search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சுய பரிசோதனை அவசியம்
    X
    சுய பரிசோதனை அவசியம்

    மருத்துவம் அறிவோம் - சுய பரிசோதனை அவசியம்

    மருத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் சுய பரிசோதனை அவசியம் குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    தினமும் வீட்டை சுத்தம் செய்கின்றோம். காரை சுத்தம் செய்கின்றோம். இப்படி எதனை எடுத்தாலும் அதாவது நம் மேஜை, படுக்கை, வீட்டு பாத்திரங்கள் என அனைத்தையும் சுத்தம் செய்கின்றோம்.

    என்ன நான் சொல்வது சரிதானே? ஏதோ சுமாராகவாவது சுத்தம் செய்கின்றோம் அல்லவா? தினமும் பல் தேய்த்து, குளிக்கின்றோம். ஆனால் நம் வாழ்வினை சுகாதாரமாக வைத்துக் கொள்ள பல முயற்சிகள் தேவையாக உள்ளது. அதனை நாம் ஓரளவாவது செய்கின்றோமா? வாழ்வு தூய்மையாக இருக்க வேண்டும் என நாம் அனைவரும் விரும்புகின்றோம்.

    அதற்காக சில சட்ட திட் டங்கள் உள்ளன. அதனை நாம் ஓரளவாவது பின் பற்றுகின்றோமா? என நம்மை நாமே ஆய்வு செய்து சரி செய்து கொள் வோமே. பலர் சுய ஆய்வுகள் மூலம் சொன்ன இவைகளை நாமும் நமக்குள் பரிசோதித்துப் பார்த்துக் கொள் வோமே.

    சரி, காலையில் நாம் சீக்கிரம் எழுந் திருக் கின்றோமா? சீக்கிரம் என்றால் குறைந்தது 6 மணிக்குள் எழுந் திருக்கின்றோமா? காலையில் 4.20 மணிக்கு எழுந்திருப்பது சிறந்த ஆரோக் கியம் என்பது நமக்கு நன்கு தெரியும். ஆனால் முயற்சி எடுப்போமா? கவச குண்டலம் போல் செல்போனோடு ஒட்டி இருப்பதனை தவிர்த்தாலே காலையில் சீக்கிரம் எழ முடியும்.

    முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு செல்போனோடு வாழ்வது அவசியமாகி விட்டது. ஆனால் மற்றவர்கள் அனைவரும், கண், நரம்பு மண்டலம் இவற்றினை பாதிப்பு அடையச் செய்வதோடு நல்ல வாய்ப்புகளையும் வாழ்வில் இழக்கின்றனர். இதற்குப் பெயர்தான் ‘சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்வது’ என்று சொல்கின்றார்களோ!

    * அன்றாடம் நமக்குள்ள பொறுப்புகளில் நாம் சிறிதள வாவது முன்னேறி இருக்கின் றோமா? எந்த இடத்திலாவது கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளதா? என்று யோசித்துப் பார்க்கின்றோமா? ஒரு சில நிமிடங்கள் இவ்வாறு சிந்தித்தாலே போதும். நம் வாழ்வு மிகப்பெரிய மாற்றம் பெரும்.

    * நம்முடைய உழைப்பினையும், நேரத்தினையும் மற்றவர் அவரது சுயநலத்திற்கு பயன்படுத்தினால், நாம் அதற்கு பலிகடா ஆகக் கூடாது. இதனை கண்டிப்பாய் கடை பிடிக்காவிட்டால் அகப்படு வர். வாழ்வே பறிபோய் விடும்.

    * அன்றாடம் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்கின்றோமா? நடை பயிற்சி என்ற பெயரில் தொய்ந்து மெது வாக நடக்கின்றோமா? ஆராய்ந்து சரி செய்து கொள்வோம்.

    * தொலைக்காட்சி சப்தம் இல்லாமல் வாழவே முடியவில்லையா? அல்லது தேவையான ஊர் செய்திகள், உலக செய்திகளை அறிந்து கொள் கின்றோமா?

    * நம் கொள்கைகளை வாயில் அதிகமாக பேசுகின்றோமா? அல்லது வாழ்ந்து காட்டுகின் றோமா?

    * கருணையுடன் ஏதாவது ஒரு செயலாவது அன்றாடம் செய்கின்றோமா?

    * உண்மைகளை ஏற்க மறுக்கின்றோமா? அதற்காக வாதாடுகின்றோமா?

    * ஒவ்வொரு செயல், நிகழ்விலும் இரண்டு வழிகள் உள்ளது. சிலர் ஈரினை பேன் ஆக்கி, பேன் அதனை பூதாகரமாய் ஆக்கி பிரச்சி னையை உருவாக்குவார்கள்.

    * சிலர் சுமூகமான முறையில் நஷ்டமின்றி, விரோதமின்றி மென்மையாகக் கையாளு வார்கள்.

    * நாம் எந்த ரகம்?

    * நல்ல புத்தகங்கள் படிப்பது பொழுது போக்கிற்காக அல்ல. நம் வாழ்வினை அதன் மூலம் முன்னேற்றிக் கொள்வதற்காக என் பதனை செயல்படுத்துகின்றோமா?

    * எதனையும் குறுக்கு வழியில் சாதிக்காமல் முறையாய் நேர் வழியில் செய்கின்றோமா?

    * நம் வீட்டு முதியவர்கள் அல்லது நமக்குத் தெரிந்த முதியவர்கள் தெரியாத முதியவர்கள் இவர்களோடு ஆறுதலாக அன்பாக சிறிது நேரம் செலவழிக்கின்றோமா?

    * பல சமுதாய பெருந்தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை முழுமையாய் படித்துள்ளோமா?

    * எந்த ஒரு செயலையும் ஒத்திப் போடாமல் உடனடியாக செய்கின்றோமா? (சோம்பேறியாக இல்லாது இருக்கின்றோமா?)

    * என்றுமே ஒரு மாணவராக எதனையும் கற்றுக்கொள்வதில் சுறு சுறுப்பானவராக இருக்கின்றோமா?

    * நம்மிடம் காணப்படும் குறைகளை ‘நமது சுபாவம்’ என்று விட்டு விடுகின்றோமா? அல்லது நம் குறை களை சரி செய்து கொள்ள முனைகின் றோமா?

    * கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய். இதனை மனதார கடைபிடிக்கின் றோமா? அல்லது வம்புக்காக பொழுது போக்குக் காக யார் என்ன சொன்னாலும் அப்படியே அதனை பேசி மென்று கண், காது வைத்து பரப்புகின் றோமா?

    * எல்லோரிடமும் ஏதேனும் ஒரு நல்ல குணமாவது இருக்கும். அன்னபட்சி போல் நம்மால் அதனை கற்க முடிகின்றதா? அல்லது அவரது குறைகளை பேசும் அரட்டை அரங்கமாக இருக்கின்றோமா?

    * பிறர் தடைகளை பார்க்கும் இடத்தில் நம்மால் வாய்ப்புகளை பார்க்க கூடிய திறமை இருக்கின்றதா?

    * நாம் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடாமல் நிறை வேற்றுகின்றோமா?

    * எளிமையாய் வாழ்கின்றோமா?

    * மற்றவர்களிடம் இருந்து இரவலாக பெற்ற (உ.ம்.) பேனா, புத்தகம் இவற்றினை ஒழுங்காய் திருப்பிக் கொடுக்கின்றோமா?

    * தவறுகளை ஒத்துக்கொள் ளும் மனப் பக்குவம் இருக்கின் றதா? இல்லை நாமே சரி என ஒற்றைக் காலில் நிற்கின்றோமா?

    * சிறிது நேரமாவது தினமும் தனிமையில் இருக்கின்றோமா? செல்போன், டி.வி. இல்லாது இருக்க வேண்டும்.

    * பிரச்சினைக்கு காரணமாக இல்லாது தீர்வு களுக்கு காரணமாக வாழ்ந்திருக்கின்றோமா?

    * விடா முயற்சி நம்மிடம் உண்டா?

    * விளையாட்டினையும் நியாய மாய் விளையாடுகின்றோமா?

    * நம் உள் உணர்வை காது கொடுத்து கேட்கின்றோமா?

    * நன்றி மறவாது வாழ்கின்றோமா? அப்படி அனைவரும் வாழ்ந்து விட்டால் முதலில் முதி யோர் இல்லங்களே இருக் காது.

    * புன்னகை செய்ய பழகுவோமே,

    * மனதையும், மூளையையும் குடைந்து கண்டபடி யோசித் துக் கொண்டே இருக்க வேண்டாமே.

    * நீங்கள் எப்படி இருந்தாலும் அடுத்தவர் உங்களைப்பற்றி வேறு மாதிரி தான் நினைப் பார்கள். இது கலியுகம்.

    * கடந்த காலம். அதனை திரும்பி பார்த்தாலும் பிரயோஜனம் இல்லை. ஏனெனில் திரும்ப அவ்வழியில் நம்மால் போக முடியாது. பாதையில் முன்னேறும் பொழுதே கடந்த கால குறைகள் சீராகும்.

    * யாரோடும் நாம் நம்மை ஒப்பிட வேண்டாமே.

    * நம்மால் இயன்றவைகளை செய்வோமே.

    * காலம் ஒன்றே மிக சக்தி வாய்ந்தது என உணருவோம்.

    பொங்கல் பண்டிகை விடுமுறை வரும் பொழுது சிறிது நேரம் இவைகளை படித்து சிந்தித்து நம்மை சரி செய்து கொண்டால் நம் உடலும், மனமும் சுத்தமாகி விடுமே. செய்வோமா? கண்டிப்பாக செய்வோம் சரிதானே!

    அன்றாடம் பயன்படுத்தலாமே...

    மற்ற நாடுகளில் கூட இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள் இவைகளை நோய் எதிர்ப்பு சக்தி உடையவையாக நிரூபிக்கப்பட்டு தினமும் குறிப்பாக இந்த பெருந்தொற்று காலத்தில் அன்றாடம் பயன்படுத்துகின்றனர்.

    * துளசியினை உபயோகப்படுத்துகின்றனர்.

    * அத்திபழம், கறுப்பு திராட்சை, கொட்டை வகைகள், மீன் இவைகளையும் சீரான ரத்த ஓட்டம் அமைவதற்காக பயன்படுத்துகின்றனர்.

    * அன்றாடம் எலுமிச்சை சாறு பயன்படுத்து கின்றனர். * ஆளி விதை, சியா விதை, பூசணி விதை, கருஞ்சீரகம் இவைகளை தவறாது பயன்படுத்துகின்றனர். * தினமும் சிறிதளவு பட்டை தூளினை காபியில் கூட கலந்து குடிக்கின்றனர். நாமும் ஏன் இவைகளை பழக்கத்தில் கொண்டு வரக்கூடாது.

    கொரோனா பரவலில் தப்பிக்க

    இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகமாக கேட்கும் சொற்கள் - கொரோனா, ஒமைக்ரான் என்பவைதான். எல்லோர் மனதிலும் ஒரு வித அச்சம் இருக்கின்றது. எதிர்த்து நின்றுதான் போராட வேண்டும்.

    * எலுமிச்சை, நெல்லி, பேரீச்சம் பழம், சிறுதானியங்கள், சிறிது வெல்லம் இவற்றினை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். எதனையும் அளவோடு எடுத்துக் கொள்வது தான் ஆரோக்கியம்.

    * ஒமேகா-3 அவசியம் தேவை. மீன் எண்ணை மாத்திரை, ஆளி விதை இவற்றினை மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

    * முட்டையின் வெள்ளை புரதம் நிறைந்தது. *வெள்ளரி, தக்காளி, ஆரஞ்சு இவற்றினை பயன்படுத்தலாம். சிலருக்கு வெள்ளரி, தக்காளி தவிர்க்க வேண்டிய உடல் நிலை இருந்தால் அவர்கள் இதனை தவிர்த்து விடவும். * பூண்டு, மஞ்சள், இஞ்சி இவற்றினை அன்றாடம் உணவில் சேர்க்கவும்.

    * கபசுரநீர், ஜீரகத் தண்ணீர் இவற்றினை வாரம் மூன்று முறை என குடித்து வரலாம். கபசுர நீருக்கு ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்லும் முறையினையே அவசியம் பின்பற்ற வேண்டும்.

    கீரின் டீ

    * டீ, காபிக்கு பதிலாக ஒரு முறையாவது ‘கிரீன் டீ’ எடுத்துக் கொள்ளலாமே.

    * வால்நட்ஸ் இதனை 2 முதல் 3 வரை கொறிக்கலாம்.

    * ஆப்பிள் என்றென்றும் சிறந்த பழம்தான்.

    * இந்த பனி காலத்தில் ஆஸ்துமா தொல்லை இருப்பவர்கள் மிதமான அளவு ஆவி பிடித்தல், சூடான பானங்களை குடித்தல், தூசு இதில் இருந்து தன்னை காத்துக்கொள்ளல். இவைகளை அவசியம் செய்ய வேண்டும்.

    * முகக்கவசம் போடுதல், சோப்பு கொண்டு (அ) கிருமி நாசினி கொண்டு கையை சுத்தம் செய்தல், கூட்டத்தினை தவிர்த்தல் இவற்றினை இன்று மட்டுமல்ல இனி வரும் காலங்களில் கூட கடைபிடிப்பது நமக்கும், நம் சமுதாயத்திற்கும் நல்லது என்பதனை உணருங்கள்.
    Next Story
    ×