என் மலர்

  ஆரோக்கியம்

  பெண்களை அதிகம் தாக்கும் குதிகால் வலி
  X

  பெண்களை அதிகம் தாக்கும் குதிகால் வலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மனித உடலில் ஏற்படக்கூடிய வலிகளில் குதிகால் வலி, பாத வீக்கம் பற்றி பார்ப்போம். இன்றைய கால கட்டத்தில் குதிகால் வலி என்பது பெரும்பாலும் பெண்களுக்கு தான் அதிகம் வருகிறது.
  நம் உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வலி ஏற்படுகிறது. இந்த வலியானது ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு வாரத்துக்குள் சரியாகி விட்டால் ஒன்றும் பிரச்சினை அல்ல.

  ஆனால் இந்த வலி தொடர்ந்து மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் தொடர்ந்து இருந்தால் அது நம் உள் உறுப்புகளின் குறைபாடுகளை நமக்கு முன்கூட்டியே தெரிவிக்கின்றன. மனிதன் மட்டும் அல்ல, பறவைகள், விலங்குகள் என எல்லோரது உள் உறுப்புகளுக்கும், வெளிப்புற உணர்வு உறுப்புகளுக்கும் தொடர்பு உடையதே.

  உதாரணமாக மண்ணீரலுக்குள் பாதிப்பு ஏற்பட்டால் நமது வெளிப்புற உணர்வு உறுப்பான புண், வாய்வலி இவைகளில் எல்லாம் பாதிப்பு இருக்கும். இவை மண்ணீரலின் பாதிப்புக்கு அறிகுறிகள் ஆகும். பெண்களின் உடலில் உள்ள ரத்தத்தின் அளவு (கீமோகுளோபின்) ஓர் காரணம். அதே நேரம் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு உண்ணுவதில்லை, காலை உணவு காலை 7 மணி முதல் 9 மணிக்குள் அருந்தி, அந்த உணவு எளிமையாக ஜீரணிக்கப்படும்.

  ஜீரணிக்கப்பட்ட உணவு உடலில் சாறு தனியாகவும், சக்கை தனியாகவும் பிரிக்கப்பட்டு சாறு ரத்தத்தில் கலந்து எல்லா உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும். சக்கை கழிவுவாக வெளியேற்றப்படும். குதிகால் வலி, பாத வலி என்பது நம் உடலில் உள்ள 72,000 நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அப்படி இருத்தல் நம் உடலில் எந்த இடத்திலும் வலியோ, குத்தல், குடைச்சலோ இருக்காது.

  குதிகால் வலி வந்தால், ஒரு நரம்பில் மட்டும் தான் ரத்த ஓட்டம் சரியாக இல்லை என்று எல்லோரும் நினைக்கின்றனர். 41 நரம்புகளில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாத போதுதான் குதிகால் வலி ஏற்படுகிறது.

  குதிகால்வலி என்பது இருதயத்தின் இயக்கமும், செயல்பாடும் எவ்வாறு குறைகிறது என்பதை நமக்கு உணர்த்தும் அறிகுறிதான். குதிகால் வலியை உடனடியாக சரி செய்து கொள்ளவும். அப்போதுதான் இருதயம் சீராக இயங்கும். குதிகால் வலி உள்ளவர்களுக்கு நாவறட்சியும் ஏற்படும். இந்த வலி உள்ளவர்கள், தினசரி அதிகமாக தண்ணீர் குடிக்க  வேண்டும். முடிந்தவரை தரையில் அமர்ந்து உணவு உண்ணுவதே சிறப்பாகும்.

  சித்தவர்ம மருத்துவத்தில் நரம்புகளில் இருக்கும் ரத்தம் உறைதல், அடைப்பு இவைகளை நீக்க மூலிகை சாறுகள் பலவகை உள்ளன. இவை உள்ளுக்கு அருந்துவதால் ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கி ரத்தம் சீராக செல்கின்றன. அதே போல் கால்களில் உள்ள வர்மபுள்ளிகளான விருத்தி வர்மம், படங்கல் வர்மம், குதிகால் வர்மம் என மூன்று வர்ம புள்ளிகளை தூண்டுவதால் குதிகால் வலி குறைந்து இருதயம் பலப்படுகிறது. இனி ஒவ்வொரு புள்ளிகளின் பயன்களை பார்ப்போம்.

  விருத்தி வர்மம்:  அல்லது ž மாத்திரை அளவு தூண்டப்படும் போது கால்களிலுள்ள அனைத்து நரம்புகளிலும் ரத்த ஓட்டம் சீராகும். கால்களுக்கு நல்ல ஆற்றல் கொடுக்கும். கால் வலியை போக்கும். காலிலுள்ள சோர்வை நீக்குகிறது. இடுப்பு வலியையும் குறைக்கிறது. இந்த வர்ம புள்ளி உயிரை காப்பாற்றும் அடங்கலாகவும் செயல்படுகிறது.

  படங்கல் வர்மம்: கால் பாதங்களில் உள்ள சிறு நரம்புகளுக்கு ரத்த ஓட்டத்தை எடுத்துச் சென்று காலில் உள்ள வலியை குறைக்கிறது.

  குதிகால் வர்மம்: கால் வலியை சரியாக்கும். கால்களுக்கும், இருதயத்திற்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கும். கால்களுக்கும், உடலுக்கும் நல்ல ஆற்றலை தரும். 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வர்மத்தின் மாத்திரையின் அளவு என்பது  மாத்திரை அளவுதான் தர வேண்டும்.
  Next Story
  ×