என் மலர்

  ஆரோக்கியம்

  பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?
  X

  பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  என்னென்ன பொருட்கள் ஒரு பெண்ணின் ஹேண்ட் பேகில் இருக்க வேண்டும்.
  இப்போதெல்லாம் இளம் பெண்கள், கல்லூரி விட்டுக் கிளம்பியவுடன் அல்லது அலுவலகம் விட்டுக் கிளம்பியவுடன் அப்படியே தோழி, தோழர்களை சந்திக்கச் செல்வது, ஷாப்பிங் செல்வது, ஃபங்ஷன் செல்வது சகஜம்… நாள் முழுக்க வேலை செய்து டயர்டான நிலையில் உங்கள் ஹேண்ட் பேகில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே நீங்கள் மீண்டும் உடனடி புத்துணர்ச்சி அடைய முடியும்!… என்னென்ன பொருட்கள் ஒரு பெண்ணின் ஹேண்ட் பேகில் இருக்க வேண்டும்?

  சீப்பு:சின்ன அழகான சீப்பு உங்கள் முதல் தேவை. இப்போதெல்லாம் கையால் செய்யப்பட்ட அழகான சீப்புகள் மரத்திலும், மரக்கலரிலும் கிடைக்கிறது. கைப்பிடியுடன் இருந்தால் இன்னும் நல்லது.

  ட்ஷ்யூ பேப்பர்: டயர்டான முகத்தை நீங்கள் டிஷ்யூ பேப்பரை நனைத்து பிறகு துடைத்து விட்டால் போதும்… பளிச்சென்று ஆகிவிடுவீர்கள்… தவிர பெண்களுக்கு கையில் டிஷ்யூ பேப்பரின் தேவை இருந்து கொண்டே இருக்கும்.

  சாலிட் பவுண்டேஷன்:
  லிக்விட் பவுண்டேஷன் எனில் கைப்பைக்குள் கொட்டி விடும்… இது கொட்டாது! துடைத்த முகத்தில் இந்த சாலிட் பவுண்டேஷனை விரலில் தொட்டு முகத்தில் புள்ளிகளாக இட்டு, பிறகு அவற்றை இணைத்துத் தடவவும். பவுண்டேஷன் போட்டதுமே அனைத்து சோர்வும் ஓடியே போய்விடும்!

  காம்பேக்ட் பவுடர்: பவுண்டேஷனின் மேலே போட இந்த காம்பேக்ட் பவுடர் உதவம். பெரும்பாலும் இவை பஃப் உடன்தான் வரும். இல்லையெனில் அந்த பாக்ஸுக்குள் அடங்கும்படி ஒரு பஃப் வைத்துக் கொள்ளுங்கள். தவிர, இந்த காம்பேக்ட் பவுடர் டப்பாவின் மூடியில் முகம் பார்க்குள் கண்ணாடி பொருத்தப்பட்டு இருக்கும்படி வாங்கிக் கொள்ளுங்கள்… இதனால் தனியே கண்ணாடி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

  காஜல் பென்சில்: இப்போதெல்லாம் ஷார்ப்னர் தேடி காஜல் பென்சில் சீவ அவசியம் இல்லாத காஜல் பென்சில்கள் கிடைக்கின்றன. இவற்றைத் திருகினாலே போதும்… மை போட முடியும். அதேபோல் கண்ணில் போட்டால், கசிந்து ஓடாதபடி ஸ்மட்ஜ் ஃப்ரீ பென்சில்களும் கிடைக்கின்றன.

  லிப் கிளாஸ் (அல்லது) வாசலின்:
  உதடுகளை மென்மையாக்க இவை தேவை… வெறும் வாசலின் வாங்குவதற்குப் பதில் இப்போது கிரீன் ஆப்பிள், வெள்ளரி, மின்ட் வாசனைகளுடன் “சேப்ஸ்டிக்’ என்று ஸ்டிக் வடிவில் விற்கிறது. அவை மெல்லிய நிறத்துடனும், வாசனையுடனும் இருக்கும். போடுபவர்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

  லிப்ஸ்டிக்: லிப்ஸ்டிக் ரெகுலராக போடும் பழக்கம் உள்ளவர்கள் என்றாலோ, அல்லது சின்ன விசேஷம், பங்ஷன் என்றாலோ கையிலுள்ள லிப்ஸ்டிக் உபயோகமாகும். பிங்க் மற்றும் பிரௌன் என இரு கலர் லிப்ஸ்டிக்குகள் வைத்துக் கொண்டால், அனைத்து நிற ட்ரெஸ்களுக்கும் பொருந்தும். சிவப்பு, பிரௌன் போன்ற கலர்களுக்கும், பிங்க் பச்சை, ப்ளூ, போன்ற ட்ரெஸ்ஸுக்கு பிங்க் லிப்ஸ்டிக்கும் உபயோகிக்கலாம். இப்போது 24 மணி நேர லிப்ஸ்டிக்கும் வந்திருக்கிறது. இதனால் இவற்றை ஒருமுறை போட்டால் அடிக்கடி டச்சப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

  பொட்டு: பெண்கள் கைப்பையில் கட்டாயம் இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான ஒரு விஷயம் பொட்டு. சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் உங்களுக்குத் தேவையான சைஸில் கைப்பையில் வைத்துக் கொண்டால், தேவைக்கேற்ப வைத்துக் கொள்ள முடியும்.

  இது முக்கியம்:
  மேலே சொன்ன அடிப்படை மேக்கப் பொருட்களை அள்ளி கைப்பையில் போட்டுக் கொண்டால், பிறகு தேடுவதிலேயே பாதி நேரம் போய்விடும்! தவிர ஒவ்வொரு முறை தேடும்போதும் இதில் சில பொருட்கள் திறந்து கொட்ட சான்ஸ் இருக்கிறது. அதனால் இவற்றை அப்படியே உங்கள் கைப்பையில் போடாதீர்கள். கைப்பை விற்கும் கடைகளிலேயே பர்ஸ் போன்ற பவுச் விற்கிறது. “மேக்கப் பவுச்’ என்று கேட்டால் தருவார்கள். விதவிதமான நிறங்களிலும் கிடைக்கும். இவற்றை வாங்கி, இந்த மேக்கப் பொருட்களை போட்டு ஜிப் போட்டு மூடி பிறகு உங்கள் கைப்பையில் போட்டுக் கொண்டால் கொட்டி கலையாமல் இருக்கும். எடுக்கவும் வசதி!

  இது ரொம்ப முக்கியம்:
  சானிடரி நேப்கின் இரண்டு அல்லது மூன்று எப்போதும் கைப்பையில் வைக்க மறக்கவே மறக்காதீர்கள். நமக்கு மட்டுமல்ல, உடனிருக்கும் மற்ற பெண்களுக்கும் உதவும்!
  Next Story
  ×