search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  கொரோனாவை ஒழிக்க தை பிறந்தது
  X
  கொரோனாவை ஒழிக்க தை பிறந்தது

  மருத்துவம் அறிவோம் - கொரோனாவை ஒழிக்க தை பிறந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்கள் பீதியின்றி இருக்க வேண்டும். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற கட்டுரையினை ஆக்கப்பூர்வமாக எழுதுவோம் என ‘மாலை மலர்’ நிறுவனம் நினைத்ததன் காரணமாகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
  பனிரெண்டு மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் மிகப்பெரிய சிறப்பு உண்டு. மார்கழி மாதம் என்றாலே தேவர்களின் விடியற்காலை நேரம் என்போம். ஆண்டாள் பாடிய ‘திருப்பாவை’யை வேதங்களின் வித்து என இன்னும் தொடர்ந்து பாடி இறை ஆராதனை செய்கின்றோம்.

  திருவெம்பாவை பாடி இறைவனை ஆராதனை செய்கின்றோம். கார்த்திகை மாதம்- கார்த்திகை தீபம் என்பது அடி, முடி காண முடியாத சிவனையும், ஆறுமுகக் கடவுள் முருகனையும் வழிபடும் சிறப்பு பெற்றது. இப்படி ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒரு தனிசிறப்பு உண்டு. அந்த சிறப்பை பெற்றது தான் தை மாதமும். அதுவும் தை மாத பிறப்பு அன்றே, சொல்லப் போனால் அதன் முதல் நாள் முதலே நமது பண்டிகை கொண்டாட்டம் தொடங்கிவிடும். தைத்திருநாளின் முதல் நாள் பிறப்பதற்கு முன்பு ‘போகி’ என்ற பெயரில் பழையனக் கழிதல் செய்தோம். வீட்டில் தேவை இல்லாத பொருட்களை எரித் தோம். இன்று கரி, புகை, மாசு இவற்றினை மனதில் கொண்டு அவைகளை அப்புறப் படுத்தினோம். ஆனால் நம் மன தில் நாம் எரித்திருக்க வேண் டியவை இவை தான்.

  ‘கோபத்தை எரிப்போம்

  குழப்பத்தை எரிப்போம்

  தீமைகளை எரிப்போம்

  அறியாமையை எரிப்போம்

  என்பதே அவைகள். தூய்மை என்பது புறத்தூய்மை, அகத்தூய்மை இரண்டும் சேர்ந்தால் மட்டுமே முழுமை பெறும். இதனை நாம் 13-ந் தேதி போகி அன்று செய்தோமா? இல்லை யெனில் இப்போதே சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்து இந்த எதிர்மறை எண்ணங்களை, நிகழ்வுகளை பொறுமையாய், ஒவ்வொன்றாய் முழுமையாய் எரித்து விடுவோம். நல்லதை செய்ய நாள், நேரம் தேவையில்லை. நினைத்த உடன் செய்துவிட வேண்டும். செய்து விட்டு உங்களை நீங்களே கவனியுங்கள். புதுப் பொலிவுடன் ‘கலகல’வென இருப்பீர்கள். முதல் முயற்சியாக உங்கள் செயல் ‘தை’ பிறந்து வழி காட்டியது அல்லவா?

  எல்லோரும் சற்று முணுமுணுப்பது காதில் சத்தமாய் கேட்கிறது. 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. உற்றார், உறவினர்களை ஏன் பெற்றோர்களை கூட பலரால் சென்று பார்க்க முடியவில்லை. நேரம் செலவழிக்க முடியவில்லை. ஒன்றாக கூட்டமாய் சேர்ந்து சிரித்து, மகிழ்ந்து உணவருந்த முடியவில்லை. அநேகருக்கு வேலையே இல்லை. இந்த வேதனைகளை மனதால் எரித்தால் கூட கண் கூடாக அன்றாடம் நிகழும் போது சிரிக்க முடியுமா என்ன? என்பது தான் அந்த ஆதங் கத்தின் ஒலி.

  ஒன்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த கொரோனா பாதிப்பு ஒருவரின் வீட்டிற்கு மட்டுமோ, தெருவில் மட்டுமோ, ஊரில் மட்டுமோ, நாட்டில் மட்டுமோ நிகழவில்லை. உலகெங்கிலும் மூலை முடுக்குகள் பாக்கி இல்லாமல் பாதிப்பு நிகழ்ந்து கொண்டுதான் வருகின்றது. பல இடங்களில் உணவு பஞ்சம் கூட உள் ளது.

  அநேக மக்கள் கட்டுப் பாட்டு விதிமுறைகளை முறையாய் பின் பற்றுகின்றனர். சிலரின் வித்தியாச போக்கு எல்லா நாடு களிலும் இருக்கின்றது. இம் மாதிரியான, இதை விட கூடுதலான கடுமையான சூழ்நிலைகளை நம் முன்னோர்கள் தாக்குப் பிடித்து தாண்டி தான் நம்மை உரு வாக்கி உள்ளனர்.

  இன்று மருத்துவ விஞ்ஞானம் மிகவும் முன்னேறி உள்ளது. எந்த செய்திகளையும் வீட்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே நாம் பெற்றுக் கொள்கிறோம். ஆக நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்தான். நம் நம்பிக்கையும், நம் முயற்சியும், நம் உழைப்பும் நம்மை என்றும் உயர்வாக மட்டுமே வைக்கும். நாம் என்னென்ன முயற்சிகள் செய்யலாம்? செய்து கொண்டிருக்கின்றோம் என பார்ப்போம்.

  * இனியாவது யோகா, பிராணயாமம் செய்து பழகுவோம். இது சுவாச மண்டலத்தினை, உடலினை நன்கு பாதுகாக்கும்.

  * ஜூரம், தொண்டை கட்டு, மூக்கில் நீர் வடிதல், மூச்சுவிடுவதில் சிரமம், இருமல் இப்படி எது இருந்தாலும் உடனே நாம் மருத் துவரை அணுகுகின்றோம்.

  * இன்னும் சொல்லப் போனால் எந்த ஒரு சிறு உடல்நல குறைவினையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. 5 வருடம் முன்பு வாங்கிய மருந்து சீட்டினைப் பார்த்து மருந்து வாங்குவதில்லை. மருந்துக் கடைகளும் அவ்வாறு மருந்துகள் கொடுப்பதில்லை. ஆமாம்தானே.

  பல செய்திகளைப் படித்து நாமே மருத்துவர் ஆகி சுய வைத்தியம், பொது வைத்தியம் செய்வதே இல்லை. டெல்டா, ஒமைக்ரான் என யார் யாரோ வைக்கும் பெயர்களை போல் நாமே புதுப் புது பெயர்கள் சூட்டுவதில்லை. தடுப்பூசி போடுவதை நாமும் கடைபிடித்து மற்றவர்களையும் ஊக்குவிக்கின்றோம். தடுப்பூசி பற்றி நமக்கு முழுமையாக விவரம் தெரியாத போது உலக அளவில் முனைந்து செயலாற்றும் மருத்துவர்கள் போல் பேச மாட்டோம். குறிப்பாக வதந்திகளை பரப்ப மாட்டோம். அப்படியா! நம்மை பற்றி நாமே அறிந்ததால்தான் இப்படி உறுதியாகப் பேசுகின்றேன்.

  இந்த பண்டிகை விடுமுறையில் வெளியில் சுற்றினோம் என்று முறையாய் வீட்டில் இருந்து பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபாடு செய்து, கால்நடைகளை நன்கு சீராட்டி பூஜை செய்தோம் அல்லவா? இது ஆடம்பரம் அமர்க்களம் இல்லாமல் உள்ள திருப்தி கொண்டதாய் இருக்கும்படி பொங்கல் சமுதாயத்திற்காகவும் நமக்காகவும் நாம் விதிமுறைகளை கடைபிடித்த பண்டிகை.

  இப்படியெல்லாம் நாம் செய்வதுதான் கொரோனாவிற்கு நாம் சொல்லும் பதில். நாம் செயல் வீரர்களாக்கும்.

  இதுபோல் இனியும் முறையான முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாய் எப்பொழுதும் வைத்திருத்தல் சமூக இடைவெளி இவற் றினை நாமா கடைபிடிக்காமல் இருப்போம்? யார்கிட்ட ம்ம்ம்...?

  டாக்டர் கமலி ஸ்ரீபால்

  நமக்கு தெரியும். இன்ன மும் புதுப்புது பெயர்களில் மாறுவேடமிட்டு வரும் இந்த கொரோனாவை வருமுன் தவிர்க் கத்தானே நாம் விதிமுறைகளை கடைபிடிக்கின்றோம். சின்ன அறிகுறிக்கும் கவனம் கொடுக் கின்றோம். இதன் பெயர்தான் தன்னம்பிக்கை.

  இந்த கொரோனாவை பலமே இல்லாமல் ஆக்கி நம் வாழ்வினை மகிழ்ச்சியாய் தொடர்வோம் என்ற நம்பிக்கை, உறுதி. நம்மிடம் இல்லாவிட்டால் பல பாதிப்புகளால் இந்த மனித வர்க்கமே இல்லாமல் போய் இருக்கும்.

  நம் முன்னோர் வாக்குப்படி இது உத்தராயணக் காலம். சூரியன் வடக்கு நோக்கி நகர்கின்றார். இதனை புண்ணிய காலமாக நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். நினைத்துப் பாருங்கள், அறுவடை நடக்கின்றது. ஆங் காங்கே திருமணங்கள் இனி நிகழும் என்பதால் மங்கள வாத்திய ஓசைகள் கேட்கின்றது. பலருக்கு திருமணத்திற்கு நேரில் செல்ல முடியவில்லையே என்ற குறை சற்று இருக்க லாம்.

  புராணத்தில் படித்திருப்பீர்கள். சிவன், பார்வதியின் திருமணத்தினைக் காண ஒட்டுமொத்த சமுதாயமும் வடக்கே சென்றதால் பூமியினை சமநிலைப் படுத்த சிவபெருமான் அகத்தியரை தெற்கு புறம் செல்லச் சொன்னார். அகத்தியருக்கும் சிவன்- பார்வதி கல்யாண காட்சியினை காண ஆவல் இருக்கும் அல்லவா? அதனால் அவர் இருந்த இடத்தில் இருந்தே முழு கல்யாணத்தையும் நேரடி ஒளிபரப்பு போல் பார்த்தார். இன்று இறைவனும், மாமுனியும் நமக்கு உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை உட்கார்ந்த இடத்தில் இருந்தே காணும் பேறினைக் கொடுத்துள்ளனர். இதனை விஞ்ஞான முன்னேற்றம் என்று மற்றவர்கள் கொள்ளலாம். பின் என்ன குறை நமக்கு? நமக்கு கிடைத்துள்ள நல்லவைகளை எண்ணிப் பார்ப்போம்.

  ஆகவே தான் ‘நல்லதே நடக் கும்’ என்ற நம் பிக்கையோடு மகிழ்ச்சியாய் இருப்போம். கடந்த காலங்களில் பல குடும்பங்களில் உயிரிழப்பு கூட ஏற்பட்டிருக் கின்றது. அவர்களுக்கு நாம் ஆறுதலாய், உறுதுணையாய் இருப் போம். மனம் ஒடிந்து எதிர் மறை எண்ணங்கள் உரு வாகுவது என்பது இந்த தொடர் வைரஸ்களைக் காட்டிலும் கொடுமையானது என்பதனை உணர்வோம்.

  இந்த மகர ஜோதி தான் உலகினையே வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என நம்புவோம். பலரின் இதுபோன்ற பிரார்த்தனை, எண் ணங்கள் இவை மிக மிக சக்தி வாய்ந்தவை. ஆகவே தான் கொடிய கொரோனாவினை மனதார நினைத்து தீயில் எரித்து விடுங் கள்.

  ரொம்பவும் பயப்படுபவர்களால் எந்த பிர யோஜனமும் இல்லை. துணிவும் வேண்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கையினை மேற் கொள்ளவும் துணிவு தேவைப்படுகின்றது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாத இவ்வாழ்க்கைக்குத் தேவையானது. ‘பணிவோடு கூடிய துணிவும் கூடத்தான். இந்தத் துணிவு கொரோனாவினை எதிர் கொள்வதிலும் வேண்டும்.

  சிறிது ஜலதோ‌ஷம் இருந்தாலும் கண்டிப்பாய் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். ஜூரம், ஆக்சிஜன் அளவு இவற்றினை பரிசோதனை செய்து உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு அவர் வழிகாட்டுதலிலேயே துணிவோடு கொரோனாவை அழிப்போம்.

  தடுப்பூசி 2 முறை போடாதவர்கள் போட்டுக் கொள்வோம். பூஸ்டர் டோஸ் எனப்படும் முன் எச்சரிக்கை தடுப்பூசியை தானே முன்வந்து போட்டுக் கொள்ள வேண்டும்.

  இதுவே 2022-ல் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதன் தீர்மானமாக எடுத்து பயன்பெறுவோம்!!! 
  Next Story
  ×