search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதிய உணவு திட்டம்- ரேசன் கடைகளில் பயிறு வகைகள் விநியோகம்

    கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து  பேசியதாவது:-

    * வேளாண்மைக்கென தனியாக ஓர் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.

    * வேளாண் கருவிகள் தர ரூ.15 கோடி செலவில் வேளாண் உபகரணங்கள் தொகுப்பு செயல்படுத்தப்படும்.

    * டெல்டா தென்னை விவசாயிகளுக்காக தென்னை மதிப்பு கூட்டும் மையம் தஞ்சையில் அமைக்கப்படும்.

    * மதிய உணவு திட்டத்திலும், ரேசன் கடையிலும் பயிறு வகைகள் விநியோகிக்கப்படும்.

    * இந்தாண்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தர மின்சார வாரியத்துக்கு ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு.

    * ஒவ்வொரு பம்ப்செட்டுக்கும் ஆண்டுதோறும் அரசே விவசாயிகள் சார்பில் ரூ.20 ஆயிரத்தை செலுத்துகிறது.

    காய்கறி


    * காய்கறி, கீரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டத்திற்கு ரூ.95 கோடி  நிதி ஒதுக்கீடு.

    * தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் தோட்டக்கலை கிடங்குகள் அமைக்கப்படும்.

    * மழையில் நெல்மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும்.

    * கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பழ பயிருக்கான சிறப்பு மையம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.

    * கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்.

    * பழப்பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.29.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * நவீன முறையில் பூச்சி மருந்து தெளிக்க 4 ட்ரோன்கள் உள்ளிட்ட எந்திரங்கள் வாங்க ரூ.23.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * 1,700 நீர் சேமிப்புக் கட்டமைப்புகளில் ரூ.5 கோடியில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
    Next Story
    ×