என் மலர்
ஆரோக்கியம்

மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா
பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த போண்டாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 கப்,
சற்று புளித்த தயிர் - அரை கப்,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - ருசிக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் தயிர், உப்பு, ஆப்ப சோடா, பெருங்காயம், கறிவேப்பிலை சேருங்கள்.
* தேவையான தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரையுங்கள் (இட்லிமாவு பதம்).
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போடுங்கள்.
* சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.
* சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா ரெடி
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story