search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்யபிரத சாகு
    X
    சத்யபிரத சாகு

    மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம்

    வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்த்தவர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 13 மற்றும் 14-ந் தேதிகளில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    சிறப்பு சுருக்கமுறை திருத்தம்- 2021-ன் போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்போன் எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்துகொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

    இந்த உத்தரவின்படி வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் (தோராயமாக 30 ஆயிரத்து 400 இடங்கள்) சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2021-ன் போது வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் இந்த முகாமினைப் பயன்படுத்தி தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்போன்/ கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×