த இடத்தில் ஆதிதிராவிடர்கள், முதலியார்கள் உள்ளனர். எனவே அவர்கள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர்.

    உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட மதூர், அரும்புலியூர், குண்ணவாக்கம் ஆகிய பிர்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் கல்குவாரிகளால் அளவிற்கு அதிகமான கனிமவளம் கொள்ளை அடிக்கப்படுகிறது, விபத்துகளும், உயிர் இழப்புகளும் அதிகம் ஏற்படுவதாகவும். சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. குடிநீர் மாசு ஏற்படுவதால் மீண்டும் புதிய கல் குவாரி களுக்கு அரசு அனுமதி அளிக்க கூடாது என்று மக்கள் கூறுகின்றனர்.

    உத்திரமேரூர் தொகுதி

    மன்னராட்சி காலத்தில் வெட்டபட்ட உத்திரமேரூர் பெரிய ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் இதுவரை தூர்வாரப்படாத நிலையில் விவசாயத்துக்கு உதவியாக தூர்வார வேண்டும். படித்த இளைஞர்கள் அதிகம் இருப்பதால் உத்திரமேரூர் பகுதியில் தொழில் பூங்கா ஓன்று அமைப்பதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும். காஞ்சீபுரம்- உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் செய்யாற்றில் குறுக்கே பழுதடைந்த தரை பாலத்தை முற்றிலும் அகற்றி விட்டு மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என்பன தொகுதியில் முக்கிய கோரிக்கையாக உள்ளன.

    உத்திரமேரூர் தொகுதி

    மேலும் வாலாஜாபாத், உத்திரமேரூர், பேரூராட்சி நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.

    உத்திரமேரூர் தொகுதி

    73 ஊராட்சி மன்றங்களைக் கொண்ட உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை நிர்வாக வளர்ச்சிக்காக 2 ஆக பிரித்து சாலவாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதியதாக ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும்.

    தேர்தல் வெற்றி

    உத்திரமேரூர் தொகுதி

    1952 ராமசாமி முதலியார் (காங்கிரஸ்)
    1957 ராமசாமி முதலியார் (சுயேட்சை)
    1967 ராஜகோபால் (தி.மு.க.)
    1977 பக்கூர் சுப்ரமணியன் (அ.தி.மு.க.)
    1980 ஜெகத் ரட்சகன் (அ.தி.மு.க.)
    1984 நரசிம்ம பல்லவன் (அ.தி.மு.க.)
    1989 கே.சுந்தர் (தி.மு.க.)
    1991 காஞ்சி பன்னீர்செல்வம் (அ.தி.மு.க..)
    1996 கே.சுந்தர் (தி.மு.க.)
    2001 சோமசுந்தர் (அ.தி.மு.க.)
    2006 கே.சுந்தர் (தி.மு.க.)
    2011 கணேசன் (அ.தி.மு.க.)
    2016 கே.சுந்தர் (தி.மு.க.)
    Next Story
    ×