என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    குஷ்பு -சுந்தர் சி
    X
    குஷ்பு -சுந்தர் சி

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - கதை கேளு... கதை கேளு... காதல் கதை கேளு

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    25 வரு‌ஷத்திற்கு முன்பு மும்பை நகரத்தில் எங்கோ ஒரு குடிசை பகுதியில் பிறந்து வளர்ந்து துள்ளித்திரிந்து சிறுமியில் இருந்து இளம்பெண்ணாகி வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை எட்டிப்பார்க்க வேண்டிய தருணம் நெருங்கியது.

    இவர் மும்பையை சேர்ந்தவர்-எனக்கு சிகை அலங்கார நிபுணராக இருந்தவர். திரைத்துறையில் நான் காலடி எடுத்து வைத்தது முதல் அவர் தான் எனக்கு வித விதமாக சிகை அலங்காரம் செய்து அழகுபடுத்துவார்.

    அவரை சிகை அலங்கார நிபுணராக மட்டும் நான் பார்த்ததில்லை. ஒரு தாயைப்போல் அருகில் இருந்து என்னை பார்த்துக்கொண்டவர். எப்போதுமே என் நிழலாக என்னுடனேயே இருப்பார்.

    நான் சென்னைக்கு குடிவந்ததும் அவரும் சென்னைக்கு வந்துவிட்டார். படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லும்போது என்னுடனேயே இருப்பார். நான் சாப்பிடுவது முதல் என்ன குடிக்க வேண்டும் என்பதையெல்லாம் பக்கு வமாக பார்த்து பார்த்து சொல்லித்தருவார்.

    சுருக்கமாக சொன்னால் எனக்கு எல்லாமுமாக இருந்தவர். பல வி‌ஷயங்கள் அவரிடம் இருந்து நான் கற்று இருக்கிறேன். அந்த அளவுக்கு ஒவ்வொன்றையும் பக்குவ மாக எடுத்துச்சொல்வார்.

    அப்படித்தான் என்னிடம் ‘நீ இப் போதும் சின்னப்பெண் இல்லை. உனக்கு 25 வயது ஆகிறது. சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும். அதைப்பற்றியும் யோசி. எப்போதும் நடிப்பு, பணம் என்றே இருந்துவிடக்கூடாது. அதையும் தாண்டி வாழ்க்கை உள்ளது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எந்தெந்த பருவத்தில் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட வேண்டும். காலம் மீண்டும் வராது’ என்பார். அடிக்கடி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நடித்தது போதும். இனி வாழ்க்கையில் செட்டில் ஆகப்பார் என்று வற்புறுத்திக்கொண்டே இருந்தார்.

    ‘முறைமாமன்’ பட ஷூட்டிங் முதல்நாள் நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பு தளத்தில் நானும், உபின் ஆன்டியும் அமர்ந் திருந்தோம்.

    அப்போது எங்கள் முன்பு ஒருவர் வாட்ட சாட்டமாக அங்கும், இங்கும் சென்று கொண்டு இருந் தார். கட்டு மஸ் தான உடல்வாகு... நல்ல உயரமாக, கம் பீரமாகத்தான் இருந் தார். நான் எதுவும் நினைக்கவில்லை. ஆனால் ஆன்டிதான் அவரை பார்த்ததும் ‘குஷ்பு, உனக்கும் இந்த மாதிரி பையன் மாப்பிள்ளையாக கிடைத்தால் நல்லா இருக்கும்’ என்றார்.

    அதைக்கேட்டதும் நான் சிரித்துக்கொண்டே அய்யோ ஆன்டி அவர் பாவம். அவர் தான் படத்தின் டைரக்டர் என்றேன். அது மட்டுமல்ல அவர் எவ்வளவு உயரமாக இருக்கிறார் பாருங்கள் என்றேன்.

    உடனே ஆன்டி ‘ஏன்டி, அமிதாப்பச்சன்-ஜெயா ஜோடி நன்றாக இல்லையா... அமிதாப்பை விட ஜெயா குள்ளம் தான். ஆனாலும் அந்த ஜோடி எவ்வளவு அழகாக இருக்கிறது. அதேபோல் இந்த மாதிரியான பையன் உனக்கு கிடைத்தால் நீங்களும் சூப்பர் ஜோடியாகத்தான் இருப்பீர்கள்’ என்றார்.

    இப்படி பேச்சுவாக்கில் எங்களுக்குள் உரையாடல் நடந்தது. ஆனால் என் மனதில் அந்த மனிதர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. நான் இப்படி சொல்வதில் இருந்தே யார் அவர்? யாரைப்பற்றி சொல்கிறேன் என்பது உங்களுக்கும் தெரிந்து இருக்கும்.

    அவர் தான் என்னுடைய கணவர் சுந்தர்.சி. அவருக்கு அதுதான் முதல் படம், அவரைப்பற்றி எனக்கு முன்னே பின்னே தெரியாது. ஒரு டைரக்டர் என்ற ரீதியில் அவருடன் பேசுவதோடு சரி.

    அவருடன் நட்பு ரீதியாக பேசிக்கொள்வேன். அதே நேரம் அவருடன் பணியாற்றிய அனைவரும் இளம் வயதினர். யூனிட் முழுவதும் எப்போதும் கலகல என்று இருக்கும். செந்தில் அண்ணா, கவுண்டமணி அண்ணா, ஆச்சி மனோரமா, ஜெய்ராம் என்று எல்லோரும் செட் டையே கலகலப்பாக வைத்தி ருப்பார்கள்.

    கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தால் போதும் அரட்டை அடிப்பது, கிரிக்கெட் விளையாடுவது என்று ஷூட்டிங் தளமே அமர்க்களப்படும்.

    சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கோவையில் படித்து கொண்டிருந்த போது ‘வரு‌ஷம்-16’ படத்தை சுந்தர்சி பார்த்திருக்கிறார்.

    அந்த படத்தில் என்னை பார்த்ததும் ‘அந்தப்பொண்ணு எவ்வளவு அழகா இருக்கிறார்... கட்டினால் இவளைப் போல் பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்று தனது நெருங்கிய நண்பரான அய்யப்பனிடம் கூறி இருக்கிறார்.

    அதன் பிறகு காலங்கள் உருண்டது. சுந்தரும் படித்து முடித்து விட்டு திரைத் துறைக்குள் வந்திருக்கிறார்.

    என்னைப்போல் பெண்ணைத்தான் கட்டிக்க வேண்டும் என்று திரையில் பார்த்து ஆசைப்பட்டவர் என்னையே முறைமாமனாக (படம்) வந்து டைரக்டு செய்தது தான் காலம் போட்ட முடிச்சு. ஷூட்டிங் தளத்தில் வைத்தும் தனது ஆசையை நண்பர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் ‘டேய் இது உனக்கு முதல் படம். அது எப்படி வரும் என்று தெரியாது. அதைப் பொறுத்துதான் உனது வாழ்க்கை. குஷ்பு சாதாரண நடிகையா? நம்பர் ஒன் கதாநாயகி. அவருக்கும் உனக்கும் ஏணி வைத்தால் கூட எட்ட முடியாது.

    அந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருக்கிறார். உன் நினைப்பு உன் பொழைப்பை கெடுத்துவிடும். இந்த வி‌ஷயம் அவங்களுக்கு (குஷ்புவுக்கு) தெரிந்தால் அவ்வளவு தான். ஒன்று படத்தில் நடிக்க மாட்டார்கள். அல்லது உனக்கு அடிவிழும். இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் நடக்கும் பார்த்துக்க’ என்று அறிவுரை கூறி இருக்கிறார். ஆனால் வந்திருப்பது காதல் ஆயிற்றே! அது எதை யோசிக்க விடும்....? அந்த வகையில் சுந்தரும் தனது எண்ணத்தில் உறுதியாக இருந்திருக்கிறார்.

    என்னிடம் வந்து ‘மேடம் ஒரு கதை இருக்கிறது. உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். எப்போது வரலாம்’ என்றார். நானும் கதை சொல்லத்தானே வரு கிறார் என்று ஷூட்டிங் முடிந்ததும் மாலையில் வாருங்கள் என்றேன்.

    குறிப்பிட்டபடியே அன்று மாலையில் கதை சொல்ல வந்தார். நானும் கதை கேட்க தயாராக இருந்தேன். சுந்தர் கதை சொல்ல தொடங்கினார். கதையும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இடை வேளை வரை சொல்லி முடித்தார்.

    அதன்பிறகு மறுநாள் வச்சுக்கலாம் என்று சொல்லிவிட்டார். மறு நாளும் வந்தார். கதை சொன்னார். அதே கதை. அதே போல் இடை வேளை வரை சென்று நின்றுவிட்டது.

    என்ன சார்? கதை இடைவேளைக்கு அப்புறம் நகரமாட்டேங்குது என்றேன். உடனே இல்லை மேடம். கிளைமாக்ஸ் இன் னும் உறுதி ஆக வில்லை என்றார். அவரிடம் ஏற்பட்ட அந்த தடுமாற்றம் என்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

    ஆனால் இந்த தம்பிக்கு குஷ்புமீது காதல் வந்திருக்கிறது என்று உபின் ஆன்டி மட்டும் சந்தேகப்பட்டுள்ளார். அவரது வயதும், அனுபவ மும் அவரை புரிய வைத்துள்ளது. ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    சினிமாவில் எவ்வளவோ காதல் காட்சிகளில் நடித்து இருக்கிறேன். காதல் எப்படி வருகிறது. அதை எப்படி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது என்பதை எத்தனையோ கோணங்களில் வெளிப் படுத்தி இருக்கிறேன்.

    அது நிழல் வாழ்க்கை... இது நிஜ வாழ்க்கையாச்சே. காதல்... எங்களுக்குள் எப்படி வந்தது? எப்படி வெளிப்படுத்தினோம். அது ஒரு சுகமான அனுபவம். அதை அடுத்த வாரம் உங்களோடு பகிர்ந்துகொள்ள வருகிறேன்.

    மச்சான்... காதல் ‘ஓர்க் அவுட்’ ஆகிவிட்டது!

    பொள்ளாச்சியில் நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பு குழுவில் இருந்த சுந்தர் பாடல் பதிவுக்காக சென்னைக்கு புறப்பட்டார். திரும்பி வர 3 நாட்கள் ஆகும் என்று கூறி சென்றிருந்தார்.

    கதை சொல்ல வந்த நேரத்தில் என்னையும் அறியாமல் எனக்குள் ஏதோ ஒரு தாக்கம் ஏற்பட்டிருந்தது.

    மறுநாள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததும் சுந்தர் இல்லை. அவரை பார்க்க முடியாதது ஒரு மாதிரியாக இருந்தது.

    அதை என்னுடன் பேசிக்கொண்டிருந்த செந்தில் குமாரிடம் நேரடியாகவே சொன்னேன்

    சுந்தர் நம்மோடு இல்லாதது ஒரு மாதிரி இருக்கிறது அல்லவா? என்றேன்.

    அதை கேட்டதும் ‘நீ சுந்தரை மிஸ் பண்றியா...? என்றார்.

    அப்படித்தான் தோணுது என்றேன்.

    அதை கேட்டதும் செந்தில் எனக்கும் சுந்தருக்கும் இடையே காதல் ஒர்க் அவுட் ஆகிவிட்டதாகவே நினைத்து இருக்கிறார். இரவோடு இரவாக சென்னையில் இருந்த சுந்தருக்கு போன் பண்ணி ‘மச்சான்... குஷ்பு உன்னை மிஸ் பன்றதா பீல் பண்றாடா.... சீக்கிரம் திரும்பி வா’ என்று கூறி இருக்கிறார்.

    அதை கேட்டதும் 3 நாள் வேலை இருந்தும் வேலை முடிந்து விட்டதாக பொய் சொல்லிவிட்டு சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு மறுநாளே திரும்பி வந்துவிட்டார்.

    காதல் படுத்திய பாடு....
    Next Story
    ×