search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  குஷ்பு
  X
  குஷ்பு

  குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - சொந்த வீட்டில் வெறும் தரையில்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
  நான் சென்னைக்கு குடிபெயர்ந்த போது எனக்கு வயது 16. அந்த வயதில் ஒரு குடும்ப பாரத்தை சுமந்தது, நல்லது எது? கெட்டது எது? என்று தனி ஒருத்தியாக இருந்து முடிவெடுத்தது எல்லாமே வாழ்க்கையில் நான் சந்தித்த அனுபவங்களால்தான். எனது முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக இருந்தது நான் சந்தித்த ஒவ்வொரு அனுபவமும்தான் என்பதும் உண்மை. தொடர்ந்து கிடைத்த பட வாய்ப்புகள் மூலம் கொடி கட்டி பறந்தேன். ஒவ்வொரு படங்களும் எனக்கு வெறும் படங்கள் என்பதை விட பாடங்களாக அமைந்தன என்பதும் உண்மை.

  ஏனெனில் அந்த படங்களும், அதன் மூலம் கிடைத்த அனுபவங்களும் வாழ்க்கையில் என்னை அடுத்தடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது. சென்னைக்கு வந்தது முதல் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடுவது போல் ஓடி ஓடி உழைத்தேன். இரவு, பகல் என்று பாராமல் ஓய்வு இல்லாமல் உழைத் தேன். உழைப்புக்கு பலன் கிடைக்காமல் போகாது என்பதற்கு எனது வாழ்க்கை ஒரு சாட்சி.

  1986-ல் சென் னைக்கு குடி வந்ததும் ராஜா அண்ணாமலைபுரத்தில் வாடகை வீட்டில் குடியேறினோம். அந்த வீட்டில் இருந்த போதுதான் என் தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் நான் சம்பாதித்த பொருள், பணம் எல்லாவற்றையும் அபகரித்து என்னை நடுத்தெருவில் நிற்க வைத்ததோடு, எந்த காலத்திலும் நான் முன்னேற மாட்டேன் என்று சாபமிட்டு சென்றார். அந்த வார்த்தைதான் என் இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

  வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல் பல மாதங்கள் தவித்தோம். ஆனாலும் சோர்ந்து விடவில்லை. எனது நம்பிக்கையையும் இழக்கவில்லை.

  ஓய்வு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அந்த எண்ணம் வந்து வந்து போனது. அதனால்தான் சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறித்தனத்தோடு உழைத்தேன். அப்போது எனக்கு இருந்த ஒரே கனவு, லட்சியம் எல்லாம் சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.

  ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து மாறி ஆழ்வார்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். இனி போகும் வீடு சொந்த வீடாகத்தான் இருக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டேன். 5 ஆண்டுகள் கடினமான உழைப்பு.

  வீடு... வீடு... வீடு வாங்க வேண்டும் என்று எப்போதும் நான் புலம்பிக் கொண் டிருப்பதை பார்த்து என் அம்மாவும், அண்ணன் களும் இப்போது நீ எவ்வளவோ உயரத்திற்கு வந்திருக் கிறாய். வருத்தப்படாதே இனி உனக்கு வீடு ஒரு பொருட்டல்ல. நிச்சயமாக வாங்க முடியும் என்று அவ்வப் போது என்னை சமாதானப் படுத் தினார்கள்.

  நான் வீடு வாங்கும் அந்த நாளும் வந்தது. 1991-ல் அதாவது 5 ஆண்டுகள் கழித்து எனது கனவு பலித்தது. வீடு வாங்க வேண்டும் என்ற எனது லட்சியம் அப்போதுதான் நிறைவேறியது. அடையாறு போட் கிளப்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கினேன். அந்த குடியிருப்பில் மொத்தம் 4 வீடுகள்தான். வீடு வாங்கிய அன்றைய தினத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை வார்த்தைகளால் எப்படி சொல்வதென்று எனக்கு தெரிய வில்லை. நான் ஜெயித்து விட்டேன் என்று சத்தம் போட்டு கத்த வேண்டும் போல் இருந்தது. என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. பழைய நினைவுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போனது.

  ஒருவேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் அலைந்த காலமும், அதைத்தொடர்ந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து உயர்ந்த நிலையை அடைந்ததும் என்னை அன்றைய தினம் நினைத்து, நினைத்து ஆனந்தப்பட வைத்தது. தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் மும்பையில் எங்கோ ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த குஷ்பு இப்படி கொண்டாடப்படுவாள் என்று நான் நினைத்தது இல்லை.

  கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பிடித்தேன். குஷ்பு என்றால் தமிழகத்தில் தெரியாதவர்கள் இல்லை என்பது எவ்வளவு பெரிய பெருமை. அதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  போட் கிளப் என்றாலே பிரபலங்களும், பெரும் பணக்காரர்களும் வாழும் பகுதி. அங்கு சொந்த வீடு வாங்குவது சாதாரண வி‌ஷயமும் கிடையாது. அப்படிப்பட்ட இடத்தில் சொந்த வீட்டை வாங்கி குடியேறினோம். ஐதீகப்படி பூஜைகள் நடத்தி கிரகப்பிரவேசம் நடந்தது.

  கிரகப்பிரவேசம் நடத்தும் நாளில் வீட்டுக்குள் தங்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி அன்று இரவு என் உழைப்பால் வாங்கிய சொந்த வீட்டில் முதல்முறையாக தூங்கப் போகிறேன் என்பதே என்னை சிலாகிக்க வைத்தது.

  சொந்த உழைப்பு, சொந்த சம்பாத்தியத்தில் வாங்கும் எந்த பொருளையும் அனுபவிப்பது தனி சுகம் தானே!

  அந்த மகிழ்ச்சி யில் போர்வை கூட விரிக்காமல் தரை யில் படுத்து உருண்டும், புரண்டும் மகிழ்ந்தேன். அவ்வளவு மகிழ்ச்சி, ஆனந்தம். நிம்மதி யாக விடிய விடிய தூங்கினேன். நான் பட்ட சந்தோ‌ஷத்தையும், அடைந்த நிம்மதியையும் பார்த்து விடியும் வரை எனது தூக்கத்திற்கு தொந்தரவு கொடுக்காமல் என் அம்மாவும், அண்ணனும் அமைதியாக இருந்தார்கள்.

  அந்த காட்சிகள் இன்றும் என் மனக்கண் முன் நிற்கிறது.

  கடவுள் யாரையும் எப்போதும் கஷ்டப்பட வைப்பதில்லை. வாழ்க்கை யில் எல்லாமே ஒரு கட்டத்தில் கடந்து போகும், நாம் நம்பிக்கையுடன் இருந்தால் போதும். நம்பிக்கை யுடன் உழைத்தால் கண்டிப்பாக ஒருநாள் வெற்றி அடை வோம் என்பதே உண்மை.

  கேப்டன் மகள் படத்தில் ‘எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... ஏதோ... அது ஏதோ உன்னிடம் இருக்கிறது!’ என்ற பாடல் வரும்.

  வைரமுத்து சாரின் வர்ணனையில் ஒவ்வொரு வரியும் என்னையே நான் மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது...

  ஓரிரு வார்த்தை தப்பாய் போனால்

  -இப்படி கவிஞரின் கவிதையால் என்னை செதுக்கி இருப்பார்.

  இதுபற்றி வைரமுத்து சாரிடமே ஒரு முறை நேரில் கேட்டேன். அப்போது அவர் ‘நான் கவிஞன் அல்லவா’ என்று முடித்துக்கொண்டார்.

  ரசிகர்கள் பார்வையிலும், கவிஞர்கள் பார்வையிலும் குஷ்பு எனும் நான்...
  Next Story
  ×