search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    சருமம் கருமை அடைவதை தடுத்து பொலிவாக்கும் வெந்தய பேஸ் பேக்
    X

    சருமம் கருமை அடைவதை தடுத்து பொலிவாக்கும் வெந்தய பேஸ் பேக்

    • பருக்கள் வருவது தடுக்கப்படும்.
    • பருக்கள் வருவது தடுக்கப்படும்.

    வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும்.

    இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்து வரலாம்.

    வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ் பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.

    வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.

    வெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். பருக்கள் வருவது தடுக்கப்படும்.

    வெயிலில் சருமத்தின் நிறம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம் கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

    Next Story
    ×