என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..
    X
    நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..

    நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..

    நமக்கான தனிப்பட்ட நேரம் ஒதுக்குதல் போன்றவற்றை மீண்டும் செயல்படுத்தினால் உறவுகளையும், மகிழ்ச்சி ஏற்படுத்தும் உணர்வுகளையும் மீட்டெடுக்கலாம்.
    விஞ்ஞான அறிவியலின்படி மனிதனின் ஆயுட்காலம் 120 ஆண்டுகளுக்கும் மேல். ஆனால் நவீன கால மனிதனின் வாழ்நாள், அவரின் சிந்தனை மற்றும் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. வாழ்நாளில் ‘நேரமின்மை’ என்ற காரணத்தால் பல்வேறு விதமான உணர்வுகளையும், உறவுகளையும் நாம் இழந்து வருகிறோம்.

    நம் சுயநலத்துக்காகவும், பிற்காலத்தில் கிடைக்கப்போகும் சிறு பலனுக்காகவும் நிகழ்கால வாழ்வை மறந்து விடுகிறோம். கடிவாளம் கட்டிய குதிரையைப் போல, எதையோ நோக்கி, ஒரு நேர்கோட்டில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

    அன்பை மறந்த அலட்சியப்போக்குதான் இந்த நிலைக்கு நம்மை ஆளாக்குகிறது. இதை மாற்றுவதற்கு பெரிய செயலோ, அற்புதமோ நிகழ வேண்டும் என்பதில்லை. நம்மால் செய்ய முடிந்த சின்னச் சின்ன செயல்களே போதும்.

    பெற்றோருடன் நேரம் செலவழித்தல், பிடித்த உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுதல், கற்றல் பருவத்துக்குப் பின்பான நண்பர்களுடன் சந்திப்பு, சொந்தங்களின் சுப நிகழ்வில் கலந்துகொள்ளுதல், நமக்கான தனிப்பட்ட நேரம் ஒதுக்குதல் போன்றவற்றை மீண்டும் செயல்படுத்தினால் உறவுகளையும், மகிழ்ச்சி ஏற்படுத்தும் உணர்வுகளையும் மீட்டெடுக்கலாம்.
    Next Story
    ×