search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கொரோனா காலத்துக்கேற்ற பட்ஜெட் டிப்ஸ்
    X
    கொரோனா காலத்துக்கேற்ற பட்ஜெட் டிப்ஸ்

    கொரோனா காலத்துக்கேற்ற பட்ஜெட் டிப்ஸ்

    கொரோனா கால நெருக்கடிகள், நமது பொருளாதார லட்சியத்தில் எந்த வகையிலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு செயல்படும் போது எத்தகைய நெருக்கடியையும் நம்மால் சமாளித்து மீண்டு வர முடியும்.
    கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க போடப்பட்ட பொது முடக்கத்தால் பலரின் பொருளாதாரமும் முடக்கப்பட்டது. சென்ற வருட தாக்குதலில் இருந்து இப்போது தான் மீண்டு எழ ஆரம்பித்தோம். அதற்குள் இரண்டாம் அலை நம்மை தாக்கிவிட்டது. இதிலிருந்து பொருளாதாரரீதியாக பாதுகாப்பாக இருப்பது முக்கியம். இந்த குறுகிய கால நெருக்கடி, நீண்டகால நிதி நெருக்கடியாக மாறுவதை தடுக்க ஒரு சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

    பெரும்பாலான நேரம் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் நம்மை மீறி ஆன்லைனில் தேவையற்ற பொருட்களை வாங்க முயற்சிப்போம். இதை தடுக்க ஒவ்வொருநாளும் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். ஆசைகளையும் தேவைகளையும் பிரித்தறிய வேண்டும். ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றும் போது குறைந்தது மூன்று நாட்கள் அந்த ஆர்வத்தை தள்ளிப்போட வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதன் பிறகும் அது நமக்கு தேவையென்று தோன்றினால் மட்டுமே வாங்க வேண்டும்.

    பொது முடக்கத்தினால் ஜிம், அழகு நிலையம் போன்றவை மூடப்பட்டிருக்கின்றன. இவற்றில் உறுப்பினராக இருப்பவர்கள் பொது முடக்க காலத்தில் அதற்கான மாத சந்தா கட்டுவதை தவிர்க்கலாம். அந்த பணத்தை அவசர கால நிதியில் சேர்த்து பயன்படுத்தலாம்.

    செலவு குறித்த தெளிவான யோசனை அவசியம். டெபிட்மற்றும் கிரெடிட் கார்டுகளின் அறிக்கைகளை பெற்று எவற்றுக்கெல்லாம் செலவு செய்திருக்கிறோம் என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அதிக வட்டி செலுத்தும் கடன்களை அடைத்தல் குறிப்பாக கடன் அட்டைகளுக்கான தொகையை முழுவதுமாக செலுத்தி விடுதல் மிகவும் நல்லது. இதனால் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.

    உணவுக்கான செலவுகளை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். வெளியில் இருந்து உணவு வாங்குவதை விடுத்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது உடலுக்கும், பட்ஜெட்டுக்கும் நல்லது. வீட்டில் சமைப்பதிலும் ஆடம்பர உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான சத்தான உணவுகளை மட்டுமே சமைத்து சாப்பிட வேண்டும்.

    பயன்படுத்தாத பொருட்களை விற்பதன் மூலமும், சேமிப்பை அதிகப்படுத்த முடியும். மூன்று வருடங்களுக்கு மேல் ஒரு பொருளை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அது உங்களுக்கு தேவையற்றது என்று எடுத்து கொள்ளலாம். உதாரணத்துக்கு உங்கள் பிள்ளைகள் பள்ளி செல்ல பயன்படுத்திய மிதி வண்டிவை அவர்களை கல்லூரி படிப்பை முடித்த பின்னும் கூட அப்படியே பயன்படுத்தாமல் வைத்திப்பீர்கள். அதனை ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்கலாம்.

    நம்மிடம் இருக்கும் திறமைகளை கொண்டு பொருளாதார ரீதியில் முன்னேறலாம். பொது முடக்கத்தில் ஆன்லைனில் சங்கீதம் கற்றுத்தருவது, மொழி வகுப்புகள் எடுப்பது சமையல் கற்றுக்கொடுப்பது, போன்றவற்றால் நமது திறமையும் வருமானமும் அதிகரிக்கும்.

    கொரோனா கால நெருக்கடிகள்,நமது பொருளாதார லட்சியத்தில் எந்த வகையிலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு செயல்படும் போது எத்தகைய நெருக்கடியையும் நம்மால் சமாளித்து மீண்டு வர முடியும்.
    Next Story
    ×