search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாதவிடாய்
    X
    மாதவிடாய்

    மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்படும் பெண்களுக்கு சிகிச்சை

    சரியான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகளில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத வழிமுறைகளைப் பின்பற்றினால் மிகுந்த பலனை அடைய இயலும்.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கிளாரன்ஸ் டேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று பரவலுக்கு பிந்தைய தற்போதையச் சூழலில் விடுபட்ட மாதவிடாய், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்குடன் கூடிய மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. கொரோனாவால் மாதவிடாய் சுழற்சியில் ஏற்பட்ட தாக்கம் என தற்போது இதனை கூற இயலாது எனினும், பல காரணிகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஆகியவை பெரும்பங்கு வகித்து மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதை பார்க்க முடிகிறது.

    தற்போது செய்ய வேண்டிய வழிமுறைகள், தற்போது தவறாக நடந்தது என்ன? நாம் செய்த குறைகள் என்னென்ன? அவற்றை சரிசெய்வதற்கான வழிகளை அறிதல் மிக அவசியமாகும். முதன்மையாக டாக்டரைச் சந்தித்து இந்த நிலைக்கான காரணம் மற்றும் நோயறிதல் அவசியமாகும்.

    ஒருவேளை ஏதேனும் நோய் அல்லது குறைபாடு கண்டறியப்பட்டால் அதனைச் சரிசெய்யவும், மீண்டும் பழைய உடல் இயக்க நிலைக்கு கொண்டுவர உடலில் நச்சுநீக்கம் செய்ய ஆயுர்வேதத்தின் பஞ்சகர்மா (உடல்நச்சு நீக்க சிகிச்சை வழிமுறைகள்) சிகிச்சை முறைகளை மேற்கொண்டு அதன் மூலம் சீரான மாதவிடாய் சுழற்சியினை ஏற்படுத்த இயலும். முறையான வழிமுறைகள், மருத்துவ வழிகாட்டுதலுடன் கூடிய உணவுப் பழக்க வழக்கங்கள் உடற்பயிற்சி. யோகாபயிற்சிகள் முதலானவை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

    சரியான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகளில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத வழிமுறைகளைப் பின்பற்றினால் மிகுந்த பலனை அடைய இயலும். மாதவிடாய்க் கோளாறுகளுடன் அவதிப்படும் பெண்கள் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவில் சிறப்பு மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று உடல் நச்சு நீக்க சிகிச்சை வழிமுறைகள் குறித்து அறிந்து ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×