என் மலர்

  பெண்கள் உலகம்

  திருமண அலங்கார செலவை குறைக்கும் வழிகள்
  X
  திருமண அலங்கார செலவை குறைக்கும் வழிகள்

  திருமண அலங்கார செலவை குறைக்கும் வழிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பணம் அதிகம் செலவளித்து பிரமாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றில்லை. குறைந்த செலவிலேயே பிரமிக்க வைக்கும் வகையில் திருமண வைபவத்தை நடத்தி விடலாம்.
  இல்லறத்தில் இரு மனங்களை இணைய வைக்கும் திருமண நாள் தங்கள் வாழ்நாளில் என்னென்றும் நினைவில் கொள்ளும் தருணமாக அமைய வேண்டும் என்பது இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

  அதற்கேற்ப திருமணத்தை நடத்துவதற்கு திட்டமிடுகிறார்கள். பணம் அதிகம் செலவளித்து பிரமாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றில்லை. குறைந்த செலவிலேயே பிரமிக்க வைக்கும் வகையில் திருமண வைபவத்தை நடத்தி விடலாம்.
  அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

  * திருமணத்தை திறந்தவெளி மண்டபங்களில் நடத்துவதற்கு பலரும் விருப்பப்படுகிறார்கள். அங்கு பசுமையான சூழல் நிலவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை தேர்ந்தெடுத்தாலே போதுமானது. அங்கு மரங்கள், புல்வெளிகள், பூக்கும் தாவரங்கள் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அவைகளின் மீது சிறு சிறு அலங்கார வேலைப்பாடுகளை செய்தால் போதும். திருமண அலங்காரம் பிரமாண்டமாக மாறிவிடும்.

  * திருமண மேடையை பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் என்றில்லை. ஏற்கனவே அங்கு இருக்கும் உள்கட்டமைப்புகளை எளிமையான அலங்காரங்கள் மூலம் பிரமாண்டமாக மாற்றலாம். குறைந்த அலங்காரங்களுடன் மண மேடை ‘பளிச்’ சென்று தெரிய வேண்டும் என்பதுதான் இளம் வயதினரின் எண்ணமாக இருக்கிறது. அந்த யுக்தியை பின்பற்றினாலே மேடை அலங்கார செலவை குறைத்துவிடலாம்.

  * திருமண அலங்காரத்தில் அதிக செலவுக்கு வித்திடுபவை பூக்கள். அதனால் மலர் அலங்கார தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

  எந்தெந்த பூக்களை அலங்காரத்திற்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முதலிலேயே பட்டியல் போட்டு விட வேண்டும். உதாரணமாக மல்லிகை பூவை விரும்பினால், சந்தையில் அதிக அளவில் விற்கப்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும். சீசனில் இல்லாத மலர்களை தேர்ந்தெடுத்தால் அதனை வாங்குவதற்கு அதிக பணம் செலவளிக்க வேண்டியிருக்கும்.

  விரும்பிய பூக்களின் விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதன் அளவை குறைத்துவிடலாம். விலை குறைவாக இருக்கும் பூக்களை வாங்குவது முக்கியமில்லை. அதனை மாறுபட்ட அலங்காரத்தில் பிரகாசிக்க வைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் மலர் அலங்காரம் அழகாகவும், பிரமாண்டமாகவும் தெரியும்.

  * திருமண ஏற்பாடு விஷயத்தில் அனுபவமிக்க குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடம் கருத்துக்களை கேட்பதற்கு தயங்கக்கூடாது. அவர்களின் ஆலோசனையின்படி திருமண பணிகளை திட்டமிடலாம். ஒருவரே திருமண ஏற்பாடுகளை முன்னின்று செய்ய வேண்டும் என்றில்லை.

  பணிகளை பிரித்துக் கொடுப்பதன் மூலம் திருமண ஏற்பாடுகளை சிரமமில்லாமல் முடித்துவிடலாம். உறவினர்கள், நண்பர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும்போது அவர்கள் உரிமையுடன் முன்னின்று சிறப்பாக பணிகளை செய்து முடிப்பார்கள்.
  Next Story
  ×