என் மலர்
செய்திகள்

அமைச்சர் கடம்பூர் ராஜூ பதவி பறிப்பு: தினகரன் அதிரடி நடவடிக்கை
சென்னை:
அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி. தினகரனுக்கும் இடையே கடும் பனிப்போர் நடைபெற்று வருகிறது.
டி.டி.வி. தினகரன் அதிரடி நடவடிக்கையாக பல்வேறு நிர்வாகிகளின் பதவிகளை பறித்து புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கி வருகிறார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ள சி.த.செல்லப் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் உள்ள அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் நிர்வாக வசதிக்காக தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் என பிரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. ஆர்.சுந்தரராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக இரா.ஹென்றி தாமஸ் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. இன்று முதல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
புதிய மாவட்ட செயலாளராக திருவேற்காடு பா.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கழக விவசாய பிரிவு துணை செயலாளர் பொறுப்பில் சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எம்.வி. கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






