search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    இல்லத்தரசிகளே குளியலறையில் படிந்திருக்கும் உப்புக் கறையை எளிதில் நீக்கலாம்...
    X

    இல்லத்தரசிகளே குளியலறையில் படிந்திருக்கும் உப்புக் கறையை எளிதில் நீக்கலாம்...

    • கறைகளை நீக்குவதற்கு ரசாயனங்களை பலரும் பயன்படுத்துவார்கள்.
    • ரசாயனங்கள், தோல் மற்றும் சுவாசப் பிரச்சினையை ஏற்படுத்தும்.

    இல்லத்தரசிகள் வீட்டை சுத்தப்படுத்தும் வேலைகளில் சிரமமானது, குளியல் மற்றும் கழிவறைகளில் படிந்திருக்கும் உப்புக் கறையை நீக்குவதுதான். சுவர் மற்றும் தரைப் பகுதிகளில் படிந்திருக்கும் கருப்பு நிற கறைகள், நமக்கு மட்டுமின்றி வீட்டுக்கு வரும் உறவினர்களையும் முகம் சுளிக்க வைக்கும்.

    பெண்கள் இந்தக் கறைகளை நீக்குவதற்கு ரசாயனங்களை பலரும் பயன்படுத்துவார்கள். ஆனால் அவை நாளடைவில் தரைக்கும், சுவருக்கும் பாதிப்பை உண்டாக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் இந்த ரசாயனங்களை பயன்படுத்துவதால் பெண்கள் (அனைவருக்கும்) தோல் மற்றும் சுவாசப் பிரச்சினையை ஏற்படுத்தும். ஆகையால், இல்லத்தரசிகளே இயற்கையான பொருட்களை உபயோகித்து உப்புக் கறைகளை நீக்கும் சில வழிகளை தெரிந்துகொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    சீயக்காய் தூள் - 3 தேக்கரண்டி

    புளித்த தயிர் அல்லது புளித்த மாவு - 4 தேக்கரண்டி

    ஷாம்பு - 2 தேக்கரண்டி

    ஒரு கிண்ணத்தில் சீயக்காய் தூள், புளித்த தயிர் அல்லது மாவு, ஷாம்பு மூன்றையும் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கவும். இதற்கு எந்த வகையான சீயக்காய்த்தூள் மற்றும் ஷாம்புவைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    இந்தக் கரைசலை கறை படிந்துள்ள இடத்தில் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். பின்பு பிரஷ் அல்லது தேங்காய் நாரைக் கொண்டு அந்த இடத்தில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். இதன்மூலம் உப்புக்கறை முழுமையாக நீங்கும். டைல்ஸ், மார்பிள் என எல்லா வகையான தரையிலும் இதை பயன்படுத்தலாம்.

    இந்த கரைசலைக் கொண்டு சமையலறை சிங்க் மற்றும் மேடையின் மீது படிந்திருக்கும் அழுக்கையும் அகற்றலாம். இயற்கையான பொருட்களை உபயோகிப்பதால் உடல் நலனுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.

    இதனால் உங்கள் கைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இல்லத்தரசிகளின் நேரமும் மிச்சமாகும்.

    Next Story
    ×