என் மலர்
லைஃப்ஸ்டைல்

X
மாம்பழ பாயாசம் செய்வது எப்படி
By
மாலை மலர்24 May 2018 11:35 AM IST (Updated: 24 May 2018 11:35 AM IST)

இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான பல்வேறு உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று,
பால் - ஒரு லிட்டர்,
சர்க்கரை - தேவையான அளவு,
பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் - தலா 3 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை :
மாம்பழத்தின் தோல், கொட்டைகளை நீக்கி விட்டு துண்டுகளாக்கி மிக்சியில் கூழாக அரைத்தெடுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறு தீயில் வைத்து காய்ச்சவும்.
பால் பாதியாக சுண்டிய பிறகு ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
பாலை நன்கு ஆற விடவும்.
கடைசியாக அதனுடன் அரைத்த மாம்பழ கூழ் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிரவைத்து பரிமாறலாம்.
சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story
×
X