என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல் (Health)
X
பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை பிரச்சனையும் தீர்வும்
Byமாலை மலர்1 Sept 2016 8:40 AM IST (Updated: 1 Sept 2016 8:40 AM IST)
பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை தலை பிரச்சனைக்கான காரணத்தையும் தீர்வையும் கீழே பார்க்கலாம்.
பொதுவாகப் பெண்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு முடி பிரச்சனைகளில் ஒன்று தான் பெண்களின் தலை வழுக்கைப் பிரச்சனை
* பரம்பரை அல்லது பெண்களின் குடும்ப வழி வந்த வழுக்கை
* வயது முதிர்தல்
* அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள்
* மாதவிடாய் நிறுத்தம்
இதுபோன்ற வழுக்கைப் பிரச்சனைக்கு ஒரு நல்ல சரும சிகிச்சை நிபுணரை அணுகி இதற்கான காரணங்களை ஆராய்ந்து ஆலோசனைப் பெற்று அதற்குத் தகுந்த சிகிச்சையை பெற வேண்டும். இந்தத் துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர் அல்லது ஆலோசகரைப் பார்ப்பதும் சரியாக இருக்கும்.
இவ்வகை வழுக்கை ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரிடமும் இருந்தாலும், வழுக்கைத் துவங்கும் இடம் இருவருக்கும் வேறுபடும். ஆண்களுக்கு உச்சந்தலையிலும், பெண்களுக்கு வகிடு எடுக்கும் இடத்திலும் வழுக்கை விழத் தொடங்கும். இது தொடர்ந்த பரவலான முடி உதிர்விற்கும் வழிவகுக்கும். இந்த முடி உதிர்வினால் நீங்கள் மன நெருக்கடிகளுக்கும் உள்ளாக நேரிடலாம்.
சிகிச்சைகள்
1. முடியைப் பிரிக்கும் பெர்ம் எனப்படும் சிகிச்சை, லோஷன்கள் மற்றும் பிற அழகுப் பொருட்களை உபயோகித்து உங்கள் முடியை அடர்த்தியாகவும் பரவலாகவும் காட்டலாம்.
2. இதற்கென பிரத்தியேகமாக உள்ள தேர்ச்சி பெற்ற நிபுணர்களிடம் ஆலோசனையை தொடர்ந்து பெற்று வழுக்கையை தவிர்க்க சிகிச்சை செய்து கொள்ளலாம்.
3. முடிகளை சேர்த்தல் முறை மூலம் அதிகப்படுத்த முயற்சி செய்யலாம். இது முடி பரவலை இயற்கையாகக் காட்டும். நீங்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நிபுணரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுங்கள்.
4. முடி மாற்று அறுவை சிகிச்சை வழுக்கைக்கு வேறொரு வழியாகும்.
புதிய நவீன சிகிச்சைகள் மிகவும் மேம்பட்டவைகளாக இருப்பதுடன் நல்ல பலன் தருவதாக உள்ளன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story
×