என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    முகப்பரு மறைய எளிய வழிமுறைகள்
    X

    முகப்பரு மறைய எளிய வழிமுறைகள்

    உணவு முறை மாறுபாட்டாலும், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தாலும் முகப்பரு உண்டாகிறது.
    முகப்பரு இக்கால தலைமுறையினருக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குகிறது. உணவு முறை மாறுபாட்டாலும், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தாலும் முகப்பரு உண்டாகிறது. முகப்பரு தொல்லையால் அவதிப்படுபவர்கள்.

    வெந்தயக் கீரை - 1 கைப்பிடி
    துளசி இலை - சிறிதளவு
    கொத்துமல்லி இலை - சிறிதளவு

    எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும்.

    கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
    வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.

    வெள்ளரி - 2 துண்டு
    தக்காளி - 2 துண்டு
    கேரட் - 2 துண்டு

    எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறியபின் கழுவினால் பருக்கள் மறையும். ஆண்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.
    Next Story
    ×