என் மலர்

  ஆரோக்கியம்

  இணைய மானபங்கம் : அதிரவைக்கும் உண்மைகள்
  X

  இணைய மானபங்கம் : அதிரவைக்கும் உண்மைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஞ்ஞானம் வளரும்போதெல்லாம் அது பெண்களை ஏதாவது ஒருவகையில் பாதிக்கத்தான் செய்கிறது.
  விஞ்ஞானம் வளரும்போதெல்லாம் அது பெண்களை ஏதாவது ஒருவகையில் பாதிக்கத்தான் செய்கிறது. முன்பெல்லாம் பெண்களை அவமானப்படுத்த வேண்டும் என்றால், பொதுமக்கள் புழங்கும் கழிப்பறையில் எழுதிவைப்பார்கள். கண்ட இடங்களில் படம் வரைந்து வைப்பார்கள். இப்போது விஞ்ஞானத்தின் துணைகொண்டு பெண்களை அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  இன்டர்நெட் உபயோகிக்கும் பெண்கள், அதன் மூலமாக அனுபவிக்கும் புதிய அவமான நெருக்கடிகளுக்கு ‘இன்டர்நெட் மானபங்கம்’ என்று பெயர். பொது கழிப்பறைகளில் படம் வரைந்தவர்களும், பொது இடங்களில் பெண்களை இடித்து, உரசி கேலி கிண்டல் செய்தவர்களும் இப்போது இன்டர்நெட் வழியாக பெண்களுக்கு எதிரான ஆபாச அச்சுறுத்துதலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

  ஆபாசமும், வன்மமும் கலந்த வாசகங்களை வெளியிடுவது, செக்ஸ் ‘போஸ்ட்டுகளை’ ‘டாக்’ செய்தல், பெண்களின் போட்டோக்களுடன் அவர்களது போட்டோக்களையும் இணைத்து, விலைமாதுகளாக சித்தரித்தல்.. இப்படிப்பட்ட பல லீலாவினோதங்களை நடத்தி வருகிறார்கள். அதனால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர், ‘போடா புண்ணாக்கு’ என்று புறந்தள்ளி விடுகிறார்கள்.

  விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவி ஒருவர் தனது கல்விக்காக சில காட்சிகளை படம்பிடித்துவைத்திருந்தார். அந்த வீடியோவில் இருந்து சில ‘ஸ்டில்’களை எடுத்து காதலனே அவளது அக்கவுண்டில் போஸ்ட் செய்தார். லைக்குகளும், ஷேரிங்குகளும் நடந்தன. கடைசியில் அந்த பெண்ணின் போட்டோவை அப்படியே எடுத்து, ‘வெளியூரில் அந்த பெண் விலைமாதுவாக இருக்கிறார்’ என்று கூறி, சொந்த ஊரை சேர்ந்த சிலர் சித்தரித்துவிட்டார்கள். அந்த பெண் அதில் இருந்து தன்னம்பிக்கையோடு போராடி வெளியே வர சில காலம் பிடித்தது.

  இன்டர்நெட் மானபங்க பேர்வழிகள் தங்களுக்கான இரைகளை பலவிதங்களில் தேடிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ட்டிராக்கிங் சாப்ட்வேர் மூலம் பெண்களை மானிட்டர் செய்து, அதை அவ்வப்போது மானிட்டர் செய்து கொண்டிருப்பது சிலரது தலையாய வேலை.

  ‘சைபர் ரேப்’ எனப்படும் இன்டர்நெட் மானபங்கத்தில் பாதிக்கப்படும் பெண்களின் அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. ‘ஒரு வருடம், 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 9 கோடி பேர் சைபர் ரேப்பால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று, ஐ.நா.வின் ‘சைபர் வயலன்ஸ் எகைன்ஸ்ட் உமன் அன்ட் சில்ரன்’ என்ற ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

  இன்டர்நெட்டில் பெண்கள் ஆபாசமாக சித்தரிக்கப்படுவது, ஆண்களைவிட 27 மடங்கு அதிகமாக இருக்கிறதாம். 18 முதல் 24 வயது வரை உள்ள பெண்களே இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இன்டர் நெட் பயன்படுத்துவோரில் ஐந்தில் ஒருவர் ஆபாச அதிர்ச்சி தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. பெண்களுக்கு ஆபாச தொந்தரவு தரும் மனிதர்கள், பெண்களின் பெயரில் இருக்கும் ‘யூசர் நேம்’களையே குறிவைத்து தாக்குகிறார்கள்.

  இந்தியாவில் சைபர் ரேப் மூலம் பாதிக்கப்படும் பெண்களில் 18 சதவீதம் பேருக்கு, இன்டர் நெட் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வே இல்லை என்பது பரிதாபகரமான உண்மை. தான் பாதிக்கப்படுவது தெரிந்தாலும் அதை பெற்றோரிடம் கூறி நடவடிக்கை எடுக்க தயங்குபவர்களாக 46 சதவீதம் பேர் இருக்கிறார்கள். 35 சதவீதம் பேர்தான் எதிர்தாக்குதல் நடத்தவும், புகார் கொடுக்கவும் முன்வருகிறார்கள்.
  Next Story
  ×