என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

எப்படிப்பட்ட காலிமனை அதிர்ஷ்டம் தரும்
வீடும் வாழ்வும்- எப்படிப்பட்ட காலிமனை அதிர்ஷ்டம் தரும்? 29
விவசாய நிலமாக இருப்பின் நீங்கள் புதிதாக வாங்கிய வடபாக மனையின் மொத்த பாகத்தின் தெற்கில் கிணறு, ஆழ்குழாய்க் கிணறு வருமாயின் இதை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும்.
நகர்புறங்களாகட்டும் அல்லது கிராமப்புறங்களாகட்டும் தாங்கள் ஏற்கனவே குடியிருக்கும் வீட்டிற்கு அல்லது நீங்கள் வைத்திருக்கும் மனைக்கு அல்லது தோட்டத்திற்கு அருகில் உள்ள காலி மனையை வாங்குவது பற்றி வாஸ்துவின் விதிகள் என்ன சொல்கிறது என காண்போம்.
உதாரணமாக நீங்கள் கட்டியுள்ள வீடானது கிழக்கு நோக்கி இருக்கும் போது அந்த வீட்டின் வடக்கு எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கும் காலி மனையை நீங்கள் தாராளமாய் வாங்கலாம். இந்த மனையை வாங்குவதன் மூலம் ஏற்கனவே நீங்கள் வாழ்ந்த வாழ்வைவிட விசேஷமான முன்னேற்றங்கள், குபேரயோகம் உருவாகிச் செல்வச் செழிப்பு உண்டாகும்.
உங்கள் வீட்டில் வடக்குத்திசையில் உங்கள் பழைய மனை எல்லையை ஒட்டி உள்ள மனையை வாங்கி அந்த மனையின் வடகிழக்குப் பகுதியில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து தண்ணீரை உங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து பயன்படுத்தினால் அனேக நல்ல பலன் உண்டு. குறிப்பாக விவசாயம் செய்பவர்கள் மேற்சொன்னபடி வடக்கு பாகத்தில் இருந்து தண்ணீரைத் தெற்குபாகத்திற்குக் கொண்டு சென்றால் உங்களுக்கு அமோக லாபங்கள் உண்டு.
மேலும் இப்படி நீங்கள் வாங்கும் மனையானது, இயற்கையாகவே, உங்கள் பழைய மனையின் தரைத்தளத்தை விட வடக்குப் பக்கம் வாங்கும் தரைத்தளமானது தாழ்ந்து இருப்பின் மிக பிரமாதமான சுபச் செய்திகள் உண்டு.
மாறாக உங்கள் பழைய மனையின் தரைப்பாகத்தைவிட, வட பாகமானது, உயர்ந்த நிலையில் இருந்தால் அது காலி மனை என்றாலும், அபத்தமான பலன் களையே தருகிறது.
ஒருவேளைத் தோட்டமாக இருந்தாலும், வடபகுதி உயர்ந்து இருந்து அங்கிருந்து தென்பகுதிக்கு நீர் கொண்டு வருவது அனேக நட்டங்களையே தருகிறது.
இது போல உங்கள் வீட்டின் வடக்கு எல்லையை ஒட்டி கட்டிடங்கள் இருந்தது எனில் உங்களது பழைய மனையில் உள்ள நீங்கள் கட்டிய வீட்டைக் காட்டிலும் வட பாகத்தில், நீங்கள் புதிதாக வாங்கும் மனையில் உள்ள கட்டிடம் உயரமாக இருக்குமானால் இதுவும் வாஸ்துவின்படி கோளாறுகளையே தருகிறது. எப்போதும் தென்பாகம் உயர்ந்தும், வடபாகம் தாழ்ந்தும் மேல்மட்ட உயரம் குறைந்தும் இருப்பது சுபிட்சம் தரும்.
இது போல ஒரு குடும்பத்தின் பூர்வீகச் சொத்தானாலும் அந்த மனையை பிரிக்கும் போது, தென்பாகம் அந்தக் குறிப்பிட்ட குடும்பத்தின் மூத்தவருக்கும், வடபாகம் இளையவருக்கும் வரும்படிதான் பிரிப்ப துண்டு.
இவ்வாறு பிரித்த மனையில் தென்பாகத்தில் உள்ள மூத்தவரின் மனை காலியாக உள்ளபோது இளையவரான வடபகுதி உரிமையாளர், முதலில் அவருக்குப் பாத்தியப்பட்ட வடபகுதி மனையில் வீடு கட்டிக் குடியேறுவதும் சிறப்பு களை தருவதில்லை. அந்த மனையின் வடக்கு எல்லை சுற்றுச்சுவரைவிட தெற்கு எல்லை சுற்றுச்சுவர் சற்று உயர்வாகக் கட்டிக் கொண்டால் தோஷங்கள் குறைகிறது. சிலர் சுற்றுச்சுவருக்குப் பதிலாக தூண்களை நட்டு, கம்பி வேலிபோட்டு மனையின் எல்லையைப் பாதுகாப்பார்கள். இது போல தெற்கு எல்லையில் போட்டுக் கொள்வது வாஸ்து தோஷ நிவர்த்தி ஆகாது.
இது போல உங்களது கிழக்கு பார்த்த வீட்டிற்கு தெற்குப் பகுதியில் காலிமனை இருந்து அந்த மனையின் உரிமையாளர் விற்கும் பட்சத்தில் இந்த மனையானது, உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை.
குடியிருக்கும் வீட்டிற்கு, தென்பாகம் காலி மனையாக இருப்பது மோசமான வாஸ்து தோஷத்தையே தருகிறது. இல்லையெனில் இப்படியான தென் பகுதி காலி மனையை வாங்கினீர்கள் என்றால், விரைவாக அதில் நீங்கள் இருக்கும் கட்டிடத்தின் உயரத்தை விட அதிக உயரமாக உடனே கட்டிடம் கட்டிக் கொள்ளவேண்டும்.
ஒருவேளை உங்களது வீட்டின் தெற்குப் பகுதியில் கட்டிடத்தோடு மனைவருகிறது எனில் அந்தக் கட்டிடம் உங்களின் பழைய கட்டிடத்தைவிட உயரமாக இருந்தால் ஒழிய உங்களுக்கு நன்மை தராது. இப்படிப்பட்ட கட்டிடத்தை வாங்கி வாடகைக்கு விட்டாலும் தோஷங்கள் உங்களுக்கானதே.
இதே போல தென்பாகத்தில் உள்ள காலி மனையை வாங்கி அந்த இடத்தில் கார் பார்க்கிங், கிணறு அமைத்துக்கொண்டு பயன்படுத்துவதும் தவறானதுதான்.
இது போல உங்களின் தெற்கு பார்த்த பழைய மனை அல்லது உங்களின் வீடு இருக்கும் போது உங்களின் வீட்டுக்கு பின் பாகத்தில், வீட்டின் வடக்குப் பாகத்தில் காலிமனை இருந்தால் தாராளமாக அந்த மனையை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இந்தக் குறிப்பிட்ட மனையை நீங்கள் வாங்கிய பின் உங்கள் வாழ்வில் அனேக முன்னேற்றங்கள் உண்டாகும். அதிர்ஷ்ட மான நன்மைகள் கூடி வரும்.
ஆனால் அந்த மனையில் ஏற்கனவே கட்டிடங்கள் இருக்குமானால், அந்தக் கட்டிடம் உங்கள் வீட்டை விட பலமாக பெரிதாக இருக்குமானால் கட்டாயம் இது வாஸ்து தோஷத்தைத் தருகிறது. உங்கள் வீட்டைவிட உயரம் குறைவான நிலையில் கட்டிடம் இருந்தால் பாதகம் இல்லை.
ஒருவேளை அந்த வட பாகத்தில் உள்ள மனை காலி மனையாக இருந்து அதில் கார் நிறுத்துவது மற்றும் கிணறு, ஆழ்குழாய் கிணறு அமைத்துக் கொண்டு அந்தத் தண்ணீர் உங்கள் வீட்டுக்குப் பயன்படுமானால் மிக விசேசமான பலன்கள் உண்டாகும். அந்த குறிப்பிட்ட மனையில் தோட்டம், பூந்தோட்டம் அமைப்பதும் நன்மை.
இதுவே விவசாய நிலமாக இருப்பின் உங்களின் நிலத்திற்கு வட எல்லையில் நிலம் விற்பனைக்கு வருமானால் தாராளமாக அதை வாங்கிக் கொள்ளலாம். வானம் பார்த்த பூமி எனும் மானாவரி நிலம் எனில் எந்தத் தொல்லைகளும் இல்லை.
இதுவே தெற்கு பார்த்த உங்களின் வீட்டிற்கு கிழக்குப் பக்கம் உள்ள காலி மனை விற்பனைக்கு வருமானால் மிகச் சிறப்புகள் உண்டாகும்.
இந்தக் கிழக்குப் பக்கக் காலிமனையை வாங்கிய பின் குடும்பத்தில் அனைவரின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். இந்திர பலம் உண்டாகி இளம் பிள்ளைகள் ஏராளமான சாதனைகள் புரிகிறவர்களாகி குடும்பம் ஏற்றம் பெறும்.
உங்கள் வீட்டின் கிழக்குப் பாகத்தில் வீட்டோடு கூடிய மனை விற்பனைக்கு வருமானால் அந்த மனையில் உள்ள கட்டிடம் உங்கள் பழைய மனையில் உள்ள கட்டிடத்தை விட உயரமாக இருக்க கூடாது. உயரம் குறைவாக இருக்க வேண்டும். வாடகைக்கு விடுவதாயினும் கிழக்குப்பக்கமானது மேற்குப் பக்கத்தைவிட உயரமான கட்டிடமாக இருந்தால் சிறப்புகளைத் தருவதில்லை.
நீங்கள் வாங்கும் காலி மனையானது உங்களது பழைய மனையை விட உயர்வாக இருத்தல் வாஸ்து தோஷத்தையே தரும். மலைவாசஸ் தலங்களில் இப்படியான அமைப்பைப் பொருத்திப் பார்க்கலாம்.
ஒரு வேளை நீங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு மேற்குப்பக்கத்தில் காலி மனை விலைக்கு வரும் எனில் இது நல்ல விருத்திகளைத் தருவதில்லை. அதுவும் குறிப்பாக உங்களை விட வயதில் மூத்த நபர்களிடம் இருந்து இப்படியான காலிமனை வாங்கும் போது ஏராளமான கெடுதல்கள் வருகிறது.
இது போல உங்களின் வீடு மேற்கு நோக்கி இருக்குமானால் அந்த வீட்டுக்கு தென்பகுதியில் காலி மனை விலைக்கு வருமானால் அது உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை.
இது போல உங்களின் மேற்குபார்த்த பழைய வீட்டின் வடக்குப்பக்கத்தில் காலி மனை விலைக்கு வருமெனில் என்ன விலை கொடுத்தாயினும் வாங்கலாம். மிக அதிர்ஷ்டம் தருவதாக அமையும்.
இது போல இந்தக் குறிப்பிட்ட வடபாக மனையின் தரைப்பாகம் சற்று பள்ளமாக இருப்பது மிகச் சிறப்புகளைத் தருகிறது. மலைவாழ் மக்கள் இந்த விதியைக் கண்காணிக்கலாம்.
இதேபோல உங்கள் பழைய மனையின் வடபாகத்தில் நீங்கள் வாங்கும் மனையில் உங்களது நிலத்தில் உள்ள பழைய வீட்டைவிட உயர்வான கட்டிடங்கள் இருப்பது விசேசமில்லை. உயர்வான வளர்ந்த மரங்கள் இருப்பதும் நல்லதல்ல.
இந்தக் குறிப்பிட்ட இடத்தை வாங்கிய பின் மொத்த பாகத்தின் வடமேற்கில் உங்கள் இல்லத்தின் பிரதான நுழைவு வாயில் அமைவது மிக உத்தமம்.
விவசாய நிலமாக இருப்பின் நீங்கள் புதிதாக வாங்கிய வடபாக மனையின் மொத்த பாகத்தின் தெற்கில் கிணறு, ஆழ்குழாய்க் கிணறு வருமாயின் இதை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் “தென் தலைக் கேணி தன் தலைத் தடவும்” என்ற விதியின்படி உங்களின் மொத்த உழைப்பும் வீண் போகும் நிலையுண்டாகும்.
இது போல உங்களின் வீடு வடக்கு நோக்கி இருக்கும் போது உங்களின் வீட்டுக்கு மேற்குப்பக்கத்தில் காலி மனை வருமானால் இந்த அமைப்பு விசேசமில்லை. ஆனால் இந்த மனையின் தரைப்பாகம் உங்களின் மனையை விட உயர்வாக இருப்பின் சற்று தோஷம் குறைகிறது.
இது போலவே அந்த இடத்தில் உங்கள் வீட்டை விட உயர்வான கட்டிடங்கள் இருப்பது உத்தமம். தாழ்வான நிலையில் உள்ள கட்டிடங்கள் வாஸ்து தோஷம் தருகிறது. காலிமனையாக இருந்து அந்த மனையில் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து உங்கள் வீட்டுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். விவசாய நிலத்திற்கும் இந்த விதி பொருந்துகிறது.
இது போல வடக்கு பார்த்த உங்களின் வீட்டுக்கு கிழக்குப்பக்கத்தில் காலி மனை அமைவது மிக அதி உத்தமம். அந்தக் காலி மனையை அப்படியே வைத்துப் பராமரித்தால் குடும்பத்துக்கு ஏராளமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும். அந்த மனையில் கிணறு போர்வெல் அமைத்து நீரைப் பயன்படுத்துவது மிக நன்மை. ஆனால் இந்தக் காலிமனையில் உங்களின் வீட்டைவிட உயரமான கட்டிடம் அமைவது முற்றிலும் தவறு. வடகிழக்கு எப்போதும் உயரத்தில் தாழ்ந்திருப்பது மிக உன்னத அதிர்ஷ்டமாகும்.
Next Story