என் மலர்

  ஆரோக்கியம்

  மாடி தோட்டத்தில் சத்தான காய்கறிகள்
  X

  மாடி தோட்டத்தில் சத்தான காய்கறிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நமது வீட்டின் மொட்டைமாடி, பால்கனி போன்றவைகளில் மாடி தோட்டம் அமைத்து நமக்கு தேவையான காய்கறிகள், கீரைகள் போன்றவைகளை விளைவித்து அவ்வப்போது பிரஸ் ஆன காய்கறிகளை பறித்து சமைத்து கொள்ளலாம்.
  இன்றைய நாளில் ரசாயன கலப்பில்லாத காய்கறிகளை வாங்குவது என்பது எட்டாகனியாகவே உள்ளது. ஏதேனும் இரசாயனகலவை எந்தவிதத்திலும் காய்கறிகளில் கலந்தே வருகிறது. காய்கறிகள் தினம் உண்பதன் மூலம் நமது உடலுக்கு உகந்த ஆரோக்கிய சத்துக்களை பெற முடிகிறது. உயிர் சத்துக்களுடன் ரசாயன மருந்துகளும் உள்நுழையும் ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

  முன்பு வீட்டின் பின்பகுதியில் அழகிய தோட்டம் அமைத்து காய்கறிகள் விளைவித்து உண்டனர். இன்று விசாலமான தோட்டம் அமைக்கக்கூடிய பெரிய இடவசதி வீடுகள் அமைப்பது இயலாத காரியம். எங்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், நெருக்கமான குடியிருப்புகள்தான் உள்ளன.

  இந்த நிலையில் நமது வீட்டின் மொட்டைமாடி, பால்கனி போன்றவைகளில் மாடி தோட்டம் அமைத்து நமக்கு தேவையான காய்கறிகள், கீரைகள் போன்றவைகளை விளைவித்து அவ்வப்போது பிரஸ் ஆன காய்கறிகளை பறித்து சமைத்து கொள்ளலாம். இதன் மூலம் பசுமை சூழலான வீட்டமைப்பும், இயற்கையான சத்து மிகுந்த காய்கறிகளும் கிடைக்கின்றன.

  அன்றாட தேவைக்கேற்ற காய்கறிகள்:

  காய்கறிகள் எனும் போது மாடி தோட்டத்தில் நமது அன்றாட சமையல் தேவைக்கேற்ற காய்கறிகளை தினம் பெற முடியும். அதற்கு பெரிய மாடியே போதுமானது. சிறு சிறு பிளாஸ்டிக் பேக்குகள், தொட்டிகளில் மண் நிரப்பி விருப்பமான காய்கறிகளை வளர்த்து கொள்ளலாம். காய்கறிகள் வளர்க்க அதிக செலவும் பிடிக்காது. குறைந்த விலையில் நிறைவான காய்கறிகளை பயிர் செய்து கொள்ளலாம்.

  விதவிதமான பச்சை காய்கறிகளின் அணிவகுப்பு:

  நமது வீட்டு தோட்டத்தில் போடக்கூடியவாறு காய்கறிகளின் விதைகள் அனைத்து கடைகளிலும் கிடைக்கின்றன. நல்ல தரமான விதைகள் மூலமே நல்ல காய்கறி விளைச்சல் கிடைக்கும். வெண்டை, கத்தரி, அவரை, இஞ்சி, பாகற்காய், புடலை, மிளகாய், தக்காளி, முருங்கை, கீரை வகைகளான பொன்னாங்கன்னி, தண்டுகீரை, பசலைகீரை, வெந்தயகீரை, பருப்பு கீரை போன்றவைகளை பயிர் செய்யலாம். ஹைபீரிட் கொய்யா, சப்போட்டோ, மாதுளை போன்றவை சிறு செடிகளாக வளர்ந்தே நிறைய பழங்களை தரும். புதினா, கொத்துமல்லி, வல்லாரை போன்றவைகளும், தூதுவளை, பிரண்டை போன்ற மூலிகை செடிகளும் கூட மாடி தோட்டத்தில் இடம் பெறச் செய்யலாம்.

  வீட்டின் கழிவுகளே உரமாய் உதவும்:

  நமது வீட்டில் உபயோகிக்கும் உணவு கழிவுகள், காய்கறி கழிவுகளே செடிக்கு நல்ல உரமாய் உதவக்கூடியவை. அனைத்து விதமான காய்கறி மற்றும் தாவர கழிவுகளை செடிகளுக்கு உரமாய் வழங்கலாம். நாம் உண்ணும் பயிறு கை, சுண்டல் வகைகளின் தோல், அரிசி களைந்த நீர், சாதம் வடித்த கஞ்சி போன்றவை செடிகளுக்கு சிறந்த நீர் ஆதாரமாகவும், உரமாகவும் திகழும். ஒவ்வொரு செடிகளுக்கு ஏற்றவாறு தனித்தனியாக பிரித்து வைத்திட வேண்டும். சில செடிகள் மிக நெருக்கமாக இருக்கும்போது வளர்ச்சி காணாது.

  மாடித்தோட்டத்திற்கு ஏற்ப மாடியை தயார் செய்தல்:


  மாடி தோட்டம் அமைக்கும் முன் நமது மொட்டைமாடியை அதற்கேற்ப தயார் செய்திட வேண்டும். நாம் தினம் செடிக்கு ஊற்றும் தண்ணீர் தரையில் ஊறி கான்கிரீட் தளத்தை பாதிக்காது வகையில் சிலமுறைகளை மேற்கொள்ள வேண்டும். செடி தொட்டிகளை நேரடியாக தரையில் வைக்காமல் சிமெண்ட் பலகையை இரு கற்கள் மேல் வைத்து அதன் மேல் தொட்டிகளை வைக்கவும். அதுபோல் தளத்தின் தரை மீது வெடிப்புகள், நீர்கசிவு ஏற்படாதவாறு மேற்பூச்சுக்கள் கிடைக்கின்றன.

  அதனை வாங்கி தொட்டிகள் வைப்பதற்கு முன்னே நன்றாக தரையில் பூசி விடவும். தொட்டிகளின் கீழ் தற்போது தட்டு அமைப்புகள் கிடைக்கின்றன. அதனையும் வாங்கி வைக்கலாம். தொட்டியில் அதிகளவு மண் மற்றும் எருகளை பயன்டுத்தி எடையை அதிகரிக்க விடாமல் தொட்டியின் கீழ் பகுதியில் தேங்காய் நார், வைக்கோல், சருருகள் போன்றவையை பாதியளவு பரப்பி விட்டு அதன் மேல் மண் மற்றும் எருவை நிரப்பலாம். பிளாஸ்டிக் பை அமைப்பு, மண் மற்றும் எரு போன்றவை அரசு நிறுவனம் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

  உற்சாகமான மனநிலையை ஏற்படுத்தும் மாடி தோட்டம்:

  ஆரோக்கியமான உடல் நிலையை சத்தான காய்கறிகள் உண்பதன் மூலம் பெறுகிறோம் என்பதுடன் அதனை பராமரிப்பும் பணிகள் போன்றவை மேற்கொள்வதன் மூலம் நல்ல உடற்பயிற்சியாகவும் திகழ்கிறது. காலை, மாலை என இருமுறை பராமரிப்பு மேற்கொண்டாலே போதுமானது. மழை மற்றும் வெயில் காலங்களில் பசுமை மூடாப்பு போட்டு செடிகளை சிறப்புடன் பாதுகாக்கலாம்.
  Next Story
  ×