search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களின் நோய்களை குணப்படுத்தும் கசகசா லேகியம்
    X

    பெண்களின் நோய்களை குணப்படுத்தும் கசகசா லேகியம்

    கசகசாவில் 50 சதவீதம் எண்ணெய்த்தன்மை இருக்கிறது. இந்த எண்ணெயில் இருக்கும் கொழுப்பு உடலுக்கு நன்மை செய்வதாகும். கசகசாவை அரைத்து நாம் உணவில் சேர்க்கிறோம்.
    பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் மருந்துகளிலும் உணவுகளிலும் கசகசாவை பயன்படுத்தி வருகிறோம். பாப்பி என்னும் செடியில் விதைகளை தாங்கி நிற்கும் விதைப்பை முற்றி, காய்ந்த பின்பு அதிலிருந்து எடுக்கப்படும் விதை தான் கசகசா எனப்படுகிறது.

    விதை முற்றாமல் இருக்கும் போது விதைப்பையை கீறி, உறிஞ்சிகள் மூலம் பாலை சேகரித்து உறைய வைத்து தயாரிக்கப்படுவதுதான் அபின். இது போதைப்பொருள்.

    நாம் உணவில் பயன்படுத்தும் கசகசா முற்றிய விதைகளாகும். அதில் போதைக்குரிய அம்சம் எதுவும் இல்லை.

    கசகசாவில் 50 சதவீதம் எண்ணெய்த்தன்மை இருக்கிறது. இந்த எண்ணெயில் இருக்கும் கொழுப்பு உடலுக்கு நன்மை செய்வதாகும். கசகசாவை அரைத்து நாம் உணவில் சேர்க்கிறோம்.

    அதனால் உணவுக்கு சுவையும், மணமும் கிடைக்கிறது. கூடவே அதில் இருக்கும் மருத்துவ சக்தி உடல் உறுப்புகள் நன்றாக இயங்கச்செய்கிறது. இதில் மருந்துவ சக்தி உடல் உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்கிறது. இதில் வைட்டமின் - பி, மக்னீசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன. இது உடல் இயக்கத்திற்ககு் உதவுகிறது.

    கசகசா உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. கோடை காலத்தில் உண்டாகும் வாய்புண்களை நீக்கும் சக்தி இதற்கு இருக்கிறது. வயிற்று புண்களையும் குணப்படுத்தும்.

    சூட்டினால் வயிற்றுபோக்கு பாதிப்பிற்கு உள்ளாகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கசகசாவை ஊறவைத்து அரைக்க வேண்டும். அதில் பசும்பால் அல்லது தேங்காய் பால் கலந்து பருக வேண்டும். மாதவிடாய் முடிவுக்கு வரும் மேனோபாஸ் காலகட்டத்தில் பெண்களுக்கு உடல் வறண்டுபோகும். கண்களை சுற்றி கருவளையமும் சுருக்கமும் உண்டாகும். உடல் பலமும் குறையும். அப்போது கசகசா மற்றும் பாதாம்பருப்பை அரைத்து பாலில் கலந்து பருகலாம்.

    பூப்பெய்திய தொடக்க காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் வயிற்றுவலி தோன்றும். மேற்கண்ட முறையில் கசகசாவை அரைத்து மாதவிடாய் வருவதற்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே சாப்பிட்டுவந்தால் வயிற்றுவலி குறையும். உடலும், வனப்பு பெறும். பிரசவித்த பெண்களும் இதனை சாப்பிடலாம்.

    கசகசா ஆண்மை சக்தியை அதிகரிக்கும். நரம்பு இயக்கங்களை சீர்படுத்தி இரவில் ஆழ்ந்த தூக்கத்தையும் தரும். மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கச்செய்யும். நரம்பு செல்களில் உற்பத்திக்கும் உதவும். சருமத்தில் தேமல், கரும்புள்ளிகள் இருந்தால் கசகசாவை தேங்காய்பாலில் அரைத்து அதில் பூசவேண்டும். கசகசா பிஸ்கெட், சாக்லெட், கேக் போன்றவைகளிலும் சேர்க்கப்படுகிறது. கசகசா லேகியம் பல்வேறு நோய்களுக்கு நிவாரணமாக அமைகிறது.
    Next Story
    ×