என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    காட்பாடி தொகுதி
    X
    காட்பாடி தொகுதி

    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடர்ந்து ஐந்து முறை வென்ற காட்பாடி தொகுதி கண்ணோட்டம்

    திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகனை தொடர்ந்து ஐந்து முறை சட்டசபை உறுப்பினராக்கிய காட்பாடி தொகுதி கண்ணோட்டம்.
    வேலூர் மாநகராட்சியின் முக்கிய பகுதி காட்பாடி ஆகும். ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த ஊர் காங்கேயநல்லூர் முருகன் கோவில், கிருபானந்த வாரியார் சாமிகள் நினைவகம், வள்ளிமலை முருகன் கோவில் போன்ற ஆன்மிகத் தலங்கள் உள்ளன. இங்குதான் வேலூர் காட்பாடி சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வி.ஐ.டி.பல்கலைக்கழகம் உள்ளது.

    காட்பாடி தொகுதி

    இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 428 வாக்காளர் உள்ளனர். ஆண்கள் 1,19,583, பெண்கள் 1,27,813, மூன்றாம் பாலினத்தவர் 32 பேர் உள்ளனர்.

    தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி(சக்கராகுட்டை,கம்மவார்புதூர், வரதராசபுரம்,கசம்), கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணாம்பட்டு,

    காட்பாடி தொகுதி

    அம்முண்டி, வண்டறந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் மாநகராட்சியில் உள்ள தாராபடவேடு, கழிஞ்சூர் காட்பாடி காங்கேயநல்லூர் காந்திநகர் திருவலம் மற்றும் சேனூர்,சேண்பாக்கம் ஆகிய 15 வார்டுகள்,வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

    காட்பாடி தொகுதியில் வன்னியர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். முதலியார், நாயுடு ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர்.

    காட்பாடி தொகுதி

    தொகுதியில் விவசாயம் நெசவு ஆகியவை பிரதானமாக உள்ளது. ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதிகளில் காட்பாடியும் ஒன்று. 1971-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட துரைமுருகன் வென்றார். பின்னர் 1977-ல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயவேலு, 1980ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட பூங்காவனம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    1984-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ரகுபதி வென்றார். அதன் பிறகு 1989-ல் மீண்டும் திமுக சார்பில் களம் இறங்கிய துரைமுருகனும் தொடர்ந்து 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கலைச்செல்வி வெற்றி பெற்றனர்.
    பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதாவது 1996, 2001, 2006, 2011, 2016 என்று தொடர்ந்து 5 முறை துரைமுருகன் வெற்றி பெற்றுள்ளார்.

    கோரிக்கை

    விவசாயத்தை நம்பியே இந்த தொகுதி மக்கள் உள்ளனர். ஆந்திர எல்லையை ஒட்டி ஏராளமான மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆந்திராவில் உள்ள மாம்பழச்சாறு தொழிற்சாலைகளுக்கு மாம்பழங்களை எடுத்துச் செல்கின்றனர். இதனை தடுக்க காட்பாடி தொகுதியில் ஒரு மாம்பழ தொழிற்சாலை கொண்டு வரவேண்டும்.

    இந்த தொகுதியில் ஏற்கனவே இருந்த தமிழ்நாடு வெடி மருந்து தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.

    கோரிக்கை

    பல ஆண்டுகளாக தாலுகா மருத்துவமனை வசதி இல்லாத பகுதியாக உள்ளது. நீண்டநாள் கோரிக்கையான தாலுகா மருத்துவமனை விரைவில் அமைக்கவேண்டும். காட்பாடி பகுதியிலிருந்து வேலூர் சத்துவாச்சாரி பகுதிக்கு பாலாற்றின் குறுக்கே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும்.

    காட்பாடி தொகுதி

    இது தவிர அரக்கோணம் சென்னை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களை காட்பாடி வரை நீட்டிக்க வேண்டும். காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். காட்பாடி தொகுதியிலேயே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். நகரில் பிரதானமாக நிற்கும் ரெயில்வே மேம்பாலத்தை இடித்துவிட்டு புதியதாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    காட்பாடி தொகுதி

    1962- ராஜகோபால் நாயுடு- (காங்கிரஸ்)
    1967- நடராஜன்- (தி.மு.க.)
    1971- துரைமுருகன்- (தி.மு.க.)
    1977- எம்.ஏ.ஜெயவேலு- (அ.தி.மு.க.)
    1980- பூங்காவனம்- (இ.கம்யூ)
    1984- ரபகுதி- (அ.தி.மு.க.)
    1989- துரைமுருகன்- (தி.மு.க.)
    1991- கலைச்செல்வி- (அ.தி.மு.க.)
    1996- துரைமுருகன்- (தி.மு.க.)
    2001- துரைமுருகன்- (தி.மு.க.)
    2006- துரைமுருகன்- (தி.மு.க.)
    2011- துரைமுருகன்- (தி.மு.க.)
    2016- துரைமுருகன்- (தி.மு.க.)
    Next Story
    ×