search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களும்.. தனிமையும்..
    X
    பெண்களும்.. தனிமையும்..

    பெண்களும்.. தனிமையும்..

    இந்தியா முழுவதும் தனியாக வசிக்கும் பெண்களுடன் ஒப்பிடும்போது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகும்.
    தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் தனியாக வாழும் பெண்களின் நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட மாதிரி கணக்கெடுப்பு பதிவேடு அறிக்கையில் இந்த விவரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள் அல்லது திருமணத்திற்கு பிறகு தனித்தனியாக வசிப்பவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆய்வறிக்கையில் கேரளாவில் சுமார் 9.3 சதவீத பெண்களும், தமிழ்நாட்டில் 9.2 சதவீத பெண்களும் தனியாக வசிப்பது தெரியவந்துள்ளது.

    இந்தியா முழுவதும் தனியாக வசிக்கும் பெண்களுடன் ஒப்பிடும்போது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகும்.

    மொத்த மக்கள் தொகையில் திருமணமானவர்கள் 46.3 சதவீதம் பேர் இருக்கிறார்கள். திருமண வரைமுறைக்குள் வராமல் 5.5 சதவீதம் பெண்கள் தனியாகவே வசிக்கிறார்கள். ஆண், பெண் இரு பாலர்களில் ஒருவரையொருவர் சார்ந்திருக்காமல் தனியாக வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் தேசிய சராசரி 3.5 சதவீதமாகவும், தனியாக வசிக்கும் ஆண்களின் எண்ணிக்கை 1.5 சதவீதமாகவும் இருக்கிறது. இது ஒட்டுமொத்த ஆண்களின் எண்ணிக்கையில் ஒருகோடி பேராகும். இந்திய மக்கள் தொகையில் 50.3 சதவீதம் பேருக்கு திருமணம் ஆகவில்லை. விதவை, விவாகரத்து, துணையை சார்ந்திருக்காமல் வாழும் பெண்களின் விகிதம் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தனியாக வாழும் ஆண்களை விட அதிகமாக இருப்பதும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 
    Next Story
    ×