என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி
  X
  பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

  உத்தியோகம் புருஷ லட்சணம்- பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆறாம் இடத்துடன் சூரியன் வலிமையாக சம்பந்தம் பெற்றால் கம்பீரமாக நிர்வாகத் திறனுள்ளவராக இருப்பார். கவுரவத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.


  தற்போதைய காலகட்டத்தில் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலை கிடைப்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாக உள்ளது. நல்ல கல்வி, வேலைக்கான தகுதி உள்ள பலர் எந்த வேலையும் கிடைக்காமல் குடும்ப சூழ்நிலை காரணமாக கிடைத்த வேலையை செய்து பிழைப்பு நடத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வேலை பற்றிய எந்த அடிப்படை ஞானமும் இல்லாத பலர் கவுரவமான உத்தியோகத்தில் சவுகரியமாக வாழ்வதை நடைமுறை வாழ்வில் சந்திக்கிறோம். அதுவும் கொரோனா வந்தாலும் வந்தது வேலையில்லாத் திண்டாட்டம் பலரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது. ஒருவருக்கு நல்ல உத்தியோகம் கிடைக்க தகுதி, திறமை முக்கியமா? அதிர்ஷ்டம் முக்கியமா என்று பட்டி மன்றம் நடத்தும் வகையில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. இது ஒருபுறம் இருக்க நல்ல திறமை, தகுதி இருந்தும் உத்தியோகத்தில் உழைப்பிற்கும், தகுதிக்கும் தகுந்த வாறு முன்னேற்றம் இல்லாமல் இருப்பது அல்லது முதலாளிகள், உயர் அதிகாரிகளால் சதாமன உளைச்சல் இருப்பது போன்ற பல்வேறு விதமான இடைஞ்சல்களை பலர் தொடர்ந்து

  சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது போன்ற பிரச்சினைகளை யாரெல்லாம் அனுபவிப்பார்கள். இதற்கு தீர்வு தான் என்ன? என்பதை இந்த கட்டுரையில் நாம் மிகத் தெளிவாகப் பார்க்கலாம். ஜோதிட ரீதியாக அடிமை ஸ்தானம் எனப்படும் ஆறாம் பாவகமே ஒருவரை அடிமைத் தொழில் அல்லது உத்தியோகம் செய்து வாழ வைக்கிறது. நிர்பந்தத்தின் காரணமாக பிறருக்கு அடி பணிந்து வாழ வைப்பது ஆறாம் பாவகம். லக்னத்திற்கு ஆறாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களுக்கு ஏற்பவே ஜாதகரின் செயல்பாடுகள் உத்தியோக பிராப்தம் அமையும்.

  ஆறாம் இடத்துடன் சூரியன் வலிமையாக சம்பந்தம் பெற்றால் கம்பீரமாக நிர்வாகத் திறனுள்ளவராக இருப்பார். கவுரவத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தனது உத்தியோகம் பற்றி பகல் கனவுகளை கண்டு ஒரு கோட்டை கட்டி சாம்ராஜ்ஜியம் நடத்துவார்கள். சமூக அந்தஸ்து, பிறரை நிர்வாகம் செய்யும் உத்தியோகத்தை மட்டும் விரும்புவார்கள். தன்னைச் சார்ந்தவர்களை தமது தலைமைப்பண்பால் சிறப்பாக வழிநடத்துவார்கள்.சிலர் மேல் அதிகாரிகளுக்கு கீழ் கட்டுப்பட்டு நடக்கும். அரசு ஊழியராக இருப்பார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே இடத்தில் ஒரே நிர்வாகத்தில் பணிபுரிவார்கள். இவர்களால் நிர்வாகத்திற்கு பெருமை சேரும்.

  ஆறாம் இடத்திற்கு வலிமை இல்லாத சூரியன் சம்பந்தம் பெற்றால் பிறர் சொல்வதை மறுக்க முடியாமல் செயல்பட வேண்டிய சூழல் தரும். கோழையாக பிறரை சார்ந்து வாழ்வார்கள். வறட்டு கவுரவம் மிகுதியாக இருக்கும்.வேலையில் சிறு குறை இருந்தாலும் வேலையை உதறிவிடுவார்கள். இதனால் பலரை பகைப்பதுடன் அடிக்கடி பிறர் மீது ஏதாவது குற்றம் கூறி வதைப்பார்கள்.

  ஜனன ஜாதகத்தில் 6-ம் இடத்தில் வலுப்பெற்ற சந்திரன் சம்பந்தம் இருந்தால் தன் அன்பால், அரவணைப்பால் புத்தி சாலித்தனத்தால் உத்தியோகத்தில் பவுர்ணமி நிலவு போல் ஜொலிப்பார்கள். தான் இருக்கும் இடத்திற்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொள்வார்கள்.

  சந்திரன் பலம் குறைந்தவர்கள் 6 மாதம் தொழில், 6 மாதம் உத்தியோகம் என மாறி மாறி காலத்தை கடத்துவார்கள். ஒரே வேலையில் நிலையாக இருக்க மாட்டார்கள். அல்லது இவர்கள் விரும்பும் பணிக்கு ஆயிரம் மணல் கயிறு கண்டிஷன் போடுவார்கள். இவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றமும் இருக்காது. பதவி உயர்வும் சம்பள உயர்வும் அவ்வளவு சீக்கிரமாக வராது.

  இவர்களுக்கு முதன்முதலில் கிடைக்கும் உத்தியோகம் இவர்களுக்கு ஒத்து வந்தால் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இவர்கள் நினைக்கும் போது உத்தியோகம் சார்ந்த வாய்ப்புகள் இவர்களுக்கு வரவே வராது. எந்த லக்னமாக இருந்தாலும் ஆறில் சந்திரன் சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல.

  ஆறாம் இடத்துடன் செவ்வாய் சுப வலுப் பெற்றவர்கள் மிலிட்டரி, போலீஸ், ராணுவம், தற்காப்பு கலை, விளையாட்டு போன்ற வீரம் சம்பந்தப்பட்ட பெற்ற பணிகள் உத்தியோகத்தில் தனித்திறமையுடன் வலம் வருவார்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அனைத்தும் டைம் டேபிள் படி நடக்க வேண்டும் என்றும் மிலிட்டரி போல் எல்லோரும் தனக்கு கட்டுப்பட்டு தன் ஆளுமைக்குள் இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். வீரத்தையும், விவேகத்தையும் சம விகிதத்தில் பயன்படுத்தி சாதனைகளால் சரித்திரத்தில் இடம் பெறுவார்கள்.

  செவ்வாய் பலம் குறைந்தவர்கள் அடங்கிப் போகிறவர்களிடம் ஆட்டம் காட்டுவார்கள். தன்னை விட வலியவர்களாக இருந்தால் அடக்கி வாசிப்பார்கள். கோப உணர்வு மிகுதியால் அடிக்கடி உத்தியோகத்தில் அவமானப் படுவார்கள். இது முரட்டுத்தனமான கிரகம் என்பதால் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கும். ஈகோவால் அரிய பல சந்தர்ப்பங்களை தவற விடுவார்கள்.

  புதன் புத்திசாலித்தனத்தை குறிக்கும் காரக கிரகமாகும். 6-ம் இடத்திற்கு புதன் சம்பந்தம் இருந்தால் எளிதில் நல்ல வேலை கிடைக்கும். படித்த படிப்பை பயன்படுத்தி திட்டமிட்டு செயல்படுவார்கள்.புதுமை விரும்பிகள் என்பதால் சுய நலத்துடன் தன் எதிர் காலத்தை பற்றி மட்டும் சிந்திப்பவர்கள். உத்தியோக இடர்களை புத்தியைத் தீட்டி பேசியே அனைவரையும் மசியச் செய்பவர்கள். சமாளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் எதிரியை நயவஞ்சகமாக உறவாடி வீழ்த்தும் சாமர்த்தியசாலிகள். உடன் பணிபுரிபவர்களுக்கு மதி மந்திரியாக செயல்பட்டு தன் கட்டுப்பாட்டில் வைப்பவர்கள். சுருக்கமாக சொன்னால் சகுனியாக செயல்பட்டு உயர் அதிகாரிகளை தன் வசப்படுத்தி பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் தந்திரசாலிகள்.

  புதன் வலிமை குறைந்தவர்கள் கற்ற கல்வியை முறையாக பயன்படுத்த தெரியாது அல்லது படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலையில் அடிமைத்தனமாக வேலை செய்து ஜீவிப்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் இவர்களை கோமாளி போல் நடத்துவார்கள்.

  இது போன்ற அமைப்பு ஜாதகத்தில் உள்ளவர்கள் உத்தியோகத்தில் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும், கஷ்டப்பட்டாலும், திறமைகளை வெளிப்படுத்தினாலும் உழைப்பிற்கு தகுந்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் என்றைக்குமே இருக்காது.காலம் முழுவதும் ஒரே உத்தியோகத்தில் ஒரே நிலையிலும் ஒரே சம்பளத்திலும் ஒரே பதவியிலும் தான் இவர்கள் இருப்பார்கள்.

  6-ம் இடத்திற் வலுப்பெற்ற குரு சம்பந்தம் பெற்றால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆச்சாரம், ஊதியம் அதிகம் கிடைக்கும் உத்தியோகத்தை எதிர்பார்ப்பார்கள். ஒரு கம்பெனிக்கு காலை 10 மணி்க்கு உள்ளே சென்று 1 மணிக்கு சாப்பிட்டு மாலை 5 மணிக்கு கிளம்பும் அந்த விதிமுறைகளை பின்பற்றி நடக்கும் வேலையை மட்டும் விரும்புவார்கள்.

  6-ம் இடத்துடன் அசுப வலிமை பெற்ற குரு சம்பந்தம் பெற்றால் பற்றாக்குறை பட்ஜெட்டில் குடும்பம் நடத்தும் உத்தியோகம் அல்லது வேலை இருக்கும். மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். சுயமாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும் திறனும் இல்லாதவர்கள். சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்த தெரியாதவர்கள். பிறரால் ஏமாற்றப்படுவார்கள்.

  ஜனன ஜாதகத்தில் சுக்ரன் 6-ம் இடத்துடன் சம்பந்தம் பெறுபவர்கள் அந்தஸ்து நிறைந்த வேலையில் ஏசி ரூமில் பணிபுரிய விரும்புவார்கள். அலங்காரமாக ஆடை அணிந்து சில மணி நேரம் மட்டும் வேலை செய்து பல லட்சங்களை சம்பாதிப்பவர்கள். படிப்பு, அறிவு சார்ந்த விசயங்களில் பூஜ்யமாக இருந்தால் கூட கவர்ச்சியான பேச்சால் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

  சுக்ரன் பலவீனமாக 6ம் இடத்துடன் சம்பந்தம் பெற்றால் ஏசி அதிகமாக பயன்படுத்தும் நகைக்கடை, துணிக்கடை, ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் போன்றவற்றில் சேல்ஸ் மேன் வேலையில் தன்னை அலங்கரித்துக் கொண்டு கடுமையாக உழைத்து குறைந்த ஊதியம் பெறுவார்கள்.

  ஒருவரின் பூர்வ ஜென்ம வினைக்கு ஏற்ப தொழில் உத்தியோகத்தை நிர்ணயிக்கும் சனிபகவான். ஒருவரின் வாழ்க்கை தரம் வேகமாக உயர்வதற்கும், தாழ்வதற்கும் சனி மிக முக்கிய காரணமாகும். 6ம் சனி இடத்துடன் சுப வலுப் பெற்றால் இவர்கள் சொன்னால் மறுத்து பேசாமல் சொல்வதை கேட்கும் உத்தியோகத்தில் பணிபுரிவார்கள்.

  படிப்பு அறிவு சார்ந்த வேலை உண்டு. எதையும் வெளிப்படையாக, நேரடியாக பேசுவார்கள். ஒருவரின் குறைகளை பெரிது படுத்தாமல் அனுசரித்து செல்லும்திறமைசாலிகள். 6ல் சனி பலவீனப்பட்டால் நீசத் தொழில், கடின உழைப்பில் நிரந்தரமற்ற உத்தியோகம் அமையும். தீய சகவாசம் மற்றும் குடிப்பழக்கத்தால் நிரந்தர வேலை இருக்காது.

  6-ம் இடம் அல்லது சனிக்கு ராகு/கேது சம்பந்தம் இருந்தால் எதைச் செய்தாலும் தவறாகவே முடியும். கடுமையான உத்தியோக தடையை ஏற்படுத்தும். வாழ்வில் எவ்வளவு உயரம் சென்றாலும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள். சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்யும் நிலை, குறைந்த ஊதியத்தை பெறுதல் என்ற நிலை ஏற்படும் ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு 40 வயது ஆகியும் கூட சொல்லிக் கொள்ளும்படியான வேலையில்லாமலும் சூதாட்டம் திருட்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும். நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிக்காமல் வருமானம் இல்லாமல் இருப்பார்கள். முதலாளி, தொழிலாளி கருத்து வேறுபாடு , உயர் அதிகாரிகளுடன் ஒத்துப் போகாத நிலை ஆகியவற்றிற்கு இந்த கிரக சம்பந்தங்களே காரணம்.

  நன்கு படித்திருந்தாலும் தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத தகுதிக் குறைவான இடத்தில் குறைவான சம்பளத்தில் வேலை, சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும். இந்த கிரகச் சேர்க்கை உள்ளவர்களுக்கு உத்தியோகத்தில் எட்ட முடியாத பிரமாண்ட வளர்ச்சியை கொடுத்து மீளமுடியாத திடீர் வீழ்ச்சி, இழப்பையும் தரும். பொதுவாக ஆறாம் இடத்திற்கு அதிக கிரகங்கள் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நல்லது. அவை எவ்வளவு கொடுத்தாலும் அவற்றால் ஜாதகர் நன்மை பெற முடியாமல் தவிக்கநேரும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாற்றம் உண்டாகும்.

  Next Story
  ×