search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் இறுதிபட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது
    X

    ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் இறுதிபட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தகுதியானவர்கள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து ஒரு வாரத்தில் வாக்காளர் இறுதிபட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ந்தேதி நடைப்பெறுவதை யொட்டி அங்குள்ள வாக்காளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.



    வி.ஐ.பி. தொகுதியாக இருந்து வந்த ஆர்.கே.நகர், வருகின்ற தேர்தலின் மூலம் எந்த நிலையை அடையப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இத்தொகுதியில் 45 ஆயிரத்து 880 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 19 ஆயிரத்து 409 வாக்காளர்கள் உள்ளனர்.

    பட்டியலில் புதிதாக சேர்க்க வேண்டும் என்று 20 ஆயிரம் பேர் விண்ணப்பம் கொடுத்து இருக்கிறார்கள். அந்த மனுக்கள் மீது பரிசீலனை நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆர்.கே.நகர் தொகுதியில் 256 வாக்கு சாவடிகள் உள்ளன. இதில் எத்தனை பதட்டமானவை என்பதை போலீசாரும் வருவாய்த்துறையினரும் விரைவில் தேர்தல் ஆணையத்திற்கு பட்டியல் தருவார்கள்.

    வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டால் வாக்குசாவடிகளின் எண்ணிக்கை 4 அல்லது 5 உயரக்கூடும். துணை வாக்கு சாவடிகளாக உருவாக்கப்பட்டு அமைக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணி இந்த மாதம் 30-ந்தேதி வரை நடக்கிறது. அதனால் வாக்காளர்களாக சேர்க்கும்படி வந்துள்ள 20 ஆயிரம் மனுக்களையும் விரைந்து பரிசீலனை செய்து முடிக்க சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளுக்கு முதல் நாள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளை செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ந்தேதி கடைசி நாளாகும்.

    அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியானவர்கள் பெயர்கள் சேர்க்கப்படும். ஒரு வாரத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

    தற்போது உள்ள மொத்த வாக்காளர் பட்டியலில் மேலும் 20 ஆயிரம் பேர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×