என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    அரக்கோணம் தொகுதி
    X
    அரக்கோணம் தொகுதி

    அரக்கோணம் தொகுதி கண்ணோட்டம்

    இரண்டுமுறை தொடர்ந்து வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக இருக்கும் சு. ரவி அதிமுக சார்பில் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை விசிக வேட்பாளர் கவுதமசன்னா எதிர்த்து போட்டியிடுகிறார்.
    அதிமுக வேட்பாளர் சு. ரவி சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 10 ஆயிரம்
    2. அசையும் சொத்து- ரூ. 19,16,761
    3. அசையும் சொத்து- ரூ. 3,75,000

    விசிக வேட்பாளர் கவுதமசன்னா சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 15,000
    2. அசையும் சொத்து- ரூ. 2,82,808.53

    அரக்கோணம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழமை வாய்ந்த நகரம். 1977 முதல் அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி தனிதொகுதியாக உள்ளது. 1952 தொடங்கி இதுவரை 14 சட்ட மன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது சென்னையின் அருகிலுள்ள தொகுதியாக உள்ளது.

    அரக்கோணம் தொகுதி

    அரக்கோணம் பகுதியில் இருந்து சென்னைக்கு ஏராளமானோர் வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும் ஆண்டிற்கு ரூ.6 கோடி வருவாய் ஈட்டும் மிகப்பழமையான ரெயில் நிலையமாக அமைந்துள்ளது இப்போது இன்னும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் புதிய ரெயில் நிலையம் சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    அரக்கோணத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பிரமாண்டமான தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. தென்னிந்திய கடற்படை கண்காணிக்கும் மிக வலிமையான ராஜாளி கடற்படை விமான தளம். தென்னிந்திய அளவில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி மையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை தளமும் இந்த தொகுதியில் உள்ளது. 

    அரக்கோணம் தொகுதி

    ஆதிதிராவிடர்கள், வன்னியர், முதலியார் சமுதாயத்தினர் பரவலாக உள்ளனர். அரக்கோணம் தொகுதியில் இதுவரை 7 முறை தி.மு.க.வும், 5 முறை அ.தி.மு.க.வும், 2 முறை காங்கிரஸ் கட்சியும், ஒரு முறை சுயேட்சையாகவும் வெற்றிபெற்று இருக்கிறார்கள்.

    தொழிற்சாலை என்று பார்த்தால் டயர் தொழிற்சாலை, ராம்கோ சிமெண்ட் சீட் ஆலை, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலை என பல தொழிற்சாலைகள் இந்த தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

    அரக்கோணம் தொகுதி

    தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 226511. பேர் இதில் ஆண் வாக்காளர் எண்ணிக்கை 110327, பெண் வாக்காளர் 116167 பேர் எனவும் 17 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

    அரக்கோணம் நகராட்சி, தக்கோலம் பேரூராட்சி மற்றும் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட 24 கிராம ஊராட்சிகள் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சிகள் சோளிங்கர் ஒன்றியத்தின் ஊராட்சிகள் கொண்டதாக உள்ளது. 

    அரக்கோணம் தொகுதி

    1951 ஆண்டிலிருந்து சட்ட மன்ற தேர்தலை சந்திக்கும் தொகுதியாக இருந்தாலும் 3 ஆண்டிற்கு முன்னர்தான் அரசு கல்லூரி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய தொகுதியாகவே உள்ளது. இந்த தொகுதியின் நீண்டகால கோரிக்கையாக பலவற்றை இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதில் குறிப்பாக ரெயில் நிலையம் வழியாக பஸ் சேவை, கடுமையான போக்குவரத்து நெரிசலால் தினமும் காந்தி ரோடு விரிவாக்கம் செய்வது முடங்கி கிடக்கும் சிட்கோ, அரசு தொழிற்பயிற்சி நிலயத்தை மீட்பது.

    அரக்கோணம் தொகுதி

    அரக்கோணம் ரெயில் நிலையம் சென்னையின் நுழைவு வாயிலாக இருப்பதால் ரெயில் முனையமாக மாற்ற வேண்டும் எனவும் அரசு மருத்துவ மனையில் இன்னும் அதிகமாக வசதிகள் செய்யவேண்டும் என எதிர்பார்கின்றனர்.


    தேர்தல் வெற்றி

    அரக்கோணம் தொகுதி

    1951 பக்தவத்சலு நாயுடு- சுயே
    1957 சடையப்ப முதலியார்- காங்கிரஸ்
    1962 ராமசாமி- தி.மு.க.
    1967 ராமசாமி- தி.மு.க.
    1971 பலராமன்- தி.மு.க.
    1977 வி.கே.ராசு- அ.தி.மு.க.
    1980 விஜயசாரதி- அ.தி.மு.க.
    1984 வி.கே.ராசு- தி.மு.க.
    1989 வி.கே.ராசு- தி.மு-.க.
    1991 லதாபிரியக்குமார்- காங்கிரஸ்
    1996 தமிழ்செல்வன்- தி.மு.க.
    2001 பவானி கருணாகரன்- அ.தி.மு.க.
    2006 ஜெகன்மூர்த்தி- தி.மு.க.
    2011 சு.ரவி- அ.தி.மு.க.
    2016 சு.ரவி- அ.தி.மு.க.

    2016 தேர்தல்

    சு.ரவி- அ.தி.மு.க.- 68,176
    ராஜ்குமார்- தி.மு.க.- 64,015
    அற்புதம்- பா.ம.க.- 20,130
    கோபிநாத்- வி.சி.க.- 5,213
    விஜயன்- பா.ஜ.க.- 2,021
    சுதாகர்- பி.எஸ்.பி.- 1,614
    சரவணன்- நாம்தமிழர்- 1,038
    நோட்டா- 2,049
    Next Story
    ×