search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தொழிலில் வெற்றி பெற பேச்சுத்திறமையின் முக்கியத்துவம்
    X

    தொழிலில் வெற்றி பெற பேச்சுத்திறமையின் முக்கியத்துவம்

    • தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.
    • ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும்.

    பேச்சுத்திறமை பெற்றவர்கள் மட்டுமே இன்று உள்ள சூழ்நிலையில் தொழிலை வெற்றிகரமாக நடத்தி செல்லமுடியும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விவரமானவர்களாக இருக்கின்றனர். எனவே, பேச்சுத்திறமை முக்கியத்துவம் பெறுகிறது. பேசத்தெரிந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கமுடியும். பொதுவாக பெரும்பாலான தொழில்முனைவோர் வாடிக்கையாளர்களிடம் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. அதே போல் வாடிக்கையாளர்களும் யாருடைய பேச்சையும் கேட்க அதிக நேரம் செலவிட தயாராக இல்லை. எனவே சாதுர்யமான பேச்சின் மூலமே பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய முடியும்.

    அண்மையில் நடத்திய ஒரு ஆய்வில் சொல்லக்கூடிய கருத்தில் 7 சதவீதம் மட்டுமே நேரடியாக கேட்பவர்களுக்கு சென்றடைவதாகவும், 55 சதவீதம் சொல்பவரின் அங்க அசைவுகளின் மூலமாகவும், மீதமுள்ள 38 சதவீதம் கருத்து சொல்பவரின் பேச்சு திறமைக்கு ஏற்றவாறு சென்றடைவதாகவும் தெரிய வருகிறது.

    சரியான முறையில் திட்டமிட்டு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். புள்ளி விவரங்கள், மற்றவர்களின் அனுபவங்கள், தாம் பெற்ற அனுபவங்கள் இவைகளை கலந்து பேசும்போது பேச்சின் சுவை அதிகரிக்கும். கேட்பவர்களும் ஆர்வமாக கேட்பார்கள். தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.

    ஒரே நேரத்தில் இரண்டு ஆட்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். சில ஆட்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே எதிரில் உள்ளவர்களிடம் பேசுவார். தொழிலையும் கவனிப்பார். இம்மாதிரியான செயல்முறைகளை தவிர்க்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒருவரிடம் தான் பேசவேண்டும். ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும். தொடர்ந்து பேசிக்கொண்டே இல்லாமல் நாம் சொல்வதற்கு எந்த அளவிற்கு பதில் உள்ளது அல்லது நாம் சொல்வதில் கேட்பவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து பேசவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் வாடிக்கையாளர்களை மட்டம் தட்டி பேசக்கூடாது. பேச்சில் கோபமூட்டும் சொற்களையோ, தன்மான உணர்வுகளை தூண்டும் சொற்களையோ பயன்படுத்தக்கூடாது.

    பேச்சில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ, அந்த அளவுக்கு பேசுபவர்களின் மதிப்பு உயரும். கைகளை கட்டிக்கொண்டோ அல்லது கைகளை பிசைந்து கொண்டோ பேசக்கூடாது. வாடிக்கையாளர்கள் பெயர் தெரிந்தால் பெயரை குறிப்பிட்டு பேசுவதில் தவறில்லை. முடிந்த அளவுக்கு வாடிக்கையாளர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    Next Story
    ×