என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இந்த நூற்றாண்டில் சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை. சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம்.
    சில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.

    சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்னைகள் :

    * சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகுவலி, அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.

    * தாயிடம் இருந்து சிசுவுக்கு உணவு மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய நஞ்சுக் கொடி (placenta), தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப் பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக்கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரித்துவந்துவிட வேண்டும். ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.

    * சிசேரியன் பிரசவம் செய்வதால், தாயின் கர்ப்பப்பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில், அப்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.

     * சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறை மாத குழந்தைகளுக்குப் பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, பச்சிளம் குழந்தையின் வயிற்றுக்குள் ரத்த ஓட்டம் சுருங்கி அதனால் மலக்குடல் அழுகி ரத்தப்போக்கு ஏற்படுவது (Necrotising enterocolitis), தொற்றுநோய்கள் என பிறந்த முதல் மூன்று நாட்களில் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.



    * நிறைமாதமான 37 - 40 வாரங்களுக்கு முன்பாக கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்வது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

    சுகப்பிரசவத்தில் சிரமங்களை எதிர்கொண்டு வெளிவரும் குழந்தைகள் எதிர்காலத்தில் உடல் மற்றும் மனதளவில் தைரியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. இதற்காகவும் சிசேரியன் பிரசவங்கள் தவிர்ப்போம், சுகப்பிரசவத்துக்கு தயாராவோம்”

    சிசேரியன் பிரசவம் தவிர்க்கலாம்!

    * இடுப்பு எலும்புப் பகுதிக்கு பயிற்சி கொடுப்பது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். குழந்தையின் தலை மற்றும் உடல் வெளியேறும் வகையில் பெண்ணின் பிறப்புறுப்பு விரிந்து கொடுக்க, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகளும் உறுப்புகளும் நன்றாக ஒத்துழைக்க வேண்டும். நடைப்பயிற்சி, மருத்துவர் ஆலோசனையுடன் யோகா, கால்களை மடக்கி நீட்டுவது போன்ற எளிய உடற்பயிற்சிகள் இதற்கு கைகொடுக்கும்.

    * கர்ப்பகாலத்தில் உறங்குவது, அமர்வது என ஒரே நிலையில் நிலைகொள்ளும் ஓய்வு தேவையில்லை. அன்றாட வேலைகளை, குனிந்து, நிமிர்ந்து செய்யும் வீட்டுவேலைகளைச் செய்யலாம்.

    * துரித உணவு மற்றும் அதிக உப்பு, இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளை உட்கொண்டு மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
    பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும்.
    குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.
     
    பிறப்புறுப்புப் புண்:
     
    இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.
     
    பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் அசாதாரணப்போக்கு:
     
    ஒரு மனிதனின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும். பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள் கறைபடியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும்.


     
    கவட்டியில் நெறிகட்டுதல்:
     
    ஆண், பெண் இருபாலருக்கும் கவட்டியில் அதாவது இடு‌ப்பு‌ம் காலு‌ம் இணையு‌ம் பகு‌தி‌யி‌ல் நெறிகட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.
     
    விதைப்பை வீக்கம்:
     
    ஆ‌ண்களு‌க்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால் வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.


     
    அடிவயிற்றில் தொடர்ச்சியான வலி:
     
    பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம். உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும்.
     
    இ‌தி‌ல் ஒரு ‌சில அ‌றிகு‌றிக‌ள் வெறு‌ம் தொ‌ற்று‌க் ‌கிரு‌மிகளாலு‌ம் ஏ‌ற்படலா‌ம். ஆனா‌ல் எதுவாக இரு‌ந்தாலு‌ம் உடனடியாக மரு‌த்துவ ப‌ரிசோதனை செ‌ய்து ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வது ‌மிகவு‌ம் மு‌க்‌‌கிய‌ம்.
    ஐவிஎப் என்றால் என்ன? எந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது? சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    இயற்கையாக குழந்தைப் பெற்றுக்கொள்ள இயலாத தம்பதியினருக்கு, இன் விட்ரோ பெர்டிலைசேசன் (In vitro fertilisation- IVF) என்கிற முறை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளுதல் வரம்.

    இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்வதற்கு முன், ஐவிஎப் என்றால் என்ன? எந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது? சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா? எவ்வளவு செலவாகும் என்பது போன்ற அனைத்துத் தகவல்களைத் தம்பதியினர் அறிந்திருப்பது அவசியம்”

    அதோடு, டெஸ்ட் டியூப் பேபி பெற்றுக்கொள்வதுக்கு முன்னர் தம்பதியினர் கவனிக்கவேண்டியவை அதிகம். அதிலும் குறிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை பார்ப்போமானால்….,

    * ஐவிஎப் சிகிச்சைக்குச் செல்பவர்களில் 30 சதவீதத்தினருக்கு மட்டுமே குழந்தைப் பிறக்க வாய்ப்புள்ளது. இதனைத் தம்பதியினர் புரிந்துகொண்டு மன ரீதியாகத் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்கு குறைந்தது மூன்று லட்சம் ரூபாய் செலவாகும். அதற்கேற்ப பொருளாதார ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும்.

    * வெளிநாடுகளில் ஐவிஎப் சிகிச்சை முறைக்கு ஆகும் செலவு, மருத்துவக் காப்பீட்டில் இழப்பீடாகக் கிடைக்கும். இந்தியாவில் ஐவிஎப் சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் கிடையாது. இதைத் தம்பதியினர் தெரிந்துகொள்ள வேண்டும்.



    * சிகிச்சைக்கு முன்னர் தம்பதியினர் உயர்தரமான புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    * சர்க்கரை, ரத்தக் கொதிப்பு நோயுள்ளவர்கள் அதற்கான சிகிச்சையை முறையாகப் பின்பற்றி, கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தைராய்டு தொந்தரவு உள்ளவர்கள் பரிசோதனை செய்து, உரிய மருத்துகளைத் தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும்.

    * ரத்தச் சோகை, முறையற்ற மாதவிலக்கு சுழற்சி இருப்பவர்கள், முன்கூட்டியே மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனையில் சிசிச்சை பெற்றிருப்பது அவசியம்.

    * உடல் பருமனாக இருப்பவர்கள் யோகா, வாக்கிங் என தங்களுக்கேற்ற உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுத்து 60 கிலோவுக்குள் எடையை வைத்திருக்க வேண்டும்.

    * புகைபிடித்தல், மது அருந்துதல், பான்பராக் போடுதல் போன்ற பழக்கம் உள்ள ஆண்கள், அவற்றைக் கைவிடுவது முக்கியம்.

    * உடலில் அதிக அளவில் வெயில்படுதல் விந்து உற்பத்தியைப் பாதிக்கும் என்பதால், ஆண்கள் வெயிலில் அலைவதை முடிந்தவரைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    * உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்க, தம்பதியர் யோகா, உடற்பயிற்சிகளைத் தினமும் செய்வது நலம்.

    * சிகிச்சையைத் துவங்கும்போது எப்போது வேண்டுமானாலும் விடுமுறை எடுக்கவேண்டிய அவசியம் வரும் என்பதால், அலுவலகத்தில் முன்கூட்டியே அனுமதி பெற்று, மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.
    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான் செக்ஸ் உறவும் அளவுக்கு அதிகமானால் சலித்து விடும். செக்ஸ் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல… மனமும் சார்ந்தது!
    அதிக ஆர்வத்தோடு செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கட்டத்தில் அதன் மேல் எந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும். சிலருக்கு உடல்ரீதியாகவும், சிலருக்கு மனரீதியாகவும் ஆர்வம் குறைந்துவிடும். இந்தப் பிரச்னைக்கு `Sexual burnout condition’ என்று பெயர்.

    ஏதாவது ஒரு விஷயத்தில் அதீத ஆர்வமும், அதிக ஈடுபாடும் கொண்டிருந்தால் காலப்போக்கில் அதன் மீது சலிப்பு வந்துவிடும். இதை `Emotional fatique’ என்று சொல்வோம். தாம்பத்திய உறவு என்பதே பாலியல் கவர்ச்சி சார்ந்துதான் இருக்கிறது.



    இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையும் போது, மனைவியின் மீதான அன்பும் குறைய ஆரம்பிக்கும். மனைவி சிறிய தவறு செய்தால் கூட அதை பெரிய விஷயமாக்கி சண்டை போடுவார்கள். மனைவியிடம் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.

    இந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது?

    முதலில் ஆண்கள் விஷயத்தை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உறவுக்கு சில நாட்கள் ஓய்வு கொடுக்கலாம். செக்ஸ் தவிர மனைவியிடம் சந்தோஷமாக இருக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. மனநிலையை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள்.



    சில நாட்கள் இவ்வித கட்டுப்பாட்டுடன் இருந்தால், இயல்பாகவே செக்ஸ் ஆசையானது ஒருநாள் கிளர்ந்தெழும். அதனால் கவலைப்பட தேவையில்லை. மனைவியும் இந்தப் பிரச்சனை கணவனிடம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான நேரங்களில் கணவனை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதரவாக செயல்பட வேண்டும்.

    இந்த விஷயத்தில் விடும் சிறிய இடைவெளியானது, தாம்பத்திய உறவை பெரிய அளவில் பலப்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான் செக்ஸ் உறவும் அளவுக்கு அதிகமானால் சலித்து விடும். செக்ஸ் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல… மனமும் சார்ந்தது!
    எதிர்பார்ப்பும், விருப்பமுமே தாம்பத்தியத்தை திருப்திகரமானதாக மாற்றும். எனவே விருப்பத்தை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதே நேரத்தில் ஒத்துழைப்பை துணைவர் வழங்க வேண்டும்.
    “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்ற பழமொழி குடும்ப வாழ்க்கைக்குப் பொருந்திப் போனால் வருத்தமே மிஞ்சும். தாம்பத்ய ஆசை நாளாக நாளாக அலுத்துப் போகக் காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் “ஆசை அனுதினமும், மோகம் முழு இரவும்” என்று புதுமொழி புனையும் அளவுக்கு தாம்பத்யத்தை திருப்திகரமாக அனுபவிக்க வழியிருக்கிறது என்கிறார்கள், இங்கே பேசும் தம்பதிகள். அவர்களின் அனுபவ தகவல்கள்:

    இடைவெளி நல்லதே :

    “என் கணவரது வேலை பயணம் சார்ந்தது. ஓய்வு குறைவுதான். நாங்கள் அவரது பயணத்திற்கு முந்தைய தினமும், பயணம் முடிந்து திரும்பிய தினமும், குறித்து வைத்தே இல்லற இனிமையை அனுபவிக்கிறோம்” என்கிறார் 39 வயதான மதுமிதா. திருமணமாகி 15 ஆண்டாக இந்தத் தம்பதி தாம்பத்யத்தில் குறையின்றி வாழ்கிறார்கள். அதன் ரகசியம் சீரான இடைவெளி, தவறாத தாம்பத்யம்தான்.

    சில தம்பதியர், கொஞ்ச நாள் இடைவெளி விழுந்தாலே, ஏதோ உறவு முறிந்ததைப்போல முறுக்கிக் கொண்டும், வேறு விஷயங் களில் வெறுப்பை வெளிப்படுத்தியும் மோதிக் கொள்வார்கள். ஆனால் குறிப்பிட்ட இடைவெளியே சிறப்பான தாம்பத்யத்திற்கு சரியான வழி என்று மதுமிதா சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சீரான இடைவெளியில் தாம்பத்யத்தை இனிமையாக்கலாம்.

    ஏக்கங்கள்.. ஏணிகள்.. :

    எதிர்பார்ப்பும், விருப்பமுமே தாம்பத்யத்தை திருப்திகரமானதாக மாற்றும். எனவே விருப்பத்தை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதே நேரத்தில் ஒத்துழைப்பை துணைவர் வழங்க வேண்டும். சொல்லாமல் மனதுக்குள் மறைத்து வைக்கும் ஏக்கங்கள் ஏடா கூடங்களையே உருவாக்கும். வித்தியாசமான சில விருப்பங்களையும் வெறுப்பின்றி பகிர்ந்து கொள்ளும் தம்பதிகளின் தாம்பத்ய சுகத்தில் என்றுமே குறையிருக்காது.

    “என்னை எப்படி திருப்திப்படுத்த வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்” என்கிறார் 20 வருட தாம்பத்ய அனுபவம் கொண்ட ஆராதனா. “ஆனால் இன்றும் நான், அவள் எப்போது எதை செய்யச் சொல்கிறாளோ அதையே செய்வேன். அதுவே எங்கள் தாம்பத்யத்தை திருப்திப்படுத்துகிறது” என்கிறார் அவரது கணவர். ‘இணக்கமே இல்லறத்தை இனிமையாக்கும்’ என்ற பொய்யாப் புலவர் வள்ளுவரின் வாக்கு பொய்க்குமா என்ன?

    என்றும் இளமை..:

    பிள்ளைகள் பெரியவர்களாக வளர்வது, தம்பதிகளிடையே தாம்பத் யத்தை குறைக்கலாம். அது அவர்களுக்குள் மனக்கசப்பையும் ஏற்படுத்தலாம். 3 குழந்தைகளுக்கு பெற்றோரான ஊர்மிளா-மாதவன் தம்பதியின் அனுபவம் இதற்கு தீர்வு சொல்லும். “நாங்கள் டீன்ஏஜ் பருவத்தினர் போலவே இன்றும் உணர்கிறோம். அதே சிலேடைப் பேச்சு, சீண்டல் போன்றவை எங்கள் தாம்பத்ய இனிமையை குறையில்லாமல் வைத்திருக்கிறது. தலையணைச் சண்டைகூட எங்கள் தாம்பத்யத்தை உச்சத்துக்கு கொண்டுபோகும் மந்திரம்தான்” என்கிறது இந்தத் தம்பதி. மனதை இளமையாக வைத்துக் கொள்வது மனக்குறையில்லாமல் மகிழ்ச்சி வழங்கும் என்பது இதைத்தானோ!



    உணர்வின் உந்துதல்..:

    தாம்பத்யத்தில் இது முக்கியமான தாரக மந்திரம். துணையின் உணர்வை புறம்தள்ளாமல் செவிசாய்ப்பதில்தான் இல்லற இனிமை அடங்கி இருக்கிறது. அவரவர் வேலை - உடல் நிலைக்கு ஏற்ப மனமும் செயல்படும். கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் உறவுக்கான சமிக்ஞையை வெளிப்படுத்தினாலும் மற்றவர் அதற்கு மதிப்பளிப்பது முக்கியமாகும்.

    “நாங்கள் நடுத்தர வயதில்தான் ஒருவரின் உணர்வுக்கு மற்றவர் ஒத்துழைக்காததால் உறவுகள் புறம்தள்ளப்பட்டதை உணர்ந்தோம். பிறகு அந்த தடைகளை களைய இருவரின் வேலை மற்றும் ஓய்வுக்கு ஏற்ப திட்டமிட்டுக் கொண்டோம். இப்போது வாரத்தில் இரு முறையாவது எங்கள் தாம்பத்யம் தடையின்றி நடைபெறுகிறது. எங்களில் ஒருவர் உணர்வை வெளிப்படுத்தினாலும் மற்றவர் இணக்கம் தெரிவிப்பதால் இந்த இன்பம் சாத்தியமானது” என் கிறார் ஆர்த்தி.

    அடிக்கடி அவசியமில்லை.. :

    “முன் விளையாட்டுகளே என்னை முழுமையாக திருப்திப்படுத்துகிறது. நாங்கள் உறவு கொண்டது சில முறையாக மட்டுமே இருக்கும். முன்விளையாட்டுகளுடனே பல இரவுகள் இனிமையாக கழிந்திருக்கின்றன” என்கிறார் ஷாருமதி.

    அடிக்கடி உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அவ்வப்போது உறவு ரீதியான ஸ்பரிசங்கள், கட்டிப்பிடித்தல், முத்தங்கள் என முன் விளையாட்டுகள் தொடர வேண்டும். உச்சம் வரை உறவு கொள்வது மட்டும் தாம்பத்ய சுகம் இல்லை. அன்பும், தழுவலுமே இல்லறத்தை இனிமையாக்கும் ரகசியங்களாகும்.

    புகழ்ச்சி மந்திரம் :

    குழந்தை பிறப்புக்குப்பின் உடல் எடை கூடுவது எத்தனையோ பெண்களின் தாம்பத்ய வாழ்க்கையைப் பாதித்திருக்கிறது. அதற்கு தீர்வு சொல்கிறது சாந்தியின் வாழ்க்கை அனுபவம். 40 வயதான சாந்தி சொல்கிறார். “நான் முதல் பிரசவத்திற்கு பின்னால் 15 கிலோவுக்கு மேல் எடை கூடிவிட்டேன். என் அழகிய தோற்றம் மாறிவிட்டது, ஆனால் அன்பான கணவரால் இன்றுவரை என் தாம்பத்ய வாழ்வில் குறையில்லை. இப்போதும் நான் எந்தவிதத்தில் அழகாக இருக்கிறேன் என்று வர்ணிப்பார், எது என்னிடம் கவர்ச்சியாக இருக்கிறது? என்று ரசித்துச் சொல்வார். எப்படி எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறு வார்.”

    பாராட்டு ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதற்கு சாந்தியின் வாழ்க்கை ஒரு உதாரணம். அவரது சொற்களில் கவலையைவிட மகிழ்ச்சியே தொனிக் கிறது.

    தம்பதிகள் சொன்ன ரகசியம், தேங்கி நிற்கும் தாம்பத்ய சுகத்தை பெருக்கட்டும்!
    பெண்களுக்கு 10 வயது முதல் 60 வயதிற்கு மேல் வரும் உடல்நலப்பிரச்சனைகளும் அதற்கான தீர்வை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல்நலனில் அக்கறை கொள்ளும் பெண்கள் தங்களது உடல்நலனில் அக்கறை கொள்வதில்லை. பெண்களின் 10 வயது முதல் 60 வயதிற்கு மேல் வரும் உடல்நலப்பிரச்சனைகளும் அதற்கான தீர்வையும் பார்க்கலாம்.

    10 வயது பிரச்னைகள் :

    கால்சியம் ​​பற்றாக்குறை
    இரும்புச்சத்துப் ​​பற்றாக்குறை
    நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு

    தீர்வு:

    தவறாமல் அனைத்து தடுப்பூசிகளும் போட வேண்டும்

    11 -20 வயது பிரச்னைகள்:


    பூப்பெய்துதல், மாதவிடாய் பிரச்னைகள்
    சு​கா​தாரமின்மை, ஆரோக்கியமற்ற பழக்கங்கள்

    தீர்வு:

    ஹெ.பி தடுப்பூசி,இரும்புச்சத்து, கால்சியம் அளவைப் பராமரிப்பது பாலியல் விழிப்புஉணர்வு பற்றிய அறிவைப் பெறுவது



    21 - 40 வயது பிரச்னைகள்:

    ரத்தசோகை
    ஃபோலிக் அமிலக் குறைபாடு
    பி.சி.ஓ.டி
    பருமன்

    தீர்வு:

    கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை
    ஊட்டச்சத்துக்களைப் பராமரிப்பது
    தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது

    41-60 வயது பிரச்னைகள்:

    மெனோபாஸ் பிரச்சனைகள்
    அதீத மாதவிடாய் ரத்தப்போக்கு, ஃபைப்ராய்ட்ஸ்
    எலும்பு அடர்த்திக் குறைவு,
    அதீத உடற்பருமனால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ்
    அதிக கொழுப்பால் ஏற்படும் இதயப் பிரச்சனைகள்
    சர்க்கரை நோய்



    தீர்வு:

    தொடர்ச்சியாகக் கால்சியத்தை எடுத்துக்கொள்வது
    கொழுப்பு மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள்
    கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை
    தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது

    60 வயதுக்கு மேல் பிரச்னைகள்:


    இதய நோய்கள்
    சர்க்கரை நோய்
    கண் நோய்க​ள்​
    எலும்பு அடர்​த்திக்​ குறைதலால் ஏற்படும் எலும்பு முறிவு

    தீர்வு:

    சமச்சீர் உணவு - குறைந்த கார்போஹைட்ரேட், குறைந்த கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புகள் உள்ள உணவுகள்.
    தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது.
    பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். என்ன பரிசோதனைகள் என்பதை பார்க்கலாம்.
    பெண்கள் தங்களது உடலின் மீது மட்டும் அக்கரை எடுத்துக்கொள்வதே இல்லை. ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்திய காலம் முதல் நிறைய ஹார்மோன் மாற்றங்களை சந்தித்து வருகின்றனர். பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்படி எடுத்துக் கொண்டால் நிறைய நோய்களை சுலபமாக தடுத்துவிடலாம்.

    இதனால் எதிர் காலத்தில் எந்த கடுமையான நோயும் ஏற்படாமல் நலமுடன் வாழலாம். அப்படி பெண்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

    பெண்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் ஒன்று தான் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது. அப்படி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மின் ஒலி இதய வரைவு எனும் யகோகார்டியோகிராம் செய்து உங்களது இருதய ஆரோக்கியத்தைப் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இருதய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

    வைட்டமின் டீ சத்து குறைவாக இருந்தால் பெண்களின் எலும்பு பலவீனமாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் இருக்கும். எனவே, எலும்பு அடர்த்தி பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.



    இன்றைய காலக்கட்டத்தில் பெண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த தைராய்டு. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஹைபர் தைராய்டு, மற்றொன்று ஹைபோ தைராய்டு. கை கால்களில் வலி, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஹைபோ மற்றும் ஹைபர் தைராய்டின் அறிகுறிகளாகும். எனவே, 30 வயதை கடந்த பெண்கள் அனைவரும் தைராய்டு பரிசோதனை செய்தே ஆக வேண்டும்.

    இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோய் பொதுவான நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக குண்டாக இருக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 30 வயதை அடைந்த பெண்கள் நிச்சயம் இந்த பரிசோதனையை மேற்கோள்வது அவசியம். இல்லையென்றால், இது கர்ப்பக் காலத்தில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.

    பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க மேமொகிராம் பரிசோதனை தான் உதவுகிறது. சாதாரணமாக இதனை 40 வயதிற்கு மேல் தான் பரிசோதிக்கக் கூறுவார்கள். ஆனால், அதற்கு முன்பே ஏதேனும் அறிகுறி தோன்றினால் 30 வயதிலேயே செய்துக் கொள்வதன் மூலம் ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம் அல்லவா...

    எல்லாப் பெண்களும் 30 வயதிற்கு மேல் நிச்சயம் இந்த பேப் ஸ்மியர் சோதனை செய்தே ஆக வேண்டும். இந்த பரிசோதனை செய்துக் கொள்வதால் கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம். பெண்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் ஒன்று தான் இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோய். எனவே, இதனை மறக்காமல் பரிசோதித்துப் பாருங்கள்

    பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான நோய்களில் ஒன்று தான் இந்த இரத்த சோகை. குறிப்பாக கர்ப்பக் காலத்தில் இந்த பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே, 30 வயதை அடைந்ததும் இரத்த சோகை உள்ளதா என்று ஒரு இரத்த பரிசோதனை செய்துப் பார்த்துவிடுங்கள்.
    இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம் நமக்கு தாம்பத்திய உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான்.
    35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.

    தாம்பத்திய உறவின்போது உச்சநிலை எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனில் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வயதிற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலையை உணர்வரில் பிரச்சினை ஏற்படும்.

    நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சினை என்றாலும் அவர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதேபோல் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவில்லை என்றாலும் பெண்கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.



    30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதேபோல 30 வயதைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்வது மட்டுமே. உண்மையில் 30வயதுக்கு மேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

    அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சினை வருவதுண்டு.

    எனவே ஆர்கசம் என்பது எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதான். அது, தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது நமது மனநிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தது. எனவே கிளைமேக்ஸ் பிரச்சனை உள்ள பெண்கள், உரிய தெரபிஸ்டுகளை அணுகி ஆலோசனை கேட்கலாம். ஆர்கசத்தை அடைவதற்கு பல மருத்துவ ரீதியான, மனோரீதியான வழிமுறைகள் உள்ளன. அதைக் கையாளலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.



    மேலும் 30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் கிளைமேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை.

    இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம். எனவே 30 வயதுக்குமேல் செக்ஸ்உணர்வும், உச்சநிலையும் அற்றுப் போய்விடும் என்ற கவலையும், கிளைமேக்ஸ் அதிகமாக இருக்கிறதே என்ற கவலையும் தேவையில்லை.

    இவை இயல்பானவைதான். அதற்கான செயல் முறைகளை கையாண்டு அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க அவர்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் மூளைக்கும், மனதிற்கும் முக்கிய பங்குண்டு. எனவே சரியான வழியில் உணர்வுகளை திசைதிருப்பினால் நம்மால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையை வாழ முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
    40 வயதுக்குள் மாதவிடாய் நின்று போனால் எலும்பு மற்றும் இதயம் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.
    சராசரியாக 47 வயதில்தான் மெனோபாஸ் ஏற்படும். சிலருக்கு 52 வயது வரையிலும் மாதவிடாய் தொடரலாம். அதையும் தாண்டிப் போகும்போது மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும். ஹார்மோன் பிரச்சனை, கர்ப்பப்பை, சினைப்பையில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏதேனும் இருக்கிறதா? என்று சோதித்துப் பார்க்க வேண்டும். மெனோபாஸ் ஏற்படும் வயது அதிகரிப்பது மட்டுமல்ல குறைவதும் கூட பிரச்சனைதான்.

    40 வயதுக்குள் மாதவிடாய் நின்று போனால் எலும்பு மற்றும் இதயம் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். மெனோபாஸ் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்கு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் ரத்தக்கசிவு அதிகமாதல், முறையற்ற ரத்தக்கசிவு ஆகியவற்றை சாதாரணமாக நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறானது. அப்படியான சூழலில் மருத்துவரை நாடுவது அவசியமாகும்.”

    இயற்கையை நாம் புரிந்து கொள்வதும், இயற்கையான வாழ்வியலுக்குத் திரும்புவதுமே எல்லாவற்றுக்குமான தீர்வு.



    32 வயதுக்குள் மணமுடித்ததால் எந்த சிக்கலும் இல்லாமல் கருக்கூடலும், பிரசவமும் இருந்தது. குறிப்பிட்ட வயதுக்கு முன்பே பருவமெய்தி விட்டாலும் தாய்மை அடைவதற்கான வயதைத் தள்ளிப்போடும்போது திடகாத்திரமான கருமுட்டை உற்பத்தியாகும் வயதைத் தாண்டி விடக்கூடும். இதனால் கருக்கூடலில் சிக்கல், மலடு ஆகியவை இன்றைக்கு சமூகத்தில் பெருகி வருகின்றன. 35 வயதிலேயே கூட மெனோபாஸ் அடையும் பெண்கள் ஏராளம்.

    இயற்கையாக இருக்கும் உடல்வாகுப்படி 30-40 வயதில்தான் பாலுறவில் உச்சபட்ச இன்பத்தைப் பெற முடியும். இப்படியான நிலையில் மெனோபாஸ் அடையும்போது அதை அனுபவிக்க முடியாமலேயே போய் விடலாம். மாதவிடாய் நின்று போகும்போது தொந்தரவு கொடுத்துதான் நிற்கும். 2 ஆண்டுகள் வரையிலும் கூட இப்பிரச்சனை நீடிக்கலாம். அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், முறையற்ற மாதவிடாய் ஆகியவை ஏற்படும்.

    இதன் காரணமாக ஏற்படும் வலி மற்றும் அவஸ்தையின் காரணமாக கருப்பை மற்றும் கர்ப்பப்பையை எடுத்துவிடக்கூறும் மருத்துவர்களும் இருக்கிறார்கள். மெனோபாஸ் பிரச்சனைக்காக கருப்பையை எடுத்து விடுவது முற்றிலும் தவறானது.  இதனால் கருப்பை கொடுக்கும் ஹார்மோன் இல்லாமல் போவதால் பல நோய்களுக்கு ஆட்பட நேரிடலாம். இயற்கையை புரிந்து கொண்டு அதனுடன் இயைந்து வாழ்வது மட்டுமே இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்க முடியும்.
    பெண்களுக்கு முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலிக்கான முக்கியமான காரணம்… சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். அவை என்னவென்று பார்க்கலாம்.
    பெண்களில் 30 வயதைக் கடந்த பலரும் முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலியால் அடிக்கடி சிரமப்படுவார்கள். வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். கழுத்தைத் திருப்பவே முடியாத அளவுக்கு வலி இருக்கும். அந்த வலி மற்ற பாகங்களுக்கும் பரவும்.

    இந்த வலிக்கான முக்கியமான காரணம்… சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கவும், ” ‘கிச்சன் எர்கனாமிக்ஸ்’ எனப்படும் சமையல் அறைப் பணிச் சூழல் சரியான முறையில் இருந்தாலே போதும் பிரச்சனைகள் ஓடோடிவிடும்.

    சமைக்கும் முறை சமையல் மேடை அருகே நின்று நாம் சமைக்கும்போது, சமையல் மேடையின் உயரம் நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். மேடை உயரமாக இருந்தால் கைகளை ஊன்றிக்கொண்டோ அல்லது சமையல் பாத்திரத்தை எக்கிப்பார்த்தோ சமைப்பதுபோல இருக்கக் கூடாது. இப்படிச் சமைத்தால், அடுப்பில் இருக்கும் பாத்திரங்களில் உள்ள உணவுப் பொருட்களைக் கிண்டும்போது, கை மூட்டுப்பகுதியைச் சிரமப்பட்டுத் தூக்க வேண்டி இருக்கும்.



    அதனால், அந்தப் பகுதியில் உள்ள தசைகளில் பிடிப்பு ஏற்படும். பிறகு, இது வலியாக மாறும். இதைத் தவிர்க்க கை மூட்டுப்பகுதி உயர்த்தப்படாமல், சாதாரண நிலையில் நின்று சமைக்கும் வகையில் சமையல் மேடையின் உயரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

    உயரம் குறைவாக இருப்பவர்கள் சரியான உயரத்தில் மேடை இருக்கும் வகையில் மரப்பலகைகளைப் பயன்படுத்தி அதன் மீது நின்று சமைக்கலாம். பாத்திரம் கழுவும் முறை பாத்திரம் கழுவப் பயன்படும் ‘சிங்க்’ உயரம் உங்களது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். அதாவது, குனிந்தோ அல்லது எட்டிப் பார்த்தோ பாத்திரங்களைக் கழுவ வேண்டாத நிலையில் இருக்க வேண்டும். இதனால், முதுகு, கை மற்றும் கழுத்து வலி வராமல் தடுக்கலாம்.

    கிரைண்டர் பயன்படுத்தும் முறை கிரைண்டரில் மாவு அரைக்கும்போது நின்ற நிலையில்தான் கிரைண்டரைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு கிரைண்டரைச் சற்று உயரத்தில் வைத்துகொள்ள வேண்டும். அதை விடுத்து கிரைண்டரைத் தரையில் வைத்துவிட்டு அடிக்கடி குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யும்போது முதுகுப் பகுதிகளில் இருக்கும் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு, முதுகு வலி உண்டாகும். பொருட்களை எடுக்கும் முறை சமைக்கும்போதே திடீரென பின்னால் இருக்கும் ஒரு பொருளை எடுக்க வேண்டி இருந்தால், கைகளை மட்டும் பின்னே நீட்டி அந்தப் பொருளை எடுப்பது முற்றிலும் தவறு.



    அப்போது இடுப்புப் பகுதித் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு இடுப்பு வலி வரும். அதாவது, கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் இருக்கும் பொருட்களை மட்டுமே உடலைத் திருப்பாமல் கைகளை மாத்திரம் நீட்டி எடுக்கலாம். பார்வை தூரத்துக்கு அப்பால் இருக்கும் பொருட்களை எடுக்க, நாம் முழுவதுமாக அந்தப் பொருளை நோக்கித் திரும்பியே ஆக வேண்டும். அதுதான் நல்லது. இதேபோல் பொருட்கள் இருக்கும் அலமாரியும் நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். உயரமான அலமாரியில் இருந்து பொருட்களை அண்ணாந்து பார்த்து எடுக்கும்போது கழுத்து வலியும் கை வலியும் ஏற்படும்.

    இதைத் தவிர்க்க அலமாரியைச் சரியான உயரத்தில் அமைக்க வேண்டும். இல்லை எனில், ஒரு அகலமான மரப்பலகை வைத்துக்கொண்டு அதன் மீது ஏறி நின்று, பொருட்களை முன்கூட்டியே கீழே எடுத்துவைத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும். காய்கறிகளை வெட்டும் முறை காய்கறிகளை வெட்டும்போது, நின்றுகொண்டு வெட்டுவதுதான் உத்தமம். அப்போதுதான் நம் உடலில் இருக்கும் மொத்த சக்தியும் முறையாகப் பயன்படுத்திக் காய்கறிகளை வெட்ட முடியும். உடலில் தேவை இல்லாமல் வலி ஏற்படாது. டைனிங் டேபிளில் அமர்ந்துகொண்டு வெட்டினால், கைகளில் இருக்கும் சக்தியை மட்டுமே பயன்படுத்தி வெட்ட முடியும். இதனால் கைகளில் வலி ஏற்படும்.



    உடல் வலியைக் குறைக்க…

    * வாஷிங் மெஷின் பயன்படுத்தும்போது, மேல்புறமாகத் துணிகளைப் போடும் வகையில் இருக்கும் மெஷின்களைப் பயன்படுத்துவது நல்லது.

    * சிலிண்டர்களை உருட்டியவாறே இடம்மாற்றக் கூடாது. இதற்கென இருக்கும் பிரத்யேக நகர்த்திகளைப்(cylinder rollers) பயன்படுத்தித்தான் இடம் மாற்ற வேண்டும்.

    * கேஸ் ரெகுலேட்டரைத் திருப்ப, குனிந்தவாறே முயற்சிக்க வேண்டாம். சற்றே கால்களை மடக்கிய நிலையில் ரெகுலேட்டரைத் திருப்புவது நல்லது.

    * காய்கறிகளை வெட்டப் பயன்படுத்தும் கத்தியின் நீளம் அதிகமாகவும் கைப்பிடி மெல்லியதாகவும் இருத்தல் வேண்டும்.

    * சமைக்கப் பயன்படுத்தும் கரண்டிகள் நீளமாக இருத்தல் வேண்டும். அடுப்பில் வைக்கும் பாத்திரங்களும் சற்று அகலமானதாக இருக்க வேண்டும். இதனால் கை வலி இல்லாமல் கிண்டுவது, வறுப்பது போன்ற சமையல் வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். கேஸ் விரயத்தையும் தடுக்கலாம்.
    ஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயது எதுவோ அதுவே அவளின் திருமண வயது. 23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது.
    ஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயது எதுவோ அதுவே அவளின் திருமண வயது. 23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது. மீறிப்போனால் 30 வயது வரை கூட இருக்கலாம். கூடுமான வரைக்கும் 30 வயதுக்குள் தாய்மை அடைந்து விட வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

    இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். படித்து முடித்து, ஒரு பணியில் அமர்ந்து அப்பணியில் ஒரு நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் என்று எண்ணுவதால் 35 வயதுக்குப் பிறகு திருமணம் புரியும் பெண்கள் ஏராளம்.



    30 வயதைத் தாண்டி திருமணம் செய்யும்போது கருமுட்டை உருவாகத் தாமதம், கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், எடை குறைவான குழந்தை என்பது போன்ற பிரச்னைகள் வரலாம். இது போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். திருமணத்துக்கு முன்பும், கருத்தரிப்பதற்கு முன்பும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானதாகும்.

    மருத்துவரின் வழிகாட்டுதலோடு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கருமுட்டையை முன்பே எடுத்து ஃப்ரீஸ் செய்து வைப்பதன் மூலம் எந்த வயதிலும் குழந்தை பெறலாம். ஆனால் அது சோதனைக்குழாய் மூலம்தான் சாத்தியப்படும். இதில் நூறு சதவிகிதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மை அடைவது மட்டுமே சரியானது.
    ஆண்களைப் போலவே பெண்களும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
    இன்றைய அவசர யுகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய ஆண்கள் பார்க்கும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்கின்றனர்.

    எனவே, ஆண்களைப் போலவே பெண்களும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

    இந்நிலையில், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளும் பெண்கள் மனஅழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம் என ‘பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் ஓபன்’ நடத்திய ஆய்வில் தெரியவந்திருக் கிறது.



    அதன்படி, ஒரு நாளைக்கு ஏழு முறை பழம், காய்கறிகள் சாப்பிடுபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் வரை குறையும் என கூறப்படுகிறது. இந்த ஆய்வு 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 60 ஆயிரம் பெண்களுக்கு நடத்தப்பட்டது.

    தினசரி ஐந்து முதல் ஏழு முறை வரை பழம், காய்கறி சாப்பிடும் பெண்களுக்கு மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதிலும் குறிப்பாக, பழங்களும் காய்கறிகளும் ஆண்களைவிட பெண்களுக்கு நல்ல பலன் கொடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    ×