search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிண்டி
    X
    கிண்டி

    ரூ.1 கோடி மதிப்பில் கிண்டியில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம்

    கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதல்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வேளாண் பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:-

    விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச்சான்றுகள் பெறும் முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட சென்னை கிண்டியில் ரூ.1 கோடி மதிப்பில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம் அமைக்கப்படும்.

    முதன் முறையாக ஏற்றுமதியாளராகப் பதிவு செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏ.வி. இ.டி.ஏ. தரச்சான்று ஆய்வுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

    முருங்கை அதிகளவில் விளையும் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் ‘முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக’ அறிவிக்கப்படும்.

    மதுரையில் முருங்கைக்கு என சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்திட உலர்த்திட, இலைகளை பொடியாக்கும் எந்திரங்கள், தானியங்கி சிப்பம் கட்டும் எந்திரம் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைத்து தர ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.

    கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதல்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    வேளாண்மையில் தொழில் முனைவோர்களை ஈர்க்க வேளாண் தொழில் முனைப்பு மையம் வலுப்படுத்தப்படுவதுடன் தேவையான இடங்களில் தொழில் முனைப்பு மையம் தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×