search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முத்திரை
    X
    முத்திரை

    ஒமைக்ரான் பாதிப்பை தடுக்கும் முத்திரைகள்- 118

    தலைவலி, தலைபாரம், தலைக்கனம் உள்ளது. சிலருக்கு மண்டை முழுவதும் வலி உள்ளது. ஜீரண மண்டலம் பாதிக்கப்படுகின்றது. பசி இருப்பதில்லை. வயிறு உப்பிசமாக உள்ளது.


    ஒமைக்ரான் தொற்று வந்தவர்கள் அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வர செய்ய வேண்டிய யோக முத்திரைகள் மற்றும் இயல்பு நிலைக்கு வந்தவர்களும் செய்ய வேண்டிய முத்திரைகள்.

    இப்பொழுது நாடெங்கும் கொரோனா வைரஸ் உருமாறி ஓமைக்ரானாக வருகின்றது என்ற பய உணர்வு நிறைய மக்களுக்கு இருக்கின்றது. ஒரு சிலருக்கு தொற்று உறுதியாகி அதனை பரிசோதனை செய்து ஓமைக்ரான் என்று உறுதியாகி அதற்காக ஒரு வாரம் தனிமைப்படுத்தி பின் பரிசோதனையில் தொற்று குணமாகிவிட்டதாக தெரிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். அப்படி திரும்பியவர்களுக்கு உடல், மனோரீதியாக சில பிரச்சினைகள் ஏற்படுகின்றது. மீண்டும் அவர்கள் இயல்பு நிலைக்கு வருவதற்கு நாம் எடுக்க வேண்டிய யோக நெறிமுறைகளை பற்றி தெளிவாக காண்போம்.

    பொதுவாக, வைரஸ் முதலில் கொரோனாவாக வந்தாலும் பின்பு வேறு உருமாற்றம் ஆகிறது. முதலில் ஒரு பெயர் வைத்தாலும் மனித உடலில் புகும் பொழுது அதற்கேற்ப பல மாறுதல்கள் ஏற்படுகின்றது. இப்பொழுது, இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதனின் உடலில் வைரஸ் தொற்று வந்து சென்றவுடன் பல வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றது. நிறைய பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசியில் பேசும் பொழுது கூறியதை மையப்படுத்தி பார்ப்போம்.

    தொண்டை வலி அதிகமுள்ளது. சளி தொடர்ந்து அதிகமாக உள்ளது. இருமல் அதிகமாக உள்ளது.

    தலைவலி, தலைபாரம், தலைக்கனம் உள்ளது. சிலருக்கு மண்டை முழுவதும் வலி உள்ளது. ஜீரண மண்டலம் பாதிக்கப்படுகின்றது. பசி இருப்பதில்லை. வயிறு உப்பிசமாக உள்ளது.

    மூட்டுக்கள் வலி, இடுப்பு எலும்பு வலி, தோள்பட்டை எலும்பு வலிகள் அதனுள் குடைவது போல் உள்ளது. உடல் அசதி, உள் காய்ச்சல் இருக்கிறது. தசைகள் இருக்கமாக பிடிப்பாக உள்ளது. தூக்கமின்மை. பய உணர்வு, எரிச்சல், விரக்தி, உணர்வு உள்ளது.

    மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் நிறைய நபர்களுக்கு இப்பொழுது வைரஸ் வந்து சிகிச்சை எடுத்து தனிமையில் இருந்து குணமடைந்த பின்னரும் இருக்கிறது. இதனால் தனது அன்றாட வேலைகளை சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது. இதற்குரிய எளிய யோக முத்திரைகளையும், யோகப் பயிற்சிகளையும் நாம் காண்போம். இதன் மூலம் நமது உடல் உறுப்புகளில், நாளமில்லா சுரப்பிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் நல்ல பிராண ஆற்றலை பெற்று சிறப்பாக இயங்கும்.

    தொண்டை வலி, சளி, இருமல் நீங்க:

    நிறைய நபர்கள் இப்பொழுது வைரஸ் தொற்று வந்து சிகிச்சை எடுத்து குணமானபின் தொண்டை வலி அதிகமுள்ளது. சளியும் உடலில் தொடர்ந்து இருப்பதாக கூறுகின்றார்கள். இதற்கு சூன்ய முத்திரையும், பிராங்கியல் முத்திரையும். ஜலேந்திர பந்தமும் செய்ய வேண்டும். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    சூன்ய முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் நடுவிரலை நன்கு உள்ளங்கையில் படும்படி வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி கட்டை விரல் பக்கத்தில் வைத்து, கட்டை விரலையும் நடு விரலையும் தொடவும். ஆள்காட்டி விரல் தரையை நோக்கி இருக்கவும். இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    முத்திரை

    ஜலேந்திர பந்தம்:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். இரு கைகளும் சின் முத்திரையில் வைக்கவும். ஆள்காட்டி விரல், கட்டை விரல் நுனிகளை இணைக்கவும்.

    இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். பின் மூச்சை அடக்கி தலையை குனிந்து முடிந்தளவு தாடையால் தொண்டையில் ஒரு அழுத்தம் கொடுக்கவும். பத்து வினாடிகள் மூச்சை அடக்கி இருக்கவும். பின் மெதுவாக மூச்சை மூக்கினால் வெளியிட்டு தலையை நேராக கொண்டு வரவும். இதேபோல் மூன்று முறைகள் காலை / மாலை பயிற்சி செய்யவும்.

    ஜீரண மண்டலம் பாதிப்பு, பசியின்மை:

    இப்பொழுது வைரஸ் வந்து குணமானபின் நிறைய நபர்களுக்கு ஜீரண மண்டலம் பாதிப்பு, பசியின்மை, சிறிது சாப்பிட்டாலும் வயிறு உப்பிசமாக உள்ளது. இதற்கு அபான முத்திரையும், பிருதிவி முத்திரையும் செய்ய வேண்டும்.

    அபான முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் நடுவிரல், மோதிரவிரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் செய்யவும்.

    பிரிதிவி முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிர விரல் பெருவிரல் நுனியை இணைக்கவும் மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும், காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். நல்ல பலன்கள் கிடைக்கும்.

    பிரிதிவி முத்திரை

    எலும்புகள் வலி: நிறைய நபர்களுக்கு இப்பொழுது வைரஸ் வந்து சிகிச்சை எடுத்து சரியான பின் எலும்பு வலி, மூட்டுக்கள் வலி, முதுகுவலி ஏற்படுவதாக கூறுகின்றனர். இதற்கு அனுசாசன முத்திரையும், வாயு முத்திரையும் செய்ய வேண்டும்.

    அனுசாசன முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் சுண்டு விரல் மோதிர விரல் நடுவிரலை மடக்கி கட்டைவிரலை மோதிர விரல் வெளிப்பகுதியில் வைக்கவும். ஆள்காட்டி விரல் நேராக இருக்கட்டும். கைகளை படத்தில் உள்ளதுபோல் தோள்பட்டை அருகில் வைக்கவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யுங்கள்.

    நிறைய நபர்கள் இப்பொழுது வைரஸ் வந்து சிகிச்சை எடுத்து தனிமைப்படுத்தி சரியான பின், மனதில் ஒரு பய உணர்வும்., தூக்கமின்மையும் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதற்கு பிராண முத்திரையும், சின் முத்திரையும் செய்ய வேண்டும்.

    பிராண முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடிமெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளி விடவும் பத்து முறை. பின் மோதிரவிரல் சுண்டு விரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். இரவு படுக்குமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்

    சின் முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல் பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    எளிமையான மூச்சுப்பயிற்சி: நிமிர்ந்து அமரவும். இரு நாசி வழியாக மெதுவாக ஆழ்ந்து மூச்சை இழுக்கவும். மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள் இவ்வாறு ஆழ்ந்த சுவாசம் செய்யவும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்யவும். ஒரு நாளில் காலை மூன்று முறைகள், மதியம் மூன்று முறைகள், மாலை மூன்று முறைகள் செய்யவும். இதனால் உடல் முழுக்க நல்ல பிராண சக்தி கிடைக்கும். சோம்பல் நீங்கும். சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும். சளி பிடிக்காது, நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாயும். நற்சிந்தனைகள் பிறக்கும். பயம், எதிர்மறை எண்ணங்கள் அகலும்.

    அன்றாட வாழ்வியல் முறை: வைரஸ் வந்துவிட்டது என்று பயப்படாதீர்கள். நீங்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை முடிந்து சரியான பின், உடலையும், மனதையும், உற்சாகமாக வைத்துக் கொள்ளும் முத்திரை, மூச்சுப்பயிற்சி பயின்று இதன் மூலம், மனதை சிறப்பாக இயங்கச் செய்யலாம்.

    நம் உடலில் உள்ள பஞ்ச பூதங்களை சரியான விகிதத்தில் இயங்கச் செய்ய முத்திரைகள் உள்ளன. தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுங்கள். காலைக் கடன்களை முடித்துவிட்டு மேற்குறிப்பிட்ட முத்திரைகளை மூச்சு பயிற்சியை பயிற்சி செய்யுங்கள். சாத்வீகமான உணவை உட்கொள்ளுங்கள். நாட்டு வாழைப்பழம், கருப்பு திராட்சை, பேரிச்சம்பழம், கொய்யா பழம், ஆரஞ்சு பழம் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள், காலை / மாலை இருவேளை குளிக்கவும். உடல், ஆடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

    மிளகு, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, சுக்கு உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை மூன்று, மிளகு ஐந்து ஒரு கிராம்பு வைத்து உண்ணுங்கள் வாரம் இருமுறை.

    இரவு சுக்கு கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு டம்ளர் குடியுங்கள். தியானம் செய்யுங்கள். வாழ்வு வளமாக இருக்கும்.

    Next Story
    ×