என் மலர்

  பெண்கள் உலகம்

  சொத்து
  X
  சொத்து

  சொத்துக்களுக்கு பட்டா அவசியமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சொத்துகளை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரம் இருந்தால் மட்டும் சொத்து பத்திரமாக இருப்பதாக அர்த்தம் கொள்ள முடியாது.
  நீங்கள் புதிதாக வீடோ, மனையோ என சொத்து வாங்கி இருக்கிறீர்களா? அந்த சொத்தை பத்திரவுப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அந்த ஆவணத்தை பத்திரமாக வைத்திருக்கிறீர்களா? பத்திரப்பதிவு மட்டும் இருந்தால் போதுமா? அந்தச் சொத்துக்குரிய பட்டா வைத்திருக்கிறீர்களா?

  சொத்துகளை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரம் இருந்தால் மட்டும் சொத்து பத்திரமாக இருப்பதாக அர்த்தம் கொள்ள முடியாது. அது சொத்து வாங்குவதன் முதல் படிதான். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும். சரி, சொத்துக்கான பட்டாவை யாரிடம் எங்கே பெறுவது?

  பட்டா வழங்குவது வருவாய்த் துறைக்கு கீழ் வருகிறது. எனவே வருவாய்த்துறையில்தான் பட்டாக்களைப் பெற வேண்டும். பட்டா பெறுவதற்கு அந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் (வி.ஏ.ஓ.) மனுக்களை வழங்க வேண்டும். நீங்கள் அளிக்கும் மனுவுடன், ஆவணங்களின் நகலை அளிக்க வேண்டும். மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. இந்த மனுவின் மீது தனது அறிக்கையுடன், தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டலத் துணை தாசில்தாரிடம் ஒப்படைப்பார். ஆவணங்களைத் துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, மனுதாரருக்குப் பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்குவார்கள். இந்தப் பணிகள் 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

  சரி ஏன் பட்டா வேண்டும். பட்டா இல்லாவிட்டால் என்னவாகும். ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தைப் பலருக்கும் விற்கும் காலம் இது. அவ்வாறு சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தை எல்லோருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது. இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் ஏற்படும். ஒரு சொத்தைப் பதிவு செய்யும் நபர், அதைப் பட்டாவாக மாற்றிக்கொண்டுவிட்டால், அந்தப் பிரச்சினை இருக்காது.

  தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏராளமான மனை போட்டு விற்கிறார்கள். உதராணமாக 50 மனைகளை விற்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். பிளாட்டுகளைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள். அந்தச் சொத்துக்கு பட்டா பெறவில்லை என்றால் என்னவாகும்? அந்த 50 மனைகளில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புண்டு. 50 மனைகளில் ஏதாவது 10 மனைகள் அப்படி ஒதுக்கப்பட்டுவிடலாம்.

  அது தெரியாமல் பதிவுப் பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும்போது தான், தனது மனை பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது தெரியவரும். எனவே, பத்திரப் பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் பெற்றுக்கொண்டால், இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்கலாம்.
  Next Story
  ×