search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தை பேறுக்கு சிகிச்சை அளிக்கும் கருத்தரித்தல் மையம்
    X

    குழந்தை பேறுக்கு சிகிச்சை அளிக்கும் கருத்தரித்தல் மையம்

    • குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது.
    • குழந்தையின்மைக்கு 40 சதவீத பெண்களும் காரணம்.

    குழந்தை பேறுக்கு லிஸ்டர் குழந்தையின்மை கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்குள்ள மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ஆனந்தி அரவிந்த் ஜெர்மனியில் சிறப்பு பயிற்சி பெற்றவர். அவர் தலைமையிலான மருத்துவக்குழு சுமார் 7 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். டாக்டர் ஆனந்தி அரவிந்த் கூறியதாவது:-

    திருமணமான தம்பதிகளிடையே நாளுக்கு நாள் குழந்தையின்மை தன்மை அதிகரித்து வருகிறது. பொதுவாக திருமணமான தம்பதிகளில் சுமார் 10-15 சதவீதம் பேருக்கு குழந்தையின்மை ஏற்படுகிறது. அதற்கு 30 முதல் 40 சதவீதம் வரை ஆண்கள் காரணம் ஆகின்றனர். அவர்களுக்கு முக்கிய காரணம் உயிரணுக்களின் வேகமாக நகரும் தன்மை குறைவு (Asthenozoospermia) எண்ணிக்கை குறைபாடு ஆகும். இவற்றிற்கு மது பழக்கம், துரிதஸ்கலிதம், புகைப்பிடித்தல், போதை வஸ்துக்களை உபயோகித்தல், அம்மை, டி.பி., வலிப்புநோய், தைராய்டு நோய், சர்க்கரை நோய், சிறுநீரில் கிருமி தொற்று, கிட்னி கல் பிரச்சினை உள்ளிட்டவை முக்கிய காரணங்கள் ஆகும்.

    இவை தவிர கடுமையான தட்ப வெப்ப சூழ்நிலையில் வேலை செய்தல். பல மணி நேரம் கணினி வேலை, சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் பயணம் செய்வது போன்றவைகளும் விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் செயல் திறனை பாதிக்கின்றது. Antis perm Antibody எனப்படும் தன் உயிரணுக்களுக்கான எதிர் உயிரி உடம்பிலேயே உற்பத்தி ஆகிய விந்தணுக்களை கொன்று விடுவதும் ஒரு காரணம் ஆகும்.

    குழந்தையின்மைக்கு 40 சதவீத பெண்களும் காரணம் ஆகின்றனர். கருமுட்டை நீர்கட்டிகள், Endometriosis கருகுழாய் டியூப் அடைப்பு மற்றும் கர்ப்பப்பையில் அடைப்பு, கட்டிகள் Uterine Anamolies. Adenomyosi போன்றவை PID எனப்படும் கர்ப்பப்பைவாய் கிருமி தொற்று குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாகின்றன. அதிக எடை, மாத விடாய் ஒழுங்கற்ற தன்மையில் வருவது போன்றவையும் குழந்தையின்மைக்கு காரணம் ஆகும்.

    20 சதவீதம் unexplained infertility என காரணம் கண்டறிய முடியாத பிரச்சினைகளால் குழந்தை கிடைக்காமல் போகின்றது.

    மேற்கூறிய காரணங்களை தம்பதிகளிடையே பேசி, ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், follicular study. HSG (டியுப் பரிசோதனை) Laparoscopy and hysteroscopy (நுண்துளை கர்ப்பப்பை பரிசோதனை) மூலம் பரிசோதித்து சிகிச்சை செய்ய வேண்டும்.

    இன்றைய நவீன தொழில்நுட்பம் மூலம் 90 சதவீத குழந்தையில்லா பெண்களை கருத்தரிக்க வைக்க முடியும். மாத்திரைகள், ஊசிகள், IUI மூலம் குழந்தை கிடைக்காமல் போனால் IVF (டெஸ்ட் டியூப்) அல்லது ஜெர்மன் தொழில் நுட்பத்தில் ICSI எனப்படும் சிகிச்சை மூலம் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது. உயிரணுக்கள் எண்ணிக்கை 1 மில்லியன் அணுக்கள் இருந்தாலே இந்த சிகிச்சை மூலம் அணுக்களை கரு முட்டைக்குள் செலுத்தி கருத்தரிக்க செய்ய முடியும்.

    லிஸ்டர் குழந்தையின்மை கருத்தரித்தல் மையம் குமரி மாவட்டத்தில் குழந்தை பேறுக்கு தீர்வு காணும் மையமாக செயல்படுகிறது. தொடர்புக்கு செல்போன் எண்கள்: 73730 05563, 73730 05513.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×