என் மலர்

  ஆரோக்கியம்

  வீட்டுக்கடன் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்
  X

  வீட்டுக்கடன் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் வீட்டுக்கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் பற்றி பார்க்கலாம்.
  வீடு கட்ட அல்லது மனை வாங்க விரும்புபவர்கள் வங்கி கடனுக்கு விண்ணப்பம் செய்யும்போது கடன் பெறுபவரின் சுய விபரங்களோடு பல சான்றுகளையும் கொடுக்கவேண்டும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் வீட்டுக்கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் பற்றி பார்க்கலாம்.

  பொதுவான சான்றுகள் :

  * வயதை குறிப்பிடும் சான்று
  * இருப்பிடத்திற்கான சான்று
  * விண்ணப்பிப்பவர் பெறும் வருமானத்திற்கான அத்தாட்சி
  * கடந்த 6 மாத காலத்திற்கான வங்கி ‘ஸ்டேட்மெண்ட்’
  * விண்ணப்பிப்பவர்களது ‘பாஸ்போர்ட் சைஸ்’ புகைப்படங்கள்

  ஆகியவை கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு பொதுவாக கொடுக்க வேண்டியவையாகும். மேலும் ஒருவர் மாதாந்திர சம்பளம் பெறுபவரா, சொந்த தொழில் அல்லது வியாபாரம் செய்பவரா என்பதை பொறுத்து வெவ்வேறான சான்றுகள் தர வேண்டும்.

  மாத சம்பளம் பெறுபவர்கள் :

  * ‘சாலரி ஸ்லிப்’ மற்றும் பார்ம்-16ஏ
  * ‘ரேஷன் கார்டு’, ‘பான் கார்டு’, தொலைபேசி கட்டண ரசீதுகள் அல்லது மின்கட்டண ரசீதுகளின் ‘ஜெராக்ஸ்’ நகல்கள்
  * மற்ற அசையா சொத்துக்கள் பற்றிய சான்றுகள்
  * ஆயுள் காப்பீட்டு செய்திருந்தால் அதற்கான ‘பிரிமியம்’ செலுத்தியதற்கான ரசீதுகள்
  * ஆறு மாதங்களுக்கான ‘பேங்க் ஸ்டேட்மெண்ட்’ மற்றும் தேவையான அளவு புகைப்படங்கள்

  தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் :

  * எவ்வகை தொழில் அல்லது வியாபாரம் என்பது பற்றிய தகவல்கள்
  * வியாபாரம் அல்லது தொழில் நிறுவனத்தின் பதிவு சான்றிதழ்கள்
  * அங்கீகரிக்கப்பட்ட கணக்கு தணிக்கையாளர் மூலம் சான்றளிக்கப்பட்ட 3 வருட வருமான வரி கணக்கு அறிக்கைகள்
  * ‘அட்வான்ஸ் டாக்ஸ் பேமெண்ட்’ செலுத்தி இருந்தால் அதற்கான ஜெராக்ஸ் நகல்கள்
  * தொழில் வரி செலுத்தி வருவது பற்றிய சான்றுகள்
  * பிற வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் அதன் விபரங்கள்
  * அத்துடன் ‘பேங்க் ஸ்டேட்மெண்ட்’, குடும்ப அட்டை, தொலைப்பேசி கட்டண ரசீது, ‘இன்சூரன்ஸ்’ போன்ற பொதுவான தகவல்களும் அவசியம்.

  சொந்த இடத்தில் வீடு கட்டும்போது :

  * இடத்தின் ஒரிஜினல் பத்திரங்கள்
  * வீடு கட்ட சம்பந்தப்பட்ட அரசு துறையிடமிருந்து பெறப்பட்ட என்.ஓ.சி எனப்படும் தடையில்லா சான்று
  * இடத்திற்கு 30 வருடங்களுக்கான வில்லங்க சான்று
  * உச்ச வரம்பு சட்டத்துக்கு உட்பட்ட நிலம் என்பதற்கான சான்று
  * சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பால் அளிக்கப்பட்ட கட்டுமான அங்கீகாரம்
  * நிலத்திற்கான சொத்து வரி செலுத்திய ரசீதுகள்
  * அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வல்லுனரால் தரப்பட்ட கட்டுமான அமைப்புகள் மற்றும் செலவுகள் பற்றிய விபரம்

  கட்டுனரிடமிருந்து வீட்டுமனை பெறப்பட்டிருந்தால் :

  * கட்டுனரோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரிஜினல் ஆவணங்கள்* வீட்டு மனைக்கான ஒரிஜினல் பத்திரங்கள் மற்றும் சொத்து வரி செலுத்திய சான்றுகள்
  * ‘இன்டெக்ஸ்-2’ எனப்படும் இடம் பற்றிய சகல தகவல்களும் அடங்கிய பதிவேடு. அதில் சொத்து பற்றிய விவரம், அமைந்துள்ள இடம், நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தில் விற்பனை செய்தவர் யார், வாங்கியவர் யார், சொத்து மதிப்பு போன்றவை இடம் பெற்றிருக்கும்.
  * விவசாய விளைநிலம் அல்ல என்பதற்கான சான்று
  * கட்டுமானத்திற்காக சம்பந்தப்பட்ட அரசு துறையிடமிருந்து பெறப்பட்ட என்.ஓ.சி எனப்படும் தடையில்லா சான்று
  * 30 வருடங்களுக்கான வில்லங்க சான்றிதழ்
  * கட்டுனருடன் செய்து கொண்ட கட்டுமான ஒப்பந்தம்
  * சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பால் அளிக்கப்பட்ட அங்கீகாரம்

  கூட்டுறவு சங்க அமைப்புகளிடமிருந்து மனை பெறப்பட்டிருந்தால் :

  * மனை உரிமையாளருக்கு சங்கத்தில் உள்ள பங்குகள் விபரம்
  * அமைப்பால் அளிக்கப்பட்ட ஒதுக்கீடு பற்றிய விபரம்
  * பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள்
  * அமைப்பின் நடைமுறை விதிகள் பற்றிய குறிப்புகள்
  * சங்கத்திடமிருந்து பெற்ற தடையில்லா சான்று
  * இவை தவிர மற்ற வழக்கமான அனைத்து ஆவணங்களும் தேவைப்படும்.
  Next Story
  ×