search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண்களே அந்த இடத்தை சுத்தம் செய்யும் போது இந்த தவறை செய்யாதீங்க...
    X
    பெண்களே அந்த இடத்தை சுத்தம் செய்யும் போது இந்த தவறை செய்யாதீங்க...

    பெண்களே அந்த இடத்தை சுத்தம் செய்யும் போது இந்த தவறை செய்யாதீங்க...

    பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்? எந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது நல்லது? என்பது குறித்து அறிந்த கொள்ளலாம்.
    பிறப்புறுப்பை சுத்தம் செய்யும்போது, பிறப்புறுப்புக்குள் விரலைவிட்டு சுத்தப்படுத்துவது தவறானது. ஏனெனில் பிறப்புறுப்புக்குள் எந்த திரவமும், அல்லது திடப் பொருளாக அழுக்கும் சென்று சேர்வதில்லை. விரல்களை உள்ளே விட்டு சுத்தம் செய்வதால் தேவையற்ற தொற்று ஏற்படலாம். பிறப்புறுப்பின் பக்கவாட்டு பகுதி, அதாவது உதடு போன்ற பகுதியை மட்டுமே சுத்தம்செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். மேலும், சிலருக்கு சோப்பு பயன்படுத்துவது அரிப்பு ஏற்படுத்தலாம் என்பதால், மிதமாக சூடு செய்யப்பட்ட நீரையே பயன்படுத்தி பிறப்புறுப்பைச் சுத்தப்படுத்தலாம்.

    மேலும், மிதமான, அதிக வேதிப்பொருட்கள் அற்ற சோப்பைப் பயன்படுத்தலாம். அல்லது மிதமான Intimate Wash பயன்படுத்தலாம். ஆனால் அதில் எந்த நறுமணமும், அல்லது க்ளிட்டர் போன்ற தயாரிப்புகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில்,  நறுமணமூட்டப்பட்ட வாஷ்கள் நிச்சயம் அரிப்பை ஏற்படுத்தும்என்கின்றனர் நிபுணர்கள்.

    நம் சருமத்தில் எங்கெல்லாம் சூரிய ஒளிபடவில்லையோ, அங்கெல்லாம் ஈரம், வியர்வை ஆகியவை தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால், அந்தப் பகுதிகளில் கிருமித்தொற்று வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அதிலும் குறிப்பாக, பிறப்புறுப்பில் இப்படி நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், பிரைவேட் பார்ட்ஸை தினமும் இருமுறை மட்டும் சோப்பு, வஜைனல் வாஷ் என்று பயன்படுத்தி சுத்தமாக வைத்திருங்கள்.

    மேலும், பிறப்புறுப்பை சுத்தம்செய்யும்போது, மேலிருந்து கீழாக, (அதாவது இடுப்புப் பகுதியில் இருந்து கீழ்நோக்கி சுத்தம் செய்ய வேண்டும்) கீழிருந்து மேல்பக்கமாக சுத்தம் செய்தால், பின்புறத்தில் இருக்கும் அழுக்கின் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர்.

    பிறப்புறுப்பில் அரிப்பு இருக்கிறது என்றால், வெதுவெதுப்பான நீரால் அந்த இடத்தை ஐந்தாறு முறை வாஷ் செய்துபாருங்கள். சரியாகவில்லையென்றால், உடனே மருத்துவரைப் பார்த்து விடுங்கள். பிறப்புறுப்பின் சுத்தம் தான் உங்களை கருப்பை வாய்ப்புற்றுநோயில் இருந்து காப்பாற்றும் என்பதில் கவனம் தேவை.

    மேலும், மாதவிடாய் நிகழ்ந்துகொண்டிருக்கிற வயதில், வறட்சி, அரிப்புடன்கூட புண்களும் வருகிறது என்றால், பிறப்புறுப்பில் ஏதாவது கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கத்தான் வாய்ப்பிருக்கிறது. அது பரவுவதற்குள், உடனே ஒரு மகப்பேறு மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது.
    Next Story
    ×