search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி பொருத்த முடிவு -   தமிழக தேர்தல் அதிகாரி
    X

    பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி பொருத்த முடிவு - தமிழக தேர்தல் அதிகாரி

    பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரிவிக்கும் கருவி பயன் படுத்தப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #Parliamentelection #ElectionOfficer

    சென்னை:

    அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு முன்னதாக பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்று அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து கிண்டியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு கலந்துகொண்டு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், துணை தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவியை இயக்க பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் சவுமியாஜித் கோஷ், தேசிய அளவிலான தலைமை பயிற்சியாளர் என்.டி.பர்மர், பெங்களூர் பி.எச்.இ.எல். தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சி அளித்தனர்.

    பின்னர் தமிழக தலைமை அதிகாரி சத்தியபிரதாசாகு நிரூபர்களிடம் கூறியதாவது:-

    வாக்குப் பதிவின்போது பயன் படுத்தக் கூடிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களையும் சோதனை செய்யப்படும் பணிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே நடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விதிமுறை கொடுத்துள்ளது.


    இதுபோன்ற பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் தேர்தல் அதிகாரிகளான 32 மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம். ஆணையம் தேதியை அறிவித்த பின் தேர்தல் நடத்தப்படும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரிவிக்கும் கருவி பயன் படுத்தப்படும். அதற்கான பயிற்சி தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×