என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஆலங்குடி தொகுதி
ஆலங்குடி தொகுதி கண்ணோட்டம்
திமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் சிவ.வீ. மெய்யநாதனும், அதிமுக சார்பில் தர்ம.தங்கவேலும் போட்டியிடுகின்றனர்.
தர்ம.தங்கவேல் சொத்து மதிப்பு
1. கையிருப்பு: 5 லட்சம் ரூபாய்
2. அசையும் சொத்து மதிப்பு: ரூ. 11,96,307
3. அசையா சொத்து: 70 லட்சம் ரூபாய்
புதுக்கோட்டை மாவட்டத்தில் முப்போகமும் விளையும் பகுதியாகவும், எப்போதும் செழிப்பாகவே காணப்படக் கூடியது பகுதியாக திகழ்வது ஆலங்குடி.
இத்தொகுதிக்குட்பட்ட தமிழகத்தில் அதிக உயரத்தில் அதாவது 33 அடியில் குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் குதிரை சிலையும், கீரமங்கலத்தில் சிவன் சிலை மற்றும் புலவர் நக்கீரருக்கு முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலங்குடியானது மாநிலத்தில் கடலை சந்தைக்கு சிறப்பு பெற்றுள்ளது. வடகாடு, மாங்காடு, கீரமங்கலம் பகுதியில் விளையும் பலாப்பழம் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மலர்களும் அதிகளவில் விளைகிறது.
1962-க்கு முன்பு வரை ஆலங்குடி தொகுதி சென்னை மாகாணத்தில் இருந்தது. இத்தொகுதியில் கடந்த 1962--க்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. 5 முறையும், தி.மு.க. 4, காங்கிரஸ், சுயேட்சை, இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2011-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் 57,250 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் சுப. அருள்மணி 52,123 வாக்குகளும் பெற்றனர். இதில், கு.ப. கிருஷ்ணன் 5,127 வாக்குகள் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சிவ.வீ. மெய்யநாதன் வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் முத்தரையர், முக்குலத்தோர் அதிகளவில் வசிக்கின்றனர். மேலும், இத்தொகுதியில் திருவரங்குளம் ஒன்றியத்தில் 48 ஊராட்சிகளும், ஆலங்குடி, கீரமங்கலம் ஆகிய 2 பேரூராட்சிகளும், அறந்தாங்கி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகளும் இணைந்துள்ளன.

இத்தொகுதியில் அதிகமாக ஆழ்துளை கிணறுகள் இருப்பதன் மூலம் மின் தேவையும் அதிகரித்திருப்பதால் ஆலங்குடியில் கோட்டப்பொறியாளர் அலுவலகம், மின் மாற்றி பராமரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மேலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருவதால் கடலில் கலக்கும் மழைநீரை இப்பகுதிக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கையும் நிறைவேறவில்லை.

கல்வி விழிப்புணர்வு உள்ள ஆலங்குடி தொகுதியில் அரசு கல்லூரிகள் கிடையாது. எவ்வித தொழில்சாலையும் இல்லாததால் வேலை வாய்ப்பு உறுதியற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைய அரசு கண்டுகொள்ளவே இல்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
ஆலங்குடி தாலுகா (பகுதி)
மேலப்பட்டி ராசியமங்கலம் (உடையார்), பாச்சிக்கோட்டை, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டை, விடுதி, கீழப்பட்டி ராசியமங்கலம் (உடையார்), மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, புள்ளான் விடுதி, நெடுவாசல் மேல் பாதி, நெடுவாசல் கீழ்பாதி, ஆண்டவராயபுரம், செட்டியேந்தல், அணவயல், லெட்சுமிநரசிம்மபுரம், புளிச்சங்காடு, கறம்பக்காடு ஜமீன், செரியலூர், பனை குளம், குலமங்கலம் தெற்கு, குலமங்கலம் வடக்கு, கொத் தமங்கலம் தெற்கு, சேந் தன்குடி, நகரம், மாங் காடு கொத்தமங்கலம் வடக்கு, ஆலங்காடு, சூரன்விடுதி,
கல்லாலங்க்குடி, பள்ளத்திவிடுதி, பத்தம்பட்டி, குப்பாக்குடி, ஆயிப்பட்டி, கோவிலூர், தேவஸ்தானம், கோவிலூர், கொத்தக் கோட்டை, மாஞ்சன்விடுதி, காயம்பட்டி, வேப்பங்க்குடி, இம்னாம்பட்டி, திருவரங்குளம், திருக்கட்டளை, கைக்குறிச்சி, விஜயரெகுநாதபுரம், பூவர சக்குடி, மணியம்பலம், வண் டக்கோட்டை, வலத்திராக் கோட்டை, களங்க்குடி, கன்னி யாபட்டி, நம்புக்குழி, கூடலூர், கத்தக்குறிச்சி, பாலையூர், முத்துப்பட்டிணம், குளவாய்ப் பட்டி, தட்சிணாபுரம், வெங்கிட குளம், வெண்ணாவல்குடி, அரையப்பட்டி, கீழையூர், சேந்தாக்குடி, மாலக்குடி, கொத்தமங்கலம், மற்றும் இசுகுபட்டி கிராமங்கள் உள்ளன.

செழிப்பு மிக்க இந்த தொகுதின் சொர்க்க பூமியாக நெடுவாசல் கிராமம் அமைந்துள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த கிராமத்தில் 100 நாட்களை கடந்து நடைபெற்ற தன்னெழுச்சி போராட்டம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது.
கஜா புயலின் கோரதாண்டவத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை எதிர்பார்த்திருக்கும் ஆலங்குடி தொகுதியில் நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கோட்டைக்கு செல்லும் உறுப்பினர் தொகுதியை முன்மாதிரியாக மாற்றிக்காட்டுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.


1957 சின்னையா (காங்கிரஸ்)
1962 முருகையன் (தி.மு.க.)
1967 சுப்பையா (தி.மு.க.)
1971 சுப்பையா (தி.மு.க.)
1977 புஷ்பராஜ் (காங்கிரஸ்)
1980 திருமாறன் (அ.தி.மு.க.)
1984 வெங்கடாசலம் (அ.தி.மு.க.)
1989 சந்திரசேகரன் (தி.மு.க.)
1991 சண்முகநாதன் (அ.தி.மு.க.)
1996 வெங்கடாசலம் (சுயேட்சை)
2001 வெங்கடாசலம் (அ.தி.மு.க.)
2006 ராஜசேகரன் (இந்திய கம்யூ.)
2011 கு.ப. கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
2016 சிவ.வீ. மெய்யநாதன் (தி.மு.க.)
Next Story






