search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    செயற்கைக்கோள் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
    X

    இஸ்ரோ தலைவர் சோம்நாத்

    செயற்கைக்கோள் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

    • பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போல் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
    • இன்று காலை 9.18 மணிக்கு எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

    எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கியது.

    அதன்படி, இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த எஸ்எஸ்எல்வி- டி1 ராக்கெட்டில் இஓஎஸ் 02, ஆசாதி-சாட் என்கிற 2 எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் வகையில் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    120 டன் எடை கொண்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் என்பது இதன் சிறப்பம்சம்.

    பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போல் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

    இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை. இ.ஓ.எஸ். 2 மற்றும் ஆசாதி-சாட் செயற்கைக்கோள்களின் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோளாரை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

    Next Story
    ×