என் மலர்
ஆரோக்கியம்

ஓணம் ஸ்பெஷல்: பாசிப்பருப்பு பாயாசம்
கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். ஓணம் தினமான இன்று ஸ்பெஷல் சமையல் செய்முறைகளை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - 200 கிராம்
அச்சு வெல்லம் - 150 கிராம்
பால் - 200 மிலி
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் - 1 கப்
நெய் - 4 ஸ்பூன்
செய்முறை :
* வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்த பின் குக்கரில் போட்டு குழைய வேக விடவும்.
* வெல்லத்தை தூள் செய்து, ஒரு கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும்.
* அதனுடன் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* நெய்யில் முந்திரி, உலர் திராட்சை எல்லாவற்றையும் வறுத்து நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயசத்தில் கொட்டவும்.
* ஏலக்காயை தூளாக்கி அதனோடு சேர்க்கவும்.
* கடைசியில் தேங்காய் பூவை லேசாக நெய்யில் வறுத்து சேர்த்த பின்னர் பாயசத்தை இறக்கவும்.
* சுவையான சத்தான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story