என் மலர்

  பெண்கள் உலகம்

  இணையவழி மோசடி
  X
  இணையவழி மோசடி

  ஏமாற்றுபவர்களிடம் நம்மை காத்து கொள்வது எப்படி?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரிச்சியம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது எளிதில் நம் தகவல்களை திருட வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
  பணம், சொத்துக்கள், தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றை ஒருவருடைய அனுமதி இல்லாமலேயே ஏமாற்றி பறிக்கும் செயல்கள் நம்மைச்சுற்றி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அகப்பட்டுக்கொள்ளலாமல் பாதுகாப்பாக இருப்பதற்கான சில வழிகளை பார்க்கலாம்.

  ஆன்லைன் தகவலை பாதுகாக்கவும்.

  நாம் பயன்படுத்தும் கணினி, மொபைல் உள்ளிட்டவற்றை தகுந்த பாதுகாப்பு சாப்ட்வேர் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும். இவற்றில் தனிப்பட்ட எந்த தகவலையும் பதியாமல் இருக்க வேண்டும். குறிப்பாக நிதி சார்த்நத எந்த தகவலையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பதியாமல் இருக்க வேண்டும்.

  கணக்கை நிர்வகித்தல்

  வங்கிக்கு நேரடியாக சென்று பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு பதிலாக இணையத்தளம், மொபைல் செயலி போன்ற பல தொழில் நுட்பங்கள் நடைமுறையில் உள்ளன. இவற்றால் எந்த அளவுக்கு எந்த அளவுக்கு பணி எளிமையாகியுள்ளதோ, அதே அளவுக்கு ஏமாற்றும் முறைகளும் அதிகரித்துள்ளன. செயலியை பயன்படுததுபவர்கள் தினமும் ஒருமுறையாவது தங்கள் வங்கி கணக்கில் உள்ள இருப்பு பிற பரிவர்த்தனைகள் குறித்து கவனிக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை குறித்த எச்சரிக்கைகுறிப்புகள் அனுப்புமாறு வங்கிக்கு கோரிக்கை விடுப்பது நமக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும்.

  இ-மெயிலில் கவனம் தேவை

  இ-மெயிலில் பல பரிவர்த்தனைகள் ஏமாற்று பேர்வழிகள் மூலம் கவர்ச்சிகரமானவாசகங்களுடன் வருகின்றன. இவற்றை திறந்து பார்க்கும் போது நம் ரகசிய தகவர்கள் அனைத்து எளிதில் திருடப்படும் வாய்ப்புள்ளது. எனவே எதையும் ஒருமுறைக்கு இருமுறை படித்து நம்பகமானது என்று உறுதி செய்த பின்பு உள் நுழையவும்.

  தெரியாத அழைப்புகளை தவிர்க்கவும்.

  பரிச்சியம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது எளிதில் நம் தகவல்களை திருட வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே வரும் அழைப்புகள் நம்பகமானதா?என்பதை கவனத்தில் கொண்டு பாதுகாப்பனது என்று உறுதி செய்யும் அழைப்புகளுக்கு மட்டும் பதிலளித்தால் போதுமானது. நம்பகமில்லை என்பது தெரிந்தால் உடனடியாக அநத் அழைப்பை துண்டித்து விடுவது நல்லது.

  தவறான பயன்பாடு

  நமக்கு தெரியாமல் நம்மிடம் இருந்து திருடும தகவலை கொண்டு யார் வேண்டுமானாலும் நம் கணக்கை இயக்க முடியும். இது போல் நம கணக்கை பிறர் இயக்குவது குறித்து தெரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைப்பை தொடர்பு கொண்டு அந்த கணக்கை முடக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  பணப்பரிவர்த்தனையில் கவனம்

  மின்னணு சார்ந்த பணப்பரிவர்த்தனையை பலரும் பயன்படுததுகின்றனர். இதில் நீங்கள் பதிவு செய்யும் கடவுச்சொல் உங்களுக்கு மட்டும் தெரிந்ததாக இருக்க வேண்டும். கூட்டம் அதிகமுள்ள பகுதியில் கடவுச்சொல்லை பயன்படுத்துவதாக இருந்தால் அந்த கடவுச்சொல்லை உடனடியாக மாற்றி புதிய கடவுச்சொல்லை பதிவு செய்து கொள்ளலாம்.

  தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நாம் வியந்து பார்க்கும் வகையில் பலஏமாறறு வேலைகள் நம்மை சுற்றி அரங்கேறுகின்றன. இதில் மற்றவர்களை குறைகூறுவதை விட நாம் விழிப்புணர்வுடன் இருந்தாலே மோசடிப்பேர்வழிகளிடம் இருந்து காத்து கொள்ளலாம்.
  Next Story
  ×