search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    இந்த வாழ்க்கை முறையை பின்பற்றினால் முகப்பரு வராமல் தவிர்க்கலாம்....
    X

    இந்த வாழ்க்கை முறையை பின்பற்றினால் முகப்பரு வராமல் தவிர்க்கலாம்....

    • முகப்பரு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
    • முகப்பரு வந்தால் அதை கிள்ள கூடாது.

    உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் இளம் வயதினருக்கு அடிக்கடி முகத்தில் பருக்கள் தோன்றும். இதற்கு அதிகமாக நீரை குடிப்பது, சீரான உணவு பழக்கம் போன்றவற்றால் குணப்படுத்தலாம். மேலும் ஒரு பரு வந்தாலும் அதை கிள்ளி விட்டால் அது மேலும் மோசமாகி அதிக பருக்கள் தோன்றும். அதனால் முகப்பரு வந்தால் அதை கிள்ள கூடாது. சிலருக்கு மாத விடாய் காலத்தில் பரு வந்து, அது முடிந்ததும் மறைந்து விடும். ஆனால் சிலருக்கு அந்த தழும்புகள் முகத்தில் தோன்ற காரணம் அதை கிள்ளி விடுவதுதான். தவறான உணவு பழக்கவழக்கங்கள், அதிகப்படியான மன அழுத்தம், மாசுபட்ட சூழலில் வாழ்வது, மற்றும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் என முகப்பரு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

    அனைவரும் மிக வேகமாக இயங்கி வரும் இந்த வாழ்க்கை முறையில் முகப்பரு வராமல் பாதுகாத்துக் கொள்ள அதுக்கென தனி நேரம் ஒதுக்கி நம் சருமத்தை பராமரிப்பது அனைவருக்கும் முடியாத செயல். இதனால் முகப்பரு ஏற்பட்டு மறைந்தாலும் கூட அந்த தழும்பு அப்படியே இருக்கும். இது போன்ற காரணங்களினால் முகப்பரு வராமல் தடுப்பது சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.

    1. ஒருவருக்கு அடிக்கடி நெற்றியில் பரு வந்து போகிறது என்றால் அவருக்கு ஜீரண சக்தி சீரில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

    2. உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் சரியாக வெளியேற்ற படாததாலும், நெற்றியில் முகப்பரு அடிக்கடி வரும் வாய்ப்புள்ளது.

    3. பருக்கள் வராமல் தடுக்க நீங்கள் சாப்பிடக்கூடிய உணவு பண்டங்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.

    4. முகத்தில் பருக்கள் வராமல் பாதுகாக்க நிறைய தண்ணீரை குடிப்பது அவசியம். குறிப்பாக நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் பழங்களை உட்கொள்ளலாம்.

    5. அடிக்கடி ஆரஞ்சு பழம், மாதுளை பழம், சாத்துக்குடி, போன்ற பழங்களை சாப்பிடுவோருக்கு பருக்கள் வராது.

    6. பருக்கள் வராமலிருக்க காய்கறிகளை அதிகமாக உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர்பானங்களை நீங்கள் குடிக்க கூடாது.

    நம்முடைய கைகளில் பல வித கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் தோற்றி இருக்க கூடும். அதே கையோடு நம் முகத்தை தொடும்போது அதில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் முகத்தில் பரவி முகப்பருவை உண்டாக்குகின்றன.

    எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் அதிக அளவு எண்ணெய் மற்றும் சீபம் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் முகப்பருக்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

    Next Story
    ×