search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    கைப்பைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
    X
    கைப்பைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

    கைப்பைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

    வெளியிடத்துக்கு செல்லும் போது அத்தியாவசிய நண்பராக உடன் வரும் கைப்பையை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் இதோ...
    வெளியில் கிளம்ப ஆயத்தம் ஆகும் போது உடனடியாக கவனத்திற்கு வரக்கூடியது கைப்பை.. பலரும் மறதியாக அதை ஓரிடத்தில் வைத்துவிட்டு வீடு முமுவதும் தேடிக்கொண்டிருப்பதும் உண்டு. ரொக்கப்பணம், அடையாள அட்டைகள், ஸ்நாக்ஸ் வகைகள், அவசர மருந்துகள், அழகு சாதனப்பொருட்கள். இப்போது முக கவசம், சானிடைசர் என்று விதவிதமான பொருட்கள் கைப்பையில் அடங்கி இருக்கும். வெளியிடத்துக்கு செல்லும் போது அத்தியாவசிய நண்பராக உடன் வரும் கைப்பையை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் இதோ...

    * ஹேண்ட்பேக்கின் கைப்பிடியை முதலில் கவனியுங்கள். உறுதியான கைப்பிடி அவசியம். உங்கள் வசதிக்கேற்ற நீளத்தில் கைப்பிடி இருக்கிறதா என சரிபார்த்து கொள்ளுங்கள்.

    * தையல்கள் மற்றும் இணைப்புகளை சோதித்து பாருங்கள்.

    * உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிறதா என்பதை கவனியுங்கள். அதில் சமரசம் செய்ய வேண்டாம்.

    * வடிவம, அளவு, அழகு ஆகியவை கைப்பைக்கு அவசியம். தேவைக்கேற்ற அளவில் விரும்பும் அழகில் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். உள்ளே உங்களுக்கு தேவையான அளவுக்கு இடவசதி மற்றும் தரமான ஜிப்கள் உள்ளனவா என்தையும் கவனித்து வாங்குங்கள்.

    *தரம் மற்றும் உறுதிக்கு சான்றிதழ் வாரண்டி கியாரண்டி ஆகியவை தயாரிப்பு நிறுவத்தால் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொண்டு மறக்காமல் அதை கேட்டு வாங்குங்கள்.

    * விலை மலிவு என்று வாங்கி விட்டு ஒரு சில மாதங்களிலேயே அதனை பரணில் போட்டு விடுவதை தவிர்க்க விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரமான தயாரிப்புகளை தேர்ந்தெடுங்கள்.

    * புதிய மாடல் அல்லது புதுமையான தயாரிப்பு என்ற நிலையில் உள்ள கைப்பைகளை வாங்க விரும்புபவர்கள் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். முறையான கால இடைவெளியில் அவற்றை பராமரித்து வர வேண்டும்.

    * அலுவலகம் செல்பவர்கள் லேப்டாப் பேக், லஞ்ச் பேக் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பைகளை எடுத்து செல்லும் அவசியம் இல்லாமல் ஒரே கைப்பையில் அனைத்தும் வைப்பதற்கான தயாரிப்புகளும் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் மடிக்கணினி வைப்பதற்கான இடம், நோட்டுகளுக்கான இடம், சாவிகளை மாட்டும் பகுதி, ஸ்மார்ட் போன் வைக்கும் இடம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வைப்பதற்கான இடம் ஆகியவை தனித்தனியாக இருக்கும். அத்துடன் தண்ணீர் பாட்டில் அழகு சாதனப்பொருட்கள், கண் கண்ணாடிகள் ஆகிய அனைத்தையும் அந்த கைப்பையில் எடுத்து செல்ல முடியும்.‘
    Next Story
    ×