என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    கீழ்வேளூர் தொகுதி
    X
    கீழ்வேளூர் தொகுதி

    கூட்டணி கட்சிகள் பலப்பரீட்சை நடத்தும் கீழ்வேளூர் தொகுதி கண்ணோட்டம்

    அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க.வும்- திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    சொத்து மதிப்பு

    நாகை மாலி

    1. கையிருப்பு: ரூ. 3850
    2. அசையும் சொத்து: 14,11,420.63
    3. அசையா சொத்து: ரூ. 80,000

    கடந்த தொகுதி சீரமைப்பின்போது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி இது. நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர் ஆகிய மூன்று தொகுதிகளில் இருந்து பகுதிகள் பிரித்து கீழ்வேளூர் தனி தொகுதியாக உருவானது. இதில் கீழ்வேளூர் ஒன்றியத்தில் இருந்து 38 ஊராட்சிகளும், கீழையூர் ஒன்றியத்தில் இருந்து 27, தலைஞாயிறு ஒன்றியத்தில் இருந்து 6, நாகை ஒன்றியத்தில் இருந்து 6 ஊராட்சி பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

    தமிழ்நாட்டிலேயே அதிக அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி. குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் (தனி) சட்டமன்ற தொகுதியாகும்.

    கீழ்வேளூர் தொகுதி

    கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 764. இதில் ஆண்கள் 87 ஆயிரத்து 677, பெண்கள் 91 ஆயிரத்து 578.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீழ்வேலூர் வட்டம் மற்றும் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் பேரூராட்சியும் ஆகும். இந்த தொகுதியில் 77 பஞ்சாயத்துகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. 
    இவ்வூரில் காவேரி ஆற்றின் கிளையாறான ஓடம்போக்கி ஆறு பாய்கிறது. கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 84-வது சிவத்தலமாகும்.

    கிறிஸ்துவர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான வேளாங்கண்ணி, இந்துக்களின் வழிபாட்டு தலமான எட்டுக்குடி, கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை உள்ளிட்ட முக்கிய ஊர்கள் இத்தொகுதிக்குள் உள்ளன. வேளாங்கண்ணி, கீழ்வேளூர் ஆகிய 2 பேரூராட்சிகள் தவிர ஏனையவை எல்லாமே ஊராட்சி பகுதிகள். முழுக்க முழுக்க விவசாயத் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர்.

    தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. தனியார் அரிசி ஆலை உள்ளது. தன்னிறைவு பெறாத தொகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கை பேருந்து நிலையம், நூலகக் கட்டடம் கட்ட வேண்டும். எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வேண்டும். இங்கு மீன்பிடி பிரதான தொழிலாக உள்ளது. இதில் முக்கியமான தொழில் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட முக்கிய மீன்பிடித் தலங்களும் உள்ளன.

    கீழ்வேளூர் தொகுதி

    அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் வடிவேல் ராவணனும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நாகை மாலியும் போட்டியிடுகிறார்கள்.

    2011 மகாலிங்கம் (சி.பி.எம்)
    2016 உ. மதிவாணன் (தி.மு.க)
    Next Story
    ×