search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரபாண்டி தொகுதி
    X
    வீரபாண்டி தொகுதி

    அதிமுக ஹாட்ரிக் அடிக்குமா?- வீரபாண்டி தொகுதி கண்ணோட்டம்

    அதிமுக ஏழு முறையும், திமுக ஆறு முறையும் வெற்றி கண்டுள்ள வீரபாண்டி தொகுதி குறித்த அலசல்.
    தமிழகத்தின் 91-வது சட்டமன்ற தொகுதி வீரபாண்டி. இந்த தொகுதியில் சேலம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள், வீரபாண்டி ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள், பனமரத்துப்பட்டியில் 20 ஊராட்சிகள் மற்றும் ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, மல்லூர், பனமரத்துப்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகள் அடங்கியுள்ளது.

    வீரபாண்டி தொகுதி

    இங்கு பெரும்பான்மை சமூகமாக வன்னியர் சமுதாயம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கவுண்டர், முதலியார், செட்டியார், போயர், அருந்ததியர் என பரவலாக அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் சமபலத்துடன் இந்த தொகுதியில் உள்ளன. தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

    எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கை

    வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமும், நெசவு, விசைத்தறி ஆகிய தொழில்கள் பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக இளம்பிள்ளை பகுதியில் நெய்யப்படும் காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நல்ல மவுசு உண்டு. இளம்பிள்ளை பகுதியில் விசைத்தறி மற்றும் கைத்தறி கூடங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் இளம்பிள்ளையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    வீரபாண்டி தொகுதி

    அதேபோல், ஆட்டையாம்பட்டி முறுக்கு என்றால் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் வெளி மாவட்ட மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அந்த பகுதியில் முறுக்கு சுடும் தொழிலில் பல குடும்பங்கள் ஈடுபட்டு வருகிறது. அந்த குடிசை தொழிலை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

    வீரபாண்டி தொகுதி

    பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் 15 ஆண்டுகளாக கோரிக்கையாகும். அதாவது, 2 ஆயிரத்து 400 ஏக்கரில் இந்த ஏரி அமைந்துள்ளது. போதமலை, ஜருகுமலையில் மழை பெய்தால் அங்கிருந்து வரட்டாறு, கூட்டாறு வழியாக பனமரத்துப்பட்டிக்கு தண்ணீர் வரும். ஆனால் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, வனத்துறையால் ஏற்படுத்தப்பட்ட தடுப்பணைகளால் ஏரிக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. 

    வீரபாண்டி தொகுதி

    எனவே, இந்த ஏரியை தூர்வாரி சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். பனமரத்துப்பட்டி பகுதிகளில் அதிகளவில் பூக்கள் விளைச்சல் இருப்பதால் அங்கு பூக்களை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    2016-தேர்தல்கள்

    எஸ். மனோன்மணி அதிமுக வெற்றி- 94,792
    ஆ.ராஜேந்திரன் (திமுக)- 80,311 
    ஏ.ஆர்.பி.சாம்ராஜ்(பாமக)- 17,218 
    மோகன்(இந்திய கம்யூனிஸ்டு)- 6,483 
    எம்.சசிக்குமார்(நாம் தமிழர்)- 1,233 
    காமராஜ்(கொமதேக)- 1,198 
    செல்லம்மாள்(பகுஜன் சமாஜ் கட்சி)- 803
    லோகநாதன்(சுயேச்சை)- 616 
    மோகன்குமார்(ஐஜேகே)- 345 
    மார்க்கண்டேயன்(சுயேச்சை)- 252 
    பி.ஜெயக்குமார்(சுயேச்சை) -225 
    மனோன்மணி(சுயேச்சை)- 138 
    கோகிலா(சுயேச்சை) - 97 
    செந்தில்குமார்(சுயேச்சை)- 90 
    சதீஷ்குமார்(சுயேச்சை)- 89

    தேர்தல் வெற்றிகள் இதுவரை...

    வீரபாண்டி தொகுதியில் இதுவரை

    1957- எம்.ஆர்.கந்தசாமி முதலியார் (காங்கிரஸ்)
    1962- வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (தி.மு.க.)
    1967- வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (தி.மு.க.), 
    1971- வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (தி.மு.க.) 
    1977- பி.வேங்ககவுண்டர் (அ.தி.மு.க.),
    1980- பி.விஜயலட்சுமி (அ.தி.மு.க.), 
    1984- பி.விஜயலட்சுமி (அ.தி.மு.க.), 
    1989- பி.வெங்கடாசலம் (தி.மு.க.), 
    1991- கே.அர்ச்சுணன் (அ.தி.மு.க.), 
    1996- வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (தி.மு.க.), 
    2001- எஸ்.கே.செல்வம்-  (அ.தி.மு.க.), 
    2006- வீரபாண்டி ராஜா (தி.மு.க.), 
    2011- எஸ்.கே.செல்வம் (அ.தி.மு.க.),
    2016- மனோன்மணி (அ.தி.மு.க.)
    Next Story
    ×