என் மலர்

  ஆரோக்கியம்

  கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹெர்னியா ஏற்படலாம்
  X
  கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹெர்னியா ஏற்படலாம்

  கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹெர்னியா ஏற்படலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்ப்ப காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி சுயமாக மருந்துகளையோ, சிகிச்சை முறைகளையோ நாடாதீர்கள். மருத்துவரிடம் தங்களுக்கு இருக்கும் அசெளகரியங்களையும், அறிகுறிகளையும் தெளிவாக விளக்குங்கள்.
  கர்ப்ப காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி சுயமாக மருந்துகளையோ, சிகிச்சை முறைகளையோ நாடாதீர்கள். மருத்துவரிடம் தங்களுக்கு இருக்கும் அசெளகரியங்களையும், அறிகுறிகளையும் தெளிவாக விளக்குங்கள்.

  கர்ப்பிணிகளுக்கும் குடலிறக்கம் ஏற்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் அல்லது சாதாரணமாக உறுப்பில் இருக்கும் துவாரத்தின் வழியாக உறுப்பின் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பு. ஹெர்னியா வயிறு அல்லது தொடைப்பகுதிக்கு மேல் ஏற்படும் எனினும், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஹெர்னியா சிகிச்சையளிக்காமல் விடப்பட்டால் மிகுந்த ஆபத்தை உண்டாக்கும்.

  வயிற்றுப்பகுதியின் மீது கர்ப்பகாலத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வயிற்றுப்பகுதியானது வளர்ந்து விரிவடையும்போது, அது வயிற்றுச் சுவர்களின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, முன்பு இருந்த பிரச்சனையற்ற சிறு துவாரங்களை அசெளகரியமான சூழலை ஏற்படுத்த வைக்கிறது. ஹெர்னியா இருந்தால் தொப்புளைச் சுற்றி சிறு புடைப்பு உருவாகும். இருமினாலோ தும்மினாலோ அது அசெளகரியத்தை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு ஹெர்னியா மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். குழந்தைக்கு இதனால் நேரடியான பாதிப்புகள் இல்லை.

  கர்ப்பகாலத்தில் ஹெர்னியாவை ஏற்படுத்தக்கூடிய அபாயக் காரணிகள் எவை? உடல் பருமன், அதிகமான கர்ப்ப எண்ணிக்கை, வயிற்றுப்பகுதி அறுவை சிகிச்சைகள், அதிக எடை தூக்குதல், குடும்ப வரலாறு, தாமதமான கர்ப்பம், கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் ஆகியவை.

  உங்களது மருத்துவர் உங்கள் சப்போர்ட் பெல்ட்டை பரிந்துரைக்கலாம். வயிற்றுப்பகுதியின் தசைகளை ரிலாக்ஸாக வைக்கும் பயிற்சிகளை பரிந்துரைக்கலாம். கட்டுப்படாத நிலையில், அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கலாம். 
  Next Story
  ×