search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவையாறு தொகுதி
    X
    திருவையாறு தொகுதி

    திமுக- பா.ஜனதா நேருக்குநேர் மோதும் திருவையாறு தொகுதி கண்ணோட்டம்

    அதிமுக கூட்டணி சார்பில் பா.ஜனதா-வும், திமுகவும் நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்தும் திருவையாறு தொகுதி கண்ணோட்டம்.
    சொத்து மதிப்பு

    துரை சந்திரசேகரன்

    1. கையிருப்பு- ரூ. 60,000
    2. அசையும் சொத்து- ரூ. 36,99,890
    3. அசையா சொத்து- ரூ. 24,00,000

    வெங்கடேசன்

    1. கையிருப்பு- ரூ. 50,000
    2. அசையும் சொத்து- ரூ. 1,10,40,000
    3. அசையா சொத்து- ரூ. 5,90,00,000

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் திருவையாறு தொகுதியும் ஒன்று. இது தாலுகா நிர்வாக தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

    திருவையாறு தொகுதி ஆன்மீகம் நிறைந்த தொகுதியாகும். திரு+ஐந்து+ஆறு காவிரி, மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.

    திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் இயற்கை அமைப்புப்படி, காவிரி ஆற்றை முதன்மையாகவும் மையமாகவும் கொண்டு உணவுப் பொருள்கள் விளையும் விவசாய நிலங்கள் பல்கிப் பெருகி உலக மக்களின் மனங்களைக் கவர்வது போல, ஆன்மீகமும் இசையும் தோன்றி வளர்ந்து மேன்மை பெற்று விளங்குகின்றன.

    திருவையாறை சுற்றியுள்ள ஆன்மீகத் தலங்களின் திசைகளையெல்லாம் தனது கைவிரலால் ஒருங்கிணைத்து சுட்டிக் காட்டும் விதமாக, தலைமைப் பீடமாக கரிகாலன் கட்டிய கல்லணை விளங்குகிறது.

    திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் தில்லைஸ்தானம் ஆகிய சித்திரை மகோற்சவ சப்தஸ்தான ஏழூர் சிவ ஸ்தலங்களும், 108 திவ்யதேசங்களான கண்டியூர் ஹரசாப விமோசணப் பெருமாள் கோவில், கோவிலடியில் அப்பால ரெங்கநாதர் எனும் அப்பக் குடத்தான் கோயிலும், உறியடி உற்சவம் புகழ் வரகூர் வெங்கடேசப் பெருமாள் கோயில், திருப்பூந்துருத்தி வரதராஜப் பெருமாள் கோயில் மற்றும் பெரும்புலியூர் சுந்தர் ராஜ பெருமாள் கோயில் ஆகிய பிரசித்திப் பெற்ற கோயில்கள் அமைந்துள்ளன. மேலும், கிறிஸ்தவ சமுதாயத்தினரிடையே புகழ்வாய்ந்த பூண்டி மாதாத் பேராலயமும், மைக்கேல்பட்டி கிறிஸ்தவத் தலமும் உள்ளன.

    இது தவிர கர்நாடகா சங்கீத வித்வான்களில் ஒருவரான சத்குரு தியாகராஜர் சமாதி, அரசு இசை கல்லூரி, அரசினர் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன.

    இந்த தொகுதியானது ஆன்மீகம், சுற்றுலா தலம் நிறைந்த தொகுதியாகும். இது தவிர விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இங்கு நெல், வாழை, வெற்றிலை, காய்கறிகள் அதிகம் விளைகின்றன.

    திருவையாறு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 610 பேர் வாக்காளர்களான உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 28 ஆயிரத்து 449 பேரும், பெண்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 158 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் உள்ளனர்.

    திருவையாறு ஒன்றியத்தின் 40 ஊராட்சிகள், பூதலூர் ஒன்றியத்தின் 42 ஊராட்சிகள், தொகுதி சீரமைப்பின்போது தஞ்சாவூர் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட 29 ஊராட்சிகள், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி பேரூராட்சிகள், திரு வையாறு, பூதலூர் ஆகிய 2 தாலுகாக்கள் மற்றும் திரு ச்சி சாலை செங்கிப்பட்டி பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி ஆகும்.

    கள்ளர், முத்தரையர், மூப்பனார்,தலித், வன்னியர், பிராமணர், உடையார், பார் கவகுலத்தினர் அதிகளவில் உள்ளனர். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் கணிசமாக உள்ளனர்.

    கோரிக்கைகள்

    திருவையாறு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

    திருவையாறு தொகுதியின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்படும் நெல், கரும்பு, வாழை மற்றும் வெற்றிலை ஆகியவற்றைப் பாதுகாக்கவும் சந்தைப்படுத்துவதற்குமான வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாமலேயே இருக்கிறது. அறுவடைக்குப் பிறகு அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் மட்டுமே அடுக்கி வைத்து, வரிசைப்படி அல்லது நிலைய ஊழியர்களுக்கு தோதுவான நாளில் கொள்முதலுக்கு எடுத்துக் கொள்ளும் நாள் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

    திருவையாறு தொகுதி
    துரை சந்திரசேகரன், வெங்கடேசன்

    இந்நிலையில், மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதோடு, விவசாயிகளுக்கு பண நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க, அரசு நெல் கொள்முதல் நிலையங்களின் அருகிலேயே மேற்கூரையுடன் கூடிய களம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது.

    விளைவிக்கப்பட்ட வாழைத் தார்களையும் வாழை இலைகளையும் வாழை விவசாயிகள் தனியார் ஏலச் சந்தைகளுக்குக் கொண்டு போய் தான் ஏலதாரரின் நிர்ணயப்படி மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் கட்டாயம் உள்ளது.

    அரசு நெல் கொள்முதல் நிலையங்களைப் போலவே, வாழைத் தார்கள் கொள்முதல் செய்து வாழை விவசாயிகளை பொருளாதார நஷ்டத்திலிருந்து காத்திட முன்வர வேண்டும்.

    ஆன்மீகம், இசை நகரம், சுற்றுலா தலங்கள், நிறைந்த திருவையாறு நகரை சுற்றுலா மையமாக அறிவித்து சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வசதியான தங்கும் விடுதிகள் அமையவும் ஏற்பாடுகளை மேற்கொள்வது மிக்க நன்மை பயப்பதாக அமையும். அதனால், தமிழக அரசாங்கத்துக்கும் திருவையாறு பேரூராட்சிக்கும் பெருமளவில் வருமா வாய்ப்பு கிடைக்கும்.

    அதிமுக கூட்டணியில் பா.ஜனதா-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் பூண்டி வெங்கடேசன் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் துரை சந்திரசேகரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

    1957 சுவாமிநாத மேல்கொண்டார்(காங்கிரஸ்)
    1962 பழனி (காங்கிரஸ்)
    1967 ஜி.முருகையா சேதுரார் (தி.மு.க)
    1971 இளங்கோவன் (தி.மு.க)
    1977 இளங்கோவன் (தி.மு.க)
    1980 எம்.சுப்பிரமணியன் (அ.தி.மு.க)
    1984 துரை.கோவிந்தராஜன் (அ.தி.மு.க)
    1989 துரை.சந்திரசேகரன் (தி.மு.க)
    1991 பி.கலியபெருமாள் (அ.தி.மு.க)
    1996 துரை.சந்திரசேகரன் (தி.மு.க)
    2001 கி.அய்யாறு வாண்டையார்(அ.தி.மு.க)
    2006 துரை.சந்திரசேகரன் (தி.மு.க)
    2011 எம்.ரத்தினசாமி (அ.தி.மு.க)
    2016 துரை.சந்திரசேகரன் (தி.மு.க)

    2016 தேர்தல் முடிவு

    துரை.சந்திரசேகரன் (தி.மு.க.)- 1,00,043
    எம்.ஜி.எம். சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)- 8,57,00
    வி.ஜீவக்குமார் (மார்க்.கம்யூ)- 8,604
    சண்முகம் (நாம் தமிழர்)- 1,806
    கனகராஜ் (பா.ம.க)- 1,571
    காமராஜ் (த.மு.மு.க)- 1,161
    Next Story
    ×